கொரோனா வைரஸ் – ஐடி கம்பெனிகளை தடை செய்ய வேண்டும் – பார்த்திபன் கோரிக்கை

 கொரோனா வைரஸ் – ஐடி கம்பெனிகளை தடை செய்ய வேண்டும் – பார்த்திபன் கோரிக்கை

parthiban about corona virus covid-19 lock down 2

parthiban about corona virus covid-19 lock down 2
parthiban about corona virus covid-19 lock down 2

கடந்த 6 மாதமாக உலகில் மிகப்பெரிய உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிக்க, உலகம் ஒரே அணியில் ஒன்றுதிரண்டு, ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தி, அதை கடுமையாக்கி, மக்களை காத்திட பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

சுமார் 120 நாடுகளும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை, வீரியத்தை சகிக்க முடியாமல், திணறி வருகின்றனர். வல்லரசு அமெரிக்காவில் கூட சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளதால், மாபெரும் சோகத்தில் உள்ளது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் கூட, ஜப்பானின் தாக்குதலால் அத்தனை பேர் உயிரிழக்கவில்லை என்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இதுவரை அப்பேர்ப்பட்ட மாபெரும் உயிரிழப்புகளை, பல நூற்றாண்டுகளாக அமெரிக்கர்கள் பார்த்ததில்லை. இதுதான் முதல்முறையாக, கொத்துக் கொத்தாக, செத்து விழும், அமெரிக்காவில் அரங்கேறி வருகிறது.

அதைப்போலவே ஸ்பெயினிலும், இத்தாலியிலும், பிரான்சிலும் பல ஆயிரக்கணக்கான பேர் கண்முன்னே பலியாகி வருவதை, அம்மக்கள் கண்டு, மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அந்த நாட்டு அரசுகளும், பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றன. அப்பேர்ப்பட்ட மோசமான ஒரு வைரசுக்கு, உலகமே அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில், சில நாடுகள் நோயின் வீரியத்தை உணர்ந்து, உத்தரவை மிகக் கடுமையாகவும், ஊரடங்கு உத்தரவை தளர்த்தியும் வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவில் மிகக்கடுமையாக இப்பொழுது கடைபிடிக்கப்படும் ஊரடங்கு உத்தரவு, அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் ஒதுக்கி, ஓரளவு மக்கள் நடமாட அனுமதித்துள்ளது. ஆனாலும், சில மணி நேரங்களே. இதுவே இந்த கொரோனா வைரஸின் பரவலுக்கு காரணமாக அமைந்து விடுமோ என்று பலரும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் வேளையில், ஐடி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் வேலையை துவங்கலாம் என்று, அரசின் அறிவிப்பு, பல்வேறு தரப்பினரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏனென்றால் ஐடி துறைகளில், எத்தனை பேர் வேலை செய்வார்கள் என்பது, யாருக்கும் தெரியாது. நிறுவனங்கள், எத்தனை பேரை வேலைக்கு அழைக்கும் என்பதும் தெரியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நெருக்கடியான நிலையில், ஊழியர்களை நடமாட விடுவது, அவர்கள் மூலம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும். இது தவிர, வேறு எதுவும் நடக்கப் போவதில்லை. ஆகையால் ஊரடங்கு உத்தரவை, ஐடி நிறுவனங்களுக்கு கொடுத்த தளர்வை, அரசு நீக்க வேண்டும் என்று, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் பார்த்திபன். ஆம் அது உண்மைதான். பல்வேறு சமயங்களில் பல்வேறு தருணங்களில் மிகக் கடுமையாக கடைபிடிக்கும் போது, ஐடி ஊழியர்கள் வொர்க் பிரம் ஹோம் என்று, வீட்டிலேயே இருந்து வேலை பார்க்க அறிவுறுத்தப்பட்டு இருக்கும் இந்த சூழ்நிலையில், அலுவலகம் செல்ல வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படவில்லை. ஆகவே அவர்களை அலுவலகத்திற்கோ, அல்லது நடமாட விடுவதோ, சரியாக இருக்காது என்பது, அனைத்து தரப்பினரும் கருத்தாகும். அரசு இது போன்ற முக்கிய முடிவுகளை, சிறிது கடினமாக வேண்டுமென்று, ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Today News