தளபதி விஜய் ரசிகர் தற்கொலை

 தளபதி விஜய் ரசிகர் தற்கொலை

vijay fan bala suicide

vijay fan bala suicide

rip bala

கொரோனா படுகொலைகள் ஒருபுறம்,
பொருளாதார கழுத்தறுப்புகள் மறுபுறம்,
கல்லூரி கட்டணங்கள் ஒருபுறம்,
பள்ளிக் கட்டணக் கொள்ளை இன்னொருபுறம்,
வேலையில்லாத் திண்டாட்டம் மற்றொருபுறம்
வேடிக்கை பார்க்கும் அதிகார அரசியல் வர்க்கம் மறுபுறம்

நான்கு மாதங்களாக வேறுவழியின்றி, பசியும் பட்டினியுமாக காலத்தை தள்ளிய நிலையை இனியும் தொடர முடியாது என்று ஏற்படுகிறது.

பட்டினியால் சாவதை தவிர, கடனாளியாக சாவதைவிட தற்கொலை செய்துகொண்டு சாவதே மேல் என்று இருக்கிறது, லட்சோபலட்சம் நடுத்தர வர்க்க குடும்பங்கள். ஏழை எளிய சாமானிய மக்களின் நிலையோ அதைவிட கொடுமை. சாதி சங்கங்களும், தொழிலாளர் சங்கங்களும், சத்தமின்றி அமைதிகாக்கும் இந்த கொடுமையான காலத்தில், கடவுளும் காலை வாரி விட கடனாளிகள் கழுத்தை நெறிக்க என்னதான் செய்யவேண்டும் என்று யோசிக்கும் நிலையில் எவரும் இல்லை.

இளைஞர்களின் நிலையோ இதைவிட கொடுமை
கல்லூரி மாணவர் நிலை வெளியே தெரிவதும் இல்லை
பள்ளி மாணவர் நிலை பரிதவிக்கும் பிள்ளை
அரசே உனக்கு அக்கறையும் இல்லை அறிவும் இல்லை
பொருளாதாரம் தெரியவும் இல்லை புரியவும் இல்லை
சாமானிய நடுத்தரவர்க்க மக்களின் சாப்பாட்டு யுத்தம்
இது அணு குண்டுவெடிப்பின் ஆரம்ப சப்தம்
அழுத்தம் தாங்கிடுமா அதிகாரவர்க்கம்
அதையும் பார்த்திடு வா அழுத்திடு கொஞ்சம்
திருந்திடு நீயும் எதிர்பார்க்கும் ஏழை நெஞ்சம்
ஓடி ஒளிய இடம் இல்லை ஏது உனக்கு தஞ்சம்

நான்கு மாதங்களாக வேலை, சம்பளம், கூலி என்று எதுவும் இல்லாமல், இன்று வெந்ததைத் தின்று வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சாமானிய மக்களின் கண்ணீர் குமுற,ல் கோபம், கொந்தளிப்பு, நிலைக்குமோ வேதனைகளை குறைக்குமோஅதிகாரவர்க்க ஆட்சிகளை கலைக்குமோ?

மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தன் மக்கள் நலம் ஒன்றேதான் கருத்தில் கொள்ளுவார் என்று பாடி வைத்த கவிஞரின் பாட்டை திரும்ப மேடைகளில் பாடி எங்களை நூற்றாண்டுகளாக ஓட்டாண்டி (ஓட்டுக்கு அண்டி) ஆக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்திற்கும், தக்க பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது தான், இப்போதுதான்.

இந்த நிலை இதுவரை வந்ததில்லை
இப்படியோர் பாெங்கிடும் நிலை
மரணம் என்று வந்த பிறகு
கொரோனா என்ன மரணம்தான் என்ன
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
பட்டினியிலும் சாவு போராட்டத்திலும் சாவு

என்ற முடிவெடுத்து, சாமானிய மக்கள் உங்கள் சதிகளை உடைக்க முன்வந்தால், சாலை ஏது, மாலை ஏது

விடிவு காலம் விரைவில் வரும்
வரும் பொழுது தெரிய வரும்
அப்பொழுது உனக்கு புரிய வரும்
எங்கள் பலம் தெரிய வரும்
துடிதுடிக்கும் வரியவறும்
அவர் துயர் துடைக்கும் காலம் வரும்
விடிவு காலம் விரைவில் வரும்

Today News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *