தர்பார் திரைவிமர்சனம்

 தர்பார் திரைவிமர்சனம்
Rajinikanth-Darbar
சூப்பர் ஸ்ராரின் தர்பார், பொங்களுக்கு எதிர்பார்ப்பு
ரஜினிகாந்த் அவர்கள் நடித்து பிரம்மாண்டமான படங்களில் இந்த படம் ஒரு டர்னிங் பாயிண்ட். படம் ஆரம்பித்த நாளிலிருந்து, மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு, இந்தியா முழுவதும் இருந்தது.  ஃபர்ஸ்ட் லுக், போஸ்டர், டீஸர், டிரெய்லர் என, ஒவ்வொரு முறையும், அது பெரிய அளவில் பிரபலமானது. ரசிகர்கள், தலைவரின் படம் கடந்த ஆண்டுகளை விட, இந்தாண்டு மிகப்பெரிய வெற்றியைப் பெறவேண்டும் என்று, கோவிலில் பூஜை செய்யும் அளவிற்கு சென்றது. இப்படத்தை, ஆர் முருகதாஸ் இயக்கப் போகிறார் என தெரிந்ததும், கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டது. படத்திற்கு மேலும் விருவிருப்பு கூட்ட, அனிருத் இசை என்றார்கள் இன்னும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதைவிடக் கூடுதல் பரபரப்பு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இந்தப் படத்தில் நாயகியாக இணையப் போகிறார், என்று அறிவித்தபோது உச்சத்தை தொட்டது பரபரப்பும். அதுமட்டுமில்லாமல் வில்லனாக இந்தி நடிகர் சுனில் ஷெட்டி , நகைச்சுவைக்கு யோகி பாபு என்று அறிவித்தபோது ஆஹா மிகப்பெரிய விருந்து பொங்களுக்கு காத்திருக்கிறது என்று நாமெல்லாம் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்து விட்டோம். 
சூப்பர் ஸ்டாரின் தர்பார் 
இன்று வெளியான தர்பார் திரைப்படத்தின் காட்சிகளைப் பார்த்துவிட்டு, ஊடகம் முழுவதும் சூப்பர் ஸ்டார் மட்டுமே நிறைந்து நிற்கிறார். அவருடைய ஸ்டைலும், மிடுக்கான நடையும், போலீஸ் உடையும், இதில் பெரிய அளவு பேசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் உடையில், அவர் நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை என்றும், இந்தப் படத்திற்கும் அதுபோல ஒரு பாதிப்பு வந்துவிடுமோ, என்ற அச்சம் இருந்து வந்தது. அதையெல்லாம் தூக்கி உடைத்துவிட்டு, இப்படி ஒரு போலீஸ் ஸ்டோரி இனியும் யாரும் எடுத்துவிட முடியாது என்கிற அளவில், உச்சத்தில் நிற்கிறார் சூப்பர் ஸ்டார். 
தர்பார் படத்தின் கதை அலசல்
மும்பை மாநகர காவல் ஆணையராக பதவி ஏற்கும் ஆதித்யா அருணாச்சலம், அங்கு போதை மருந்து கும்பலின் அட்டகாசத்தையும்,  ரவுடிகளின் சாம்ராஜ்யத்தையும் ஒழித்துக் கட்டவும் முடிவெடுக்கிறார். இதனை தனது பாணியில் எப்படி நடத்திக் காட்டுகிறார் என்பது தான் மூலக்கதை. வில்லன் சுனில் ஷெட்டி மகனை கைது செய்து, அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் முனைப்பில் இருக்கும் சூப்பர் ஸ்டார், அதற்கெதிராக ரவுடித்தனம் செய்யும் சுனில் ஷெட்டி என்று முதல் பாதியில் விருவிருப்பாக நகர, கதையின் இரண்டாம் பாதியில் என்கவுண்டர், பழிவாங்குதல், பாசம், நையாண்டி, நக்கல் என குதுகலமாக விரைகிறது.
சூப்பர் ஸ்டாரின் நக்கல் 
சூப்பர் ஸ்டார் அடிக்க ஆரம்பித்தால், அது யாரால் தாங்க முடியும், அப்படி ஒரு நக்கலும், நையாண்டியும் இந்த படத்திற்கு மிகப் பெரிய பலத்தை சேர்த்திருக்கிறது. என்கவுண்டர் செய்யும் காட்சிகளில் அதிரடியாகவும், பாசத்தைப் பொழியும் போது நம்மை உருகவும் வைக்கிறார் தலைவர்.
Nayanthara-darbar
Rajinikanth-Darbar-Nayanthara
லேடி சூப்பர் ஸ்டார் 
சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்று அறிவிப்பு வெளியானதிலிருந்து நயன்தாராவின் ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். மாயா, அறம், கோலமாவு கோகிலா போன்ற படங்களில், சோலோவாக நடித்து, வசூல் ஈட்டியது மட்டுமன்றி, சிறந்த நடிகை என்ற பெயரும் பெற்றார். இதனால், அவர் மீது, ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் பொழுது, மிகப்பெரிய ஒரு கேரக்டர் இருக்கும் என்று எ ஆர்  முருகதாஸ்,  சூப்பர் ஸ்டாரை நம்பி காத்திருந்தவர்களுக்கு, மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. ஒரே ஒரு பாடலுக்கும், ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே, நயன்தாராவை பயன்படுத்தி இருப்பது, நயன்தாரா ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டாரை மட்டுமே சுற்றி வந்து, நயன்தாராவை டம்மி ஆக்கி இருக்கிறார் இயக்குனர். நல்ல நடிகை, என்று பெயரெடுத்த நயன்தாராவை, பயன்படுத்திக்கொள்ள ஏ ஆர் முருகதாஸ்-கு  என்ன தயக்கமோ??? நமக்கு தெரியவில்லை?
Nivetha Thomas darbar
Darbar- Rajinikanth-Nivetha Thomas
நிவேதா
இந்த படம் நிச்சயம் ஒரு திருப்புமுனையாக அமையும். மகளாக மட்டுமில்லாமல், சூப்பர் ஸ்டார்க்கு காதலிக்க கற்றுத்தரும் காட்சிகளிலும் சரி, நயன்தாராவை கரெக்ட் பண்ண கொடுக்கும் ஐடியாக்களை நட்சத்திரமாக ஜொலிக்கிறார். 
யோகிபாபு
 காமெடி அட்டகாசம், சூப்பர் ஸ்டாரை கலாய்க்கும் நேரங்களில், வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார். கவுண்டமணிக்கு பிறகு, சூப்பர் ஸ்டாரை கலாய்க்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருப்பது ரசிக்கும் படியாக உள்ளது.
பிற்பாதியில் ஒட்டாமல் இருக்கும் வில்லனுக்கு அழுத்தம் கொடுக்க நினைத்து இருப்பது, திரைக்கதையை பின்னுக்கு இழுத்தது போல் தான் தெரிகிறது. மற்றபடி சூப்பர் ஸ்டாரை இந்த அளவிற்கு கம்பீரமாகவும், நேர்த்தியாகவும், நையாண்டி செய்யும் வழக்கமான கதாபாத்திரத்தில் காட்டியிருக்கும் விதம் முத்திரை பதிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார் என்றவுடன் ஏற்பட்ட பரபரப்பு, சில நேரத்தில், நமக்கு சிறிது பயத்தை கொடுத்தது. பாடல் வெளியிடப்பட்ட உடன், அது ஐயப்ப பாடலின் காப்பி என்று அனைவரும் சொன்னபோது, சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு நெஞ்சே வெடித்து விடும் அளவிற்கு, வேதனை எழுந்தது. என்னடா இந்த பையன் இப்படிப் பண்ணிட்டானே, என்று ஆத்திரமும், அழுகையும் வந்தது. ஆனால், படத்தில் பார்க்கும்போது அனிருத் அப்படி நமக்கு ஒன்றும் மோசம் செய்து விடவில்லை. பாடல்கள் கேட்கும்படியாக உள்ளது. பின்னணி இசை மிரட்டலாக அமைத்துள்ளது.  சூப்பர் ஸ்டாருக்கு பாட்ஷா படத்தில் அமைந்த அந்த தோரணையை ஏற்படுத்தியிருக்கிறார் டைரக்டர். 
Rajinikanth-And-Nayanthara-At-Darbar-
Rajinikanth-Darbar-AR murugadoss

மொத்தத்தில் தர்பார் இனிப்பு பொங்கல்.

Today News