போய்வாருங்கள் எஸ்பிபி

 போய்வாருங்கள் எஸ்பிபி

spb-expired-today

RIP SPB

SPB latest news RIP SPB

இசை ஒலிக்கும் உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் நீங்கள் வாழத்தான் போகிறீர்கள்!

உங்களுக்கு மரணமில்லை, பிரிவும் இல்லை, உங்களுக்கு முடிவு என்பது இல்லவே இல்லை. அமரத்துவம் பெற்ற இசை மேதை நீங்கள். உங்களுடன் பிறந்தோம் உங்களுடனே வாழ்ந்தோம். நாங்கள் மறைந்துபோவோம், நீங்கள் மலைபோல் உயர்ந்து நிற்கிறீர்கள். இசை, உங்களை உலகின் எல்லை வரை எடுத்துச்சென்று இயற்கையோடு கலந்துவிட்டது. உங்கள் உயிர் உங்களுடையது அல்ல. உங்கள் உடல் இந்த மண்ணில் மறைந்தாலும், உங்கள் உயிர் எங்களோடு கலந்து இருக்கும். எங்கள் மூச்சினில், பேச்சினில், மொழியினில், இசையினில் கலந்திருக்கும்.

நாங்கள் இசைக்கும் போது எழுந்து வருவீர்கள். இசையாக உங்களை சுவாசிக்கத்தான் பார்க்கத்தான் போகிறோம், உங்களோடு பேசத்தான் போகிறோம். இசையின் மொழியோடு உங்களோடு கலந்து இருக்கத்தான் போகிறோம். உலகம் என்பது உள்ளவரை, இசை என்பது உள்ளவரை இசை உலகில் உங்கள் பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கும் கொண்டே இருக்கும்.
எங்கள் நெஞ்சை கசக்கி பிழிந்து கொண்டே இருக்கும்.

இசையால் இணைந்தோம். ஆனால் இசையால் ஒருபோதும் பிரிவதில்லை. நீங்கள் எங்களிடம் இருந்து மறையப் போவதுமில்லை. சூரியன் கூட மறைவது உண்டு. நிலவும் கூட மறைவது உண்டு. பாடும் நிலா பாலு நீங்கள் எங்களை விட்டு ஒரு கணமும் பிரிவதில்லை. எங்கள் காதுகளின் வழியே, எங்கள் மனதை வருடி, காலங்கள் கடந்து போனாலும், உன் குரல் வழியே செவிகளில் புகுந்து, எங்கள் மனங்களில் ஆட்சிசெய்யும் உங்களின் இசை, ஏழை எளிய சாமான்ய மக்களும், எங்களில் ஒருவராக எங்கள் உயிரின் கலந்த ஒருவராகவே உங்களை பார்க்கிறோம்.

எங்களின் கொண்டாட்டங்களும் எங்களின் குதூகலமும்,எங்களின் சோகமும், சுகமும் துக்கமும் உங்களுடனேயே தொடங்கி, உங்கள் இசையோடுவே பயணித்து எப்போதும் உங்கள் குரலையே சுற்றிக்கொண்டிருக்கும். உங்கள் குரல் காற்றினில் கலந்து கடலில் கரைந்து எங்கள் வாழ்வினில் நிறைந்துவிட்டது . போய் வாருங்கள் எஸ் பி பி…

Today News