விஷாலின் நிச்சயதார்த்தம் ரத்து?

 விஷாலின்  நிச்சயதார்த்தம் ரத்து?

Vishal marriage dropped due to unknown reason – விஷாலின் திருமணம் ரத்து

Vishal marriage dropped due to unknown reason - விஷாலின்  திருமணம் ரத்து
Vishal marriage dropped due to unknown reason – விஷாலின் திருமணம் ரத்து

நடிகர் விஷால் நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர்

என்று அடுக்கடுக்காக திரையுலகை, தனது சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டவர். தனது நேர்த்தியான நடிப்பாலும், அதிரடி ஆக்ஷன் படங்களிலும், தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி, மினிமம் பட்ஜெட் கியாரண்டி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

செல்லமே படத்தில் முதன்முதலாக அறிமுகமானபோது, இவரைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. பிரபல தெலுங்கு தயாரிப்பாளரின் மகனாக இருந்தும் கூட, சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து, தன்னை தமிழ்த்திரையுலகில் நிலைநிறுத்திக் கொண்டார். இவரது படங்களுக்கு, தெலுங்கிலும் மார்க்கெட் உள்ளது என்பதால், இவரை வைத்து நம்பி பணம் போட தயாரானார்கள் தயாரிப்பாளர்கள். இதனால் மளமளவென்று 10 ஆண்டுகளில், முன்னணி நடிகர் இடத்தை பிடித்துக்கொண்டார். பிரபல இயக்குனர் பாலா அவர்களின் அவன் இவன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம், தான் சிறந்த நடிகர் என்பதையும் நிலைநாட்டினார். அந்தப்படத்தில் திருடனாக வரும் இவர் விஷால், தனது நகைச்சுவை கலந்த நடிப்பினால், எல்லோரையும் ரசிக்க வைத்தார்.

அதன் பிறகு தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை கொடுத்த விஷால், துப்பறிவாளன் படம் மிகப்பெரிய ஈடு கொடுத்தது. இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், நல்ல வசூலையும், தரமான படம் என்ற பெயரையும் பெற்றுக் கொடுத்தது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முன்வந்தார் விஷால். மிஸ்கின் ஆரம்பத்தில் பட்ஜெட் ஒத்துக்கொள்ளாது, பட்ஜெட்டை நீ தாங்க மாட்டாய் என்று வெளிப்படையாகக் கூற, பரவாயில்லை நான் தயாரிக்கிறேன் என்று சொல்லி விஷால் முன்வர படப்பிடிப்பு நடுந்து கொண்டிருந்தபோதே, முட்டலும் மோதலும் ஆக, மிஷ்கினுடன் மோதிக்கொண்டு பாதியில் நின்று போனது படப்பிடிப்பு.

Vishal marriage dropped due to unknown reason - விஷாலின்  திருமணம் ரத்து
Vishal marriage dropped due to unknown reason – விஷாலின் திருமணம் ரத்து

இதனால் இடையில் இயக்குனர் அவதாரம் எடுத்த விஷால், ஆப்பை பார்த்துக் கொண்டிருக்கிறார். முதல் போஸ்டர் வெளியிட்ட போது அதில் மிஷ்கின் பெயரைப் போடாமல் வெளியிட்டார். இதனால் கடுப்பான மிஸ்கின், பொது மேடையிலேயே விஷாலை தாறுமாறாக, தரக்குறைவாக பேச, இதற்கு ஏதும் பதில் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார் விஷால். தமிழ் சினிமாவின் மிக முக்கிய பொறுப்புகளில் இருக்கும் விஷால், இப்படி பொறுப்பாக நடந்து கொள்வது வரவேற்கக் கூடியதுதான். இந்த சூழ்நிலையில் அவருக்கு மேலும் மேலும் சிக்கலை உருவாக்குவதற்கு சில விஷயங்கள் நடந்து வருகின்றன.

அவருக்கு ஏற்கனவே நிச்சயமான திருமணம் ரத்து செய்யப்படுவதாக ஒரு அறிவிப்பு வெளிவர, அதிர்ச்சி அடைந்தது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும், கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள், நடிகர் விஷாலின் திருமணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் ரெட்டி மகள் அனுஷா, நடிகர் விஷாலுக்கும், அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஜோடிகளின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக வலை தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது திருமணம் நின்று போனதற்கான சரியான காரணங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், அனுஷா அவருடைய சமூக வலைத்தள கணக்கில் இருந்து, நடிகர் விஷாலுடன் இணைந்து எடுத்திருந்த அனைத்து புகைப் படங்களையும் அழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal marriage dropped due to unknown reason - விஷாலின்  திருமணம் ரத்து
Vishal marriage dropped due to unknown reason – விஷாலின் திருமணம் ரத்து

விஷாலின் நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பிரபல நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமியுடன் அவரது பெயர் முதலில் கிசுகிசுக்கப்பட்டது. இதை இருவரும் கூட்டாக மறுத்து வந்த நிலையில், நாங்கள் நண்பர்கள் மட்டுமே என்று சொல்லிவந்தார் வரலட்சுமி. அதையே திரும்பத் திரும்பச் சொல்லி வந்தார் விஷால்.

Vishal marriage dropped due to unknown reason - விஷாலின்  திருமணம் ரத்து
Vishal marriage dropped due to unknown reason – விஷாலின் திருமணம் ரத்து

இதன் பிறகு நான் சிகப்பு மனிதன் படத்தில் நடித்த, லட்சுமி மேனனுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதையும் விஷால் ஒப்புக்கொள்ளவில்லை. அந்த படத்தில் என்றும் இல்லாத திருநாளாக, லட்சுமி மேனன் விஷாலுக்கு, உதட்டுடன் உதடு முத்தம் கொடுப்பது போன்ற, காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனால் காதலாக இருக்குமோ? என்று பலத்த சர்ச்சை எழுந்தது. இருவரும் இதை கடுமையாக மறுத்த நிலையில்,

Vishal marriage dropped due to unknown reason - விஷாலின்  திருமணம் ரத்து
Vishal marriage dropped due to unknown reason – விஷாலின் திருமணம் ரத்து

நிஜவாழ்க்கையில் விஷாலுடன் ஜோடி சேரப் போவது யார்? என்று பலத்த சந்தேகம், கேள்வியும், ஆர்வம் இருந்து வந்த நிலையில், திடீரென ஹைதராபாத் பெண்ணுடன் நிச்சயம் என்று கேள்விப்பட்டதும், ஆடிப்போனது கோடம்பாக்கம்.

Vishal marriage dropped due to unknown reason - விஷாலின்  திருமணம் ரத்து
Vishal marriage dropped due to unknown reason – விஷாலின் திருமணம் ரத்து

இருந்தாலும், எப்படியோ? செட்டில் ஆகிவிட்டார் என்று நினைத்த நேரத்தில், திடீரென அதுவும் சர்ச்சையில் இறங்கியது. நிச்சயதார்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆளாளுக்கு ஒன்று பேச ஆரம்பித்துவிட்டனர். இது காரணமோ? அது காரணமோ? இதெல்லாம் காரணமோ? என்று, இதை விஷால் சொல்லாத வரை, எந்த தெளிவும் ஏற்படப்போவதில்லை.

Today News