கொரோனா – டாஸ்மாக்கும் பாஸ் மார்க்கும்

 கொரோனா – டாஸ்மாக்கும் பாஸ் மார்க்கும்

eps-rajinikanth-kamalhassan-on-suit

what is tamilnadu cm edapadi palanisami going to do reopen tasmac
what is tamilnadu cm edapadi palanisami going to do reopen tasmac
Super star Rajinikanth about Tasmac reopen in Tamilnadu
Kamalhassn about Tasmac reopen in Tamilnadu and questioned the appeal TN Govt.

கொரோனா – டாஸ்மாக்கும் பாஸ் மார்க்கும்
ஒரே ஒருநாள் திறந்திருந்ததால் டாஸ்மார்க் பாஸ்மார்க் வாங்கி விட்டது. ஒரு மாதம் மட்டுமே மூடி இருந்ததால், பள்ளிக்கூடங்கள் டாஸ்மார்க் ஆகிவிட்டது.

சுமார் 44 நாட்களாக கொரோனா வைரஸ் இன் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர, உலக நாடுகள் பெரும் முயற்சி செய்து வருகின்றன. அமெரிக்காவும், இத்தாலியும், ஸ்பெயினும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக, முழுவதுமாக பாதிக்கப் பட்டிருக்கின்றன. ஐரோப்பிய கண்டம் பிழைக்குமா? தெரியவில்லை. ஆசியா கண்டம் ஆரம்பித்த, அண்ணன் தம்பி பிரச்சனை எல்லாம் மறந்துபோய், எல்லை பிரச்சனை எல்லாம் மறந்து போய், கொரோனா வைரஸ் என்ற ஒரே பிரச்சனை உலகை கட்டிவைத்து, இந்த உலகில் மனிதன், மனித நேயம் மட்டுமே வாழ கட்டளையிட்டுள்ளது.

இப்பொழுது, அருகில் இருப்பவர், என்ன ஜாதி? என்ன மதம்? எந்த இனம்? என்ன மொழி? என்று கேட்பதில்லை. உதவி செய்ய வேண்டிய கட்டாயத்தில், மனிதநேயம் இருந்தால், ஒருவருக்கு ஒருவர், உதவி செய்து, இந்த மனிதகுலத்தை கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, மனித இனம், தன்னைத் தானே காத்துக் கொண்டு முன்னேறும். இந்த நேரத்திலும், மனிதநேயம் இல்லாமல், தன்னுடைய மதம், தன்னுடைய ஜாதி, தன்னுடைய மொழி, தன்னுடைய இனம் என்று வெறி பிடித்து, அலையும் மிருக கூட்டங்கள், சாதி வெறியையும், மத வெறியையும், இன வெறியையும் காட்டிக்கொண்டு இருக்குமேயானால், இதுவே மனித இனத்தின் கடைசி காலகட்டமாக இருக்கும்.

ஊரடங்கு காலகட்டம் கம்பெனிகள் இயங்கவில்லை. கடை கண்ணிகள் ஏதுமில்லை, கால்வயிறு கஞ்சிக்கும், காஞ்சி கிடக்குது காய்ந்த வயிறு. இந்த சாமானிய மக்கள் பசித்திருக்கும் போது கூட, எல்லாம் இறைவன் அவன் செயல் என்று, ஏமாந்து விழுந்துபோன இனம். பசிக்கும், பட்டினிக்கும் காரணம் யார்? என்று அறிந்துகொள்ள முடியாத ஒரு அப்பாவி இனம் நாம்.

அரசினுடைய அலட்சிய போக்கின் காரணமாக, இன்று மூளை முடுக்குகளில் அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அவலம். அரசின் அராஜக போக்கினால், ஊரடங்கு உத்தரவினால் ,செயல்படாத தன்மையினால், தொலைநோக்கு பார்வை இல்லாததினால், மக்கள் அனைவரும் சமம் என்று கருதாததினால், மக்களை பற்றி கவலை கொள்ளாததினால், இன்று ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும், ஒவ்வொரு பிடி சோறும், பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவை எதற்கும் கவலைப்படாமல், தொலையட்டும் என்று, எங்கோ குக்கிராமங்களில் மூழ்கிக் கிடந்த, ஒதுங்கியிருந்த மக்களும் கூட, இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு என்று பயந்து, வீட்டில் இருக்கும்படி செய்து, ஆயிரம் பேர் வெளிநாட்டில் இருந்து வந்த போது, அவர்களை அழைத்து, சோதனை செய்து, வீட்டுக்கு அனுப்பி இருந்தார்கள் என்றால், நாடு சுபிட்சமாக இருக்கும் மாநில எல்லைகளை அழைத்து மாவட்ட எல்லைகள் அடைத்து தெருக்கள்தோறும் காவல் வைத்து தேச விரோதிகளை போல சோதித்து மக்களைத் துன்புறுத்த வேண்டிய அவசியம் இன்றைக்கு ஏற்பட்டிருக்காது இப்படி ஒரு சோதனையான நெருக்கடியான காலகட்டத்தில் கூட மக்களின் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய அவர்களின் நலனைப் பற்றியே ஏன் அவர்களுக்கு ஒரு வேளை சோறு போடுவதை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் நோய் பெருக வேண்டும் மிட்ட நோக்கத்துடனேயே டாஸ்மார்க் கடைகளை திறந்து விட்டு வேடிக்கை பார்க்கும் அரசுகளுக்கு அரசியல்வாதிகளுக்கு நாம் என்ன சொல்லப்போகிறோம் அவர்களை எப்படி திருத்த போகிறோம் 40 நாட்களாக டாஸ்மாக்கை திறந்து விட வேண்டும் என்று ஒற்றை கோரிக்கை கூட இல்லையே அப்படி குடிகாரர்கள் மன்னிக்க வேண்டும் மது பிரியர்கள் ஒருவரும் உயிரை விட்டதாக ஒரு செய்தி கூட எங்கும் வரவில்லையே எந்த தெரு ஓரத்தில் சாக்கடைகளும் குடிகாரர்கள் மது பிரியர்கள் விரிந்து கிடந்தது பற்றி எந்த தொலைக்காட்சியும் வரவில்லையே மனைவி கொலை, நண்பர்கள் அடித்துக்கொலை, போதையில் தற்கொலை என்று எந்த செய்தியும், நம் காது கேட்கவில்லை.

tasmac reopen in tamilnadu
tasmac reopen in tamilnadu

ஆகமொத்தத்தில் இல்லாமல் சாமானிய மக்களால் சாதாரணமாக வாழ்க்கையை வாழ முடியும் என்று இந்த 40 நாட்களுக்கு மேலாக அடைந்து கிடந்தது நாமே நம்மை தெரிந்துகொண்டோம் அறிந்துகொண்டோம் அறிஞர்களும் பெரியவர்களும் வந்து சொல்லிக் கொடுத்தும் நம் அறிவுக்கு எட்டாத இந்த சாதாரண விஷயம் ஒரு சாகடிக்கும் வைரஸ் ஒரு மிரட்டு மிரட்டியதால் நமக்கு தெரிந்து விட்டது. ஒரு நாளைக்கு அடிவாங்கும் புகையிலைப் பொருட்களை அரசு தடை செய்யவில்லை ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் உயிர்பலி வாங்கும் சாராயம் விற்பதை அரசு தடை செய்யவில்லை அதற்கு பதிலாக ஒரு சில நூறு பேர் இறந்து போகிறார்கள் என்னும்போது ஒட்டுமொத்த நாட்டையும் என்ன ஒரு அற்புதமான யோசனை இந்தியா முழுவதும் அரசு அதிகார தெரிவித்த அறிக்கையின்படி முத்துக்களில் இறந்து போவோம் ஊர் வர்களின் கணக்கெடுப்பை எடுத்துப்பார்த்தால் சாராய போதையினால் ஏற்படும் விபத்துகள் 96% என்று தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் அறிக்கை சொல்லுகிறது.

அப்படி என்றால் நீங்கள் எதை இருக்க வேண்டும் இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு மக்களை கொன்று குவிக்கும் புகையிலைப் பொருட்களை ஏன் தடை செய்யவில்லை என்கிற கேள்விகள் இப்போது எழுகிறது அதைவிடக் கொடுமை புகையிலைப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்கிற விளம்பரத்திற்கு மட்டும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவு செய்து வருகிறது அரசு அடப்பாவிகளா பீடி தொழிலாளர்கள் சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதில் செய்யும் வேலை செய்யும் தொழிலாளிகள் என்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு நீங்கள் புகையிலைப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று செலவு செய்யும் தொகையை கொடுத்து அவர்கள் வாழ்வாதாரத்தை வாழ்க்கையை திசை திருப்பி இருக்க முடியும் அதை விடுத்து இத்தனை ஆண்டுகளாக லட்சக்கணக்கான பேர் படுகொலை செய்யப்பட்டு இருப்பினும் இந்த புகையிலை பொருட்களை மது சாராயம் பொருட்களையும் தடை செய்யாமல் இருப்பதிலிருந்து உங்களுடைய நோக்கம் புரிகிறது மட்டுமே தெரிகிறது இன்றைக்கும் போதும் பரப்பி இது வரும் நிலையில் தமிழில் இன்று தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில் சாராயக் கடைகளை திறந்து விடவேண்டும் என்று ஏன் துடிக்கிறீர்கள் கட்சி அதை தடுப்பது போல் ஏன் நடிக்கிறீர்கள் ஆலைகளை மூட வேண்டும் என்று சொல்லி ஏன் பேச மறுக்கிறீர்கள் இசை திறக்க ஒருபக்கம் எதிர்கட்சிகள் அதைப்பற்றி பேச மறுக்க அடேங்கப்பா சூப்பர் நாடகம் சூப்பர் நடிப்பு மக்கள் எதை புரிந்துகொள்வார்கள் இதை.

tasmac reopen in tamilnadu
tasmac reopen in tamilnadu

நாட்டில் கல்விக்காக தன் ஒட்டுமொத்தமான சம்பாத்தியத்தில் செலவு செலவு செய்ய வேண்டிய நிலையில் நடுத்தரக் குடும்பங்கள் தத்தளித்துக் கொண்டிருக்க ஒரு பக்கம் மருத்துவ செலவுகளுக்காக தான் சம்பாதிக்கும் அத்தனை பணத்தையும் செலவு செய்து கடனாளியாகி கொண்டிருக்க வாழ வழியில்லாமல் விழிபிதுங்கி நிற்கும் இந்த கடைகோடி மக்களுக்கு விடிவு ஒன்று பிறக்காதா என்று ஏங்கிக் கிடக்க 2000 வீசி எறிந்தாள் துண்டை கவ்விக்கொண்டு வாக்குகளை நமக்கு போடுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் இந்த மூடர்களின் முதுகெலும்பை முறித்து அவர்களின் கருத்துக்களை சிதைத்து வாக்கு வங்கி கோட்பாடுகளை மண்ணில் புதைத்து உழைக்கும் மக்களின் உன்னதமான அரசு அதிகாரத்தை மண்ணில் விதைத்து நீரூற்றி வளர்க்க வேண்டும் அது நிலைத்து அப்படியும் தப்பிப் பிழைத்து வெற்றி பெறுமா வளர்ந்து வாழ்ந்து தழைத்து நமது நெஞ்சில் பூசி மகிழ்வோம் கொள்கைகளை குழைத்து குழைத்து.

மோசடி அரசியல்வாதிகளை எதிர்கொள்வது எப்படி? மோசடி அரசியல் களை எதிர்கொள்வது எப்படி? பொய் பித்தலாட்ட சூதாட்டக்காரர்கள் எதிர்கொள்வது எப்படி?
இந்த எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் என்பதை சாமானிய சாதாரண மக்கள் புரிந்துகொள்வார்கள் அப்படியே இருந்து தொலையட்டும் ஒவ்வொரு அரசியல்வாதியும் நம்மை ஏமாற்றி நம்முடைய ரத்தத்தை உறிஞ்சி குடித்து நம்மை கொன்று சுகபோகமாக வாழ்ந்து வருகிறார்கள் அதை நாம் அனைவருக்கும் தெரிந்த இந்த தருணத்திலாவது அதாவது ஒரு நோய் பரவி உலகம் முழுவதும் ஆட்கொண்டு இந்தியாவையும் ஆட்டிப்படைத்து வருகிறது அதனால் தான் நாற்பத்தி நான்கு நாட்களாக நாம் வெளியில் வராமல் உருவாகி சோற்றுக்கு கையேந்தும் நிலைமை வந்து விட்டது அது மட்டுமல்ல நாம் நோய்த்தொற்று பரவாமல் இருந்த காலகட்டத்தில் கூட இதே நிலைதான் என்ன ஒரு வித்தியாசம் நாம் வெளியில் சென்று சம்பாதித்து வரும் அதை வைத்து கால்வயிறு கஞ்சி குடிக்க முடிந்தது.

சரி இப்படி காலம் காலமாக ஏமாற்றி பிழைத்து வரும் அரசியல்வாதிகளின் முறியடிப்பது எப்படி எந்தக் கேள்வி கேட்டாலும், பின்குறிப்பு நாம் கேள்வி கேட்பதே கிடையாது அது வேறு விஷயம், அதாவது யாரோ ஒரு புண்ணியவான் இல்லை சந்தர்ப்பவாதி அல்லது இன்னொரு சங்கி மங்கி கடுப்பில் கேள்வியை கேட்டு விடுவார்கள் சில சமயம் அந்தக் கேள்விகள் சரியாகவும் அமைந்துவிடும்.

நாம் இப்படிக் கேள்வி கேட்காமலேயே இருந்து அல் படுகிற வேளையில் நாம் ஏன் கேள்வி கேட்கவில்லை என்கிற ஒரு கேள்வி இருக்கிறது நாம் நமது வேலைகளில் மூழ்கி நமது வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களைப் கணக்கில் எடுத்துக்கொண்டு நல்லதோ கெட்டதோ ஆட்சி செய்பவர்கள் அதற்கென்று வேலைக்கு செல்பவர்கள் அதாவது அரசியல்வாதிகள் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் நமக்கு ஏதாவது பார்த்து போட்டால் சரி அதாவது எலும்புத்துண்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடுவார்களே எலும்புத்துண்டு அதுபோல போடுவார்கள் அதை பொறுக்கித் தின்று நாமும் பிழைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் நாம கஷ்டப்பட்டு தான் நமக்கு சோறு என்கிற இன்னொரு தன்மான சிந்தனை இப்படி நமது வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை நாமே சம்பாதித்துக் கொள்வோம் என்கிற தவறான கண்ணோட்டம் விஷயம் அதுவல்ல சொல்லப்போனால் அந்த சிந்தனையின் குறைபாடு தான் நம்முடைய தவறு.

ஒரு அரசியல்வாதி செய்யும் ஒரு தவறு உன்னுடைய ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கிறது சிதைக்கிறது கிரீம் சேர்த்து சரியாக சொல்லபோனால் அதற்கு நிறைய உதாரணங்களை நாம் சொல்லலாம் மக்களுக்கு முன்பு தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம் என்கிற உத்தரவு ஆக வீட்டில் முடங்கி கைகளை அடக்கிக்கொண்டு குடிக்காமல் காரர்களுக்கு டாஸ்மார்க் கடையை திறந்து விடும் செய்த அக்கிரமங்கள் அட்டூழியங்களைப் பற்றி நாம் தேதிகளிலும் பார்த்து வருகிறோம் இதையெல்லாம் இது எல்லாம் நடக்கும் என்று அனைவருக்குமே தெரியும் அது அப்படி அரசு ஒரு தவறான முடிவு எடுக்கும் பொழுது நம் பாதிக்கப்படுகிறது நீ போன் அவர்களால் எந்த பாதிப்பும் நமக்கு இல்லை என்று ஒரு மூலையில் ஒதுங்கி கிடக்கும் யாரும் தவறாக எண்ணிவிடக்கூடாது காய்கறி காய்கறி வாங்கச் சென்ற அவர்கள் அனைவரும் குரோன் நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அவர்களை மருத்துவ குழுவினர் தேடிக்கொண்டிருக்கிறார்கள் அப்படி இருக்கும்போது 170 கோடி ரூபாய் வியாபாரம் நடந்துள்ளது என்றால் சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கடைகளில் சில கோடிக்கணக்கான குடிகாரர்கள் கூடி இருந்த வேளையில் குரோன் நோய் தொற்று பரவி இருக்காதா அரசுக்கு இது தெரியாதா இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை அரசு எடுக்கும் பொழுது நாம் கேள்வி கேட்காமல் இருப்பது எப்படி இந்த நேரத்தில் கூட நமக்கு என்ன வந்தது நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கிறது எப்படி சரியா இருக்கும்?

இப்போ அரசியல்வாதிங்க அவர்களுடைய முட்டாள்தனமான செயல் பாடுகளை அரசின் முடிவுகளை கேள்வி கேட்கலாமா? வேண்டாமா? என்று முடிவு எடுக்க வேண்டியது யாரு அது எப்படி?

வேணாம் நமக்கு என்ன நாம் ஒதுங்கி இருக்கிறேன் நீங்க தான் இந்த நாட்டோட பெரும்பான்மை மக்கள் அதாவது அதிகமான மக்கள் இதைத்தான் நினைக்கிறீங்க சில நூறு கட்சிக்காரர்கள் சேர்ந்து கொண்டே இந்த அரசாங்கத்தை அதாவது நம்ம ஆட்சி செய்கிறார் நாம பல கோடிப்பேர் சில நூறு பேரோட முட்டாள்தனமான கேள்விகளை கேட்க முடியல நா இல்ல கேட்க வேண்டாம் என்று ஒதுங்கி போகணும்னா என்ன நடக்கும் அப்படிங்கறது நீங்கள் பார்த்தீர்கள் சரி கேள்வி நான் கேட்கிறேன் எப்படி கேட்கிறது போய் முதலமைச்சரே நேரா கேள்வி கேட்க முடியுமா அமைச்சர்களை கேள்வி கேட்க முடியுமா? அமைச்சர்களை ஏன் எம்எல்ஏக்களை கூட, பாக்கவே முடியலையே? இந்த கேள்வி எப்படி கேட்கிறது வேற வழியே இல்ல.

அதுக்கு பதில் உங்க கையிலேயே இருக்கு ஆமா உங்க செல்போன் தான் கேள்வி கேட்கிறதுக்கு பயன்படுத்த போராயுதம் எல்லாருமே பெரிய செல்போன்தான் வச்சிருக்கீங்க ஸ்மார்ட் போனை வச்சிருக்கீங்க இதுல பேஸ்புக்கை பார்க்காதவங்க நிச்சயமா யாருமே இருக்க முடியாது ஃபேஸ்புக் பார்க்கும் என்றதுக்காக தான் நீங்க பெரிய போனே வாங்குறீங்க என்று எல்லாருக்கும் தெரியும் உங்களுக்கு தெரியும் யாரையும் ஏமாத்தாதீங்க அப்போ சில இலட்சம் பேர் ஏன் சில நூறு முட்டாள்தனமான அரசியல்வாதிகள் செய்த தவறை தட்டிக் கேட்பதற்கு யாரோ ஒருத்தன் எங்கிருந்தோ பிறந்து வரணும்னு அவசியம் இல்லை தன்மானத்தோடு கேள்வி கேட்கிற ஒருத்தவங்கள உடனே புடிச்சுட்டு ஜெயில்ல போட்டுருவாங்க. அவங்க வாழவே முடியாது.

அப்படிலாம் நீங்க நினைக்கிறீங்க இல்ல. சின்ன தீப்பொறி பெரிய காட்டை அழிக்கும். ஒரே ஒரு சின்ன கேள்வி, ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் கவீழ்த்துவிடும். ஆக கேள்வி கேட்க ஆரம்பித்தால்தான் இந்த அரசியல்வாதிகளுடன் முட்டாள் தனத்துக்கும், அட்டூழியங்களுக்கும், முடிவு வரும். கரெக்ட் இந்த செல்போன் தான் உங்களுக்கு கிடைத்திருக்கிற ஆயுதம். எல்லா கெட்ட விஷயங்களுக்கு உள்ள, ஒரு நல்ல விஷயம் நிச்சயம் இருக்கும். ஆயிரம் சீரழிவுகளை இந்த செல்போன் எடுத்துட்டு வந்தாலும், நம்முடைய கலாச்சார, பண்பாட்டை மறக்கடித்து, ஒரு புதிய நுகர்வு கலாச்சாரத்தில், எடுத்துட்டு போய் நம்ம சிக்க வைத்து இருந்தாலும், நம்முடைய சிந்தனைக்குள், புதிய ஒரு உத்வேகத்தை, ஏற்படுத்த இந்த செல்போனால் முடியும், நிச்சயம் முடியும். நீங்க இன்னிக்கு பார்க்கிற அட்டூழியங்களை, பார்த்துவிட்டுட்டு கண்மூடி மௌனமாய் இருக்காமல், உங்களுடைய கேள்விகளை, உங்களுடைய நண்பர்களுக்கு மட்டுமே அனுப்புங்க. ஒருத்தர் மட்டுமே அனுப்புங்க. சமூக குறைபாடுகளை சுட்டிக்காட்டுங்கள். சாதாரண மொழியில நிச்சயமா, அழகான மொழியில,விவேகமான முறையில் உங்கள சுத்தி இருக்க, உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்புங்க. இதுதான் இந்த அரசாங்கத்தை எதிர்த்து நாம பேசப் போற அல்லது செய்யப் போற ஒரு சின்ன விஷயம் .

இது சின்ன விஷயமா தான் இருக்கன்னு நீங்க நினைப்பீங்க. ஆமா இது சின்ன விஷயம் தான். நீங்க சின்ன வட்டத்தை போடுவீங்க அது போதும் ஏன் நீங்க ஒரு புள்ளியை வையுங்கள் வேற ஒருத்தருக்கு மட்டும் அனுப்புங்களேன்.சிறு கோடுகளும் புள்ளிகளும் தான் படங்கள், புகைப்படங்கள், வரைபடங்கள், ஆக நீங்க ஒரு புள்ளியை, ஒரு கோடு போடுங்க. ஒரு வட்டத்தை போடுங்க, சுத்தி இருக்கிறவங்க அதை செய்வாங்க, அது தாண்டி நான் வரமாட்டேன் சொல்லுங்க சரிதான். ஆனா ஒவ்வொருவரும் ஒரு வட்டத்தை போடும்போது, அந்த வட்டங்கள் எல்லாம் சேர்ந்து, பெரிய ஓவியமா காட்சியளிக்கும். அதை தூரத்திலிருந்து பார்க்கும்போது, வட்டம் தெரியாது, புள்ளிதான் தெரியும். அந்த புள்ளிகள் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் உருவாகும் பொழுது, அதிலிருந்து அருமையான ஓவியம் உருவாகும். ஆட்சியாளர்களுக்கு புது அத்தியாயம் உருவாகும்.

எந்த அருகதையும் இல்லாமல், மக்களுடைய நலனைப் பற்றி கவலைப்படாமல், முட்டாள்தனமான முடிவு எடுக்கிற, இந்த அரசியல் வியூகம், இதோடு முடிந்து போகட்டும். இதோட இந்த அராஜக, ஆணவ அரசியல்வாதிகளுக்கு, ஒரு முடிவாக இருக்கட்டும். மக்களுக்காக மக்களை, கவனத்தில் எடுத்துக்கிற, அரசியல் யுகம், நம்ம கிட்ட இருந்து, நம்ம செல்போன் கிட்ட இருந்து ஆரம்பிக்கட்டும். சிறு புள்ளியை வைப்போம். இது என்னுடைய ஒரு சிறு புள்ளி.

Today News