சைலென்ஸ் – Official Trailer – Tamil – R Madhavan, Anushka Shetty – Amazon Original Movie – Oct 2

 சைலென்ஸ் – Official Trailer – Tamil – R Madhavan, Anushka Shetty – Amazon Original Movie – Oct 2

Silence – Official Trailer – Tamil – R Madhavan, Anushka Shetty – Amazon Original Movie -Oct 2

Silence – Official Trailer – Tamil – R Madhavan, Anushka Shetty – Amazon Original Movie -Oct 2

Silence – Official Trailer (Tamil) R Madhavan, Anushka Shetty | Amazon Original Movie | Oct 2

சைலன்ஸ் ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப்படத்தில் அனுஷ்கா இசைக் கலைஞராகவும், அவருக்கு ஜோடியாக மாதவன் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் அஞ்சலி, ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசன், ஷாலினி பாண்டே, சுப்புராஜ் என்று பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது. மதுகர் இயக்கத்தில், கோனா வெங்கட் திரைக்கதை அமைக்க, கோபி சுந்தர் இசையில், ஷானில் டியோ ஒளிப்பதிவு செய்ய மிக பிரம்மாண்டமான தயாரிப்பாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவர தயாராக இருக்கும் படம் தான் சைலன்ஸ். நிசப்தம் என்ற பெயரில் தமிழில் வெளிவர இருந்தது. ஆனால் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் சைலன்ஸ் என்ற பெயரிலேயே வெளியிடுவதால், தமிழிலும் சைலன்ஸ் என்ற பெயரிலேயே வெளிவிட வெளியிட படக்குழு முடிவு செய்தது. கொரோனா வைரஸ் காலத்தில் படப்பிடிப்பு நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்த போதும், பெரும்பான்மை காட்சிகளையும் முன்னரே முடித்துவிட்ட காரணத்தினால், படம் முழுமையாக தயாரிக்கப்பட்டு விட்டது.

தியேட்டரில் வெளியிட தற்போது முடியாத காரணத்தினாலும், கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி கொண்டிருப்பதாலும், வைரஸின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்று அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளாலும், திரைப்படங்கள் தற்போது ஒடிடி தளத்தில் வெளி வருவதை தவிர்க்க முடியாது போனது. ஆகவே சைலன்ஸ் திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளி வருவதை தவிர்க்க முடியவில்லை. எனினும் படத்தின் பிரம்மாண்டம் கருதி அதன் விளம்பர வேலைகள் சற்றே பெரிய அளவில் நடந்து வருவதை நாம் பார்க்க முடிகிறது.

என்னதான் விளம்பரம் செய்தாலும், படத்தில் சரக்கு இருக்கவேண்டுமே, ஆம் இந்த படத்தில் அத்தனை துல்லியமாக பல்வேறு காட்சிகளை, பல்வேறு நாடுகளில் படம் பிடித்திருக்கிறார்கள். இசையும், காட்சி அமைப்புகளுக்கு ஏற்ப, மிக தத்ரூபமாக அமைக்கப்பட்டிருப்பது. ஷானில் டியோ ன் பங்கு மிக முக்கியமானது. என்றாலும், அனுஷ்காவின் நடிப்பில் வெளிவரும் இந்த படம் நிச்சயம் அவரது திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Today News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *