எஸ் பி பி இறுதிச் சடங்கில் எல்லோரையும் நெகிழ வைத்த தளபதி விஜய்

 எஸ் பி பி இறுதிச் சடங்கில் எல்லோரையும் நெகிழ வைத்த தளபதி விஜய்

vijay at spb funeral

vijay at spb funeral
vijay at spb funeral

மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட விஜய் எல்லோரையும் நெகிழ வைத்து விட்டார் விட்டார்.

இறுதி மரியாதையாக நாம் நினைக்கும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் நிகழ்வு என்பது, நல்ல நிகழ்ச்சிக்கு போறோமோ? இல்லையோ? இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளனும் அப்படிங்கிற எண்ணம் சாதாரண சாமானிய மக்களின் மனதில் கூட இன்று ஆழமா பதிஞ்சு இருக்கு.

இதுல திரைப்பட துறையில் இருக்கிறவங்களோட இறுதிக் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்பது ரொம்ப முக்கியமான ஒரு நிகழ்வா பார்க்கப்படும். எல்லா ரசிகர்களும் கூர்ந்து கவனிக்கிற ஒரு நிகழ்வா இருக்கு. தன்னுடைய தலைவன், தன் அபிமானத்திற்குரிய ஒரு நபருடைய இறுதிச்சடங்கில் கலந்து கொள்கிறாரா? இல்லையா? அப்படி பார்க்கும் போது அவர் நடந்து கொண்ட விதம், அப்படின்னு சொல்லி, யார் யாருடைய ரசிகர்கள் இருந்தாலும் அவருக்கு வெறுப்பு அரசியலை காட்டுவதற்காகத்தான் இருந்தாலும் சரி, பாச அரசியலாக இருந்தாலும் சரி, வெச்சு செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.

அப்படித்தான் தளபதி விஜய் மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதையும் பாக்குறாங்க. உண்மையிலேயே ஒரு நல்ல மனுஷனுடைய இறுதி சடங்கா அப்படிங்கிற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும். ஆனா கொரோனா வைரஸ் காரணமா எஸ்பிபி அவர்கள் இறந்தார். அவருடைய இறுதிச் சடங்கில் கலந்து கொள்வது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது என்று சொல்லி, பெரும்பான்மையான நடிகர்கள், பெரிய பெரிய நடிகர்கள் கூட வராத போது, தளபதி விஜய் கலந்து கொண்டு மரியாதை செலுத்திய விதம், கொரோனா வைரஸ் அது இதுன்னு சொல்லி எதைப்பற்றியும் கவலைப்படாமல், கலந்துகிட்ட இளைய தளபதிய இந்த நேரத்துல நாம தலைவணங்கி பாராட்ட வேண்டியது கடமை.

தலைக்கனம் இல்லாத நடிகர்கள் பாக்கறது அதிசயமாய் இருக்கிற இந்த நாள்ல, இந்தியாவோட உச்ச பட்ச நடிகர்கள் வரிசையில் இருக்கிற தளபதி விஜய், சாதாரண சாமானிய மக்களின் எண்ணத்தை, தெரிஞ்சிக்கிட்டு அந்த உயிர் நாடியை பிடித்து அதன் வழியே பயணப்படுவது பார்க்கும்போது ஒரு நல்ல மனுஷனா மட்டும் இல்ல, நல்ல தலைவனை பார்க்கிற மாதிரியும் இருக்கு.

எஸ்பிபி அவர்களுடைய 50 ஆண்டுகால திரை வாழ்க்கையில் அவர் எவ்வளவு பெயர் சம்பாதித்திருக்கிறார், எவ்வளவு புகழ் சம்பாதித்திருக்கிறார், எத்தனையோ மனிதர்களை உருவாக்கி இருக்கிறார், எத்தனையோ கலைஞர்களை அடையாளம் கண்டு இருக்காரு, விருதுகளும், பேரும் புகழும் பெற்று, இன்றைக்கு தமிழக அரசு ஒரு முன்மாதிரியாக அரசு மரியாதையை எஸ்பிபி அவர்களுக்கு கொடுத்தது கூட ரொம்ப பெருமையான ஒரு விஷயமாக எடுத்துக் கொள்ளலாம்.

அப்படியே தன்னுடைய சக நடிகர்கள் கலந்துக்க முடியாத ஒரு கொடூரமான நோய் தாக்குதலிலிருந்து, மரணிக்கும் போது சக மனிதர்கள் அஞ்சுவதும், ஒரு பெரிய விசயமே யில்லை இல்ல. ஆனா அதையெல்லாம் தாண்டி ஒருத்தர், அப்பேர்ப்பட்ட பெரிய மனிதருடைய இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதே ஒரு ஒரு மரியாதைக்குரிய விஷயம் அப்படினு நெனச்சுட்டு, இறுதிச்சடங்கில் கலந்து கொண்டதில் இருந்து, விஜய் தளபதி விஜய் இல்ல தமிழ் மக்களின் தலைவன் விஜய் அப்படி என்கிற நிலையை எட்டிப்பிடிச்சுடாரு…

Today News