பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து முதல்வர் அறிவிப்பு

 பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து முதல்வர் அறிவிப்பு

Tamilnadu Chief Minister Hon. Edapadi K Palanisamy is announced that SSLC exam has been dropped due to covid-19 corona virus

Tamilnadu Chief Minister Hon. Edapadi K Palanisamy is announced that SSLC exam has been dropped due to covid-19 corona virus

Tamilnadu Chief Minister Hon. Edapadi K Palanisamy is announced that SSLC exam has been dropped due to covid-19 corona virus
Tamilnadu Chief Minister Hon. Edapadi K Palanisamy is announced that SSLC exam has been dropped due to covid-19 corona virus

பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து முதல்வர் அறிவிப்பு
தெலுங்கானா மாநிலத்தை தொடர்ந்து அதிலும் பத்தாம் வகுப்பு மற்றும் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் அல்ல உலகம் முழுவதிலும் புதிய வகைப்பட்ட கொரோனா எனப்படும் உயிர்க்கொல்லி வைரஸ் பரவி, லட்சக்கணக்கான பேரை கொன்று குவித்து வருகிறது. சீனாவில் உள்ள ஊஹான் நகரத்தில் உருவானதாக சொல்லப்படும் இந்த வைரஸ், சீனாவை பதம் பார்த்து, அக்கம் பக்கம் ஊடுருவி விமானம் வழியாக உலகநாடுகளுக்கு தடையின்றி பயணித்தது.

இன்று உலகில் அத்தனை நாடுகளும் அடங்கி, ஒடுங்கி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, தவித்து வருகிறது. இப்படிப்பட்ட மோசமான நிலையில், மூன்று மாத காலமாக, தொழில் நிறுவனங்கள் கல்லூரிகள், பள்ளிகள், திரையரங்குகள், பெரும் நிறுவனங்கள், அலுவலகங்கள், சிறு பெட்டி கடைகள் முதல் மளிகை கடை வரை, அனைத்து கடைகளும், ஊரடங்கு உத்தரவினால் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி, பல நாட்கள் திறக்கப்படாமல் இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் வீரியத்தைப் பொறுத்து, தமிழகத்தில் சில மாவட்டங்களில், சில தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டுள்ளன என்றாலும், நோயின் தீவிரம் இதற்குப் பிறகுதான் அதிகரிக்கும் என்று, உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. அமெரிக்கா பல லட்சக்கணக்கான உயிரை இழந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி,ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும் கூட, இந்தகொரோனா வைரஸ் க்கு தப்பி விடவில்லை.

இப்படி இருக்கிற நிலையில், இந்தியாவில் இன்னும் மருத்துவ வசதி முழுமை பெறாத சூழ்நிலையில், பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறப்பது என்பது, மாணவர்களை இந்த வைரசுக்கு பலி கொடுப்பதாகவே அமையும் என்று, இந்தியா முழுவதும் கல்வியாளர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது பற்றி தொடரப்பட்ட வழக்கில், அரசு ஏன் தேர்வு நடத்த வேண்டும் என்பதில், குறியாக உள்ளது என்று கடுமையாக எச்சரித்தது. ஆக சட்டமன்றம் திறக்கப்படவில்லை, பாராளுமன்றம் எந்த செயல்பாடுகளும் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. பெரிய பெரிய நிறுவனங்கள் மூடி, தொழிற்சாலைகள் 50 சதவீத தொழிலாளர்களுடன் தடுமாறி வருகிறது என்கிற பொழுது, பாதுகாப்பு உபகரணங்கள் போதிய அளவில் இல்லாமல், மாபெரும் ஆபத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில், எந்த ஒரு பாதுகாப்பு ஏற்பாடுகளும், தயாரிப்புகளும் செய்யப்படாத நிலையில், தேர்வுகளை நடத்துவது என்பது, கொரோனா வைரஸ் இன் பரவலுக்கு காரணமாக அமையும் என்று அனைவரும் கருதுகின்றனர்.

ஆக இந்தத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று பலரது கோரிக்கைகளையும், நீதிமன்றத்தின் ஆலோசனையையும் கவனத்தில் கொண்டு அரசு ஒரு முக்கிய முடிவை இன்று அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டு, தீர்க்கமான ஒரு முடிவை எடுத்து அறிவித்துள்ளார். அதாவது பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுகிறார்கள் என்ற அந்த மகிழ்ச்சிகரமான அறிவிப்புதான்.

அரையாண்டு மற்றும் காலாண்டு தேர்வுகளின் அடிப்படையில், மாணவர்களுக்கு 80% மதிப்பெண் வழங்கப்படும் என்றும், வருகை பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதனால் அனைத்து தரப்பு மக்களும், மாணவர்களும், கல்வியாளர்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர். மாபெரும் நோய்த்தொற்றின் மிகப்பெரிய தாக்குதலில் மாணவர்களை சிக்க விடாமல், அவர்களை காத்த பெருமை,நிச்சயம் முதல்வருக்கு உண்டு. நமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Today News