பசி என்னும் அரக்கன்! பதறும் அரசுகள்???

 பசி என்னும் அரக்கன்! பதறும் அரசுகள்???

lockdown-extension-leads-to-starvation-death in the world and India

lockdown-extension-leads-to-starvation-death
lockdown-extension-leads-to-starvation-death

மனிதன் தோன்றிய நாள் முதல், மனிதனுக்காக மொழிகளும், பழக்க வழக்கங்களும், கலாச்சாரங்களும், புதிய நாகரிகங்களும், நாடு, நகரங்களும், உருவாக்கப்பட்டு, வளர்ந்து வருகின்றன.

20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இந்த மனித இனம், இன்று வரை வாழ்ந்து வருகிறது. ஆனால், மனித குலத்துடன் போட்டியிட்ட, எந்த ஒரு உயிரினமும் இன்றைக்கு, உலகில் வாழவில்லை, ஒன்று தானாகவே அழிந்து விட்டது, இல்லை எனில் அழிக்கப்பட்டது.

இயற்கையில், இயற்கையால் அழிக்கப்பட்ட உயிரினங்கள் எண்ணற்றவை. மனிதனால் அழிக்கப்பட்ட உயிரினங்களும் கணக்கில் அடங்காதவை. இப்படி மனித இனம் மாபெரும் வலிமையுடன் வளர்ந்து வருவதற்கான காரணம் இரண்டு தான். ஒன்று இனப்பெருக்கம், மற்றொன்று, உணவு பொருள் பெருக்கம்.

இனப்பெருக்கம் இயற்கையாய், இயற்கையால் வடிவமைக்கப்பட்டது. அதன் வலிமையால் உலகில் உள்ள ஜீவராசிகளை எதிர்த்து, மனிதனால் போராடி வெற்றி கொள்ள முடிந்தது. லட்சம் ஆண்டுகளாக வெற்றிகரமாக வாழ்ந்து வர முடிகிறது. இந்த மாபெரும் பிரபஞ்சத்தில், இப்படி மனித இனத்தை போன்ற ஒரு உயிரினம் இருக்கிறதா? என்பதை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வந்தாலும், மனித அறிவுக்கு எட்டிய வகையில், இதுவரை இப்படி ஒரு உயிரினம் வேறெங்கும் வாழ்வதாக நமக்குத் தெரியவில்லை. ஒற்றை செல் உயிரிகள், மீன்கள், பாம்புகள், முதலைகள், ஆமைகள் என்று உலகில் மிகப் பழமையான உயிரினங்கள் இன்றும், இயற்கை கொடுத்தபடியே நம்முடன் வாழ்ந்து வருகின்றன. ஆனாலும் மனிதனை விட வலிமையாக இருப்பதாக நாம் சொல்ல முடியாது.

அப்படி மனிதன் வலிமையாக வாழ்வதற்கு இரண்டு காரணங்களை நாம் உற்றுப் பார்த்தோமானால், இனப்பெருக்கம் மிக முக்கியமானது. ஏன்? இனப்பெருக்க வழிமுறைகள் மனிதன் ஒரு மாபெரும் சக்தி ஆவதற்கு, முக்கிய காரணம் ஆகிறது. என்றால், ஒரு கோழி வாழ்நாளில் நூற்றுக்கணக்கில் முட்டைகளை இடுகிறது. கொசு தன் வாழ்நாளில் லட்சக்கணக்கான முட்டைகளை இடும். மாடு தனது வாழ்நாளில் பத்திலிருந்து பதினைந்து வரை குட்டிகளை ஈனும். ஆடு தனது வாழ்நாளில் பத்திலிருந்து இருபது வரை குட்டிகளை பெற்றெடுக்கும். ஒரே ஒரு நாள் மட்டுமே வாழ்ந்து உயிரை விடும் கொசுக்கள் லட்சக்கணக்கில் முட்டைகள் இடும்.

இப்படி பத்திலிருந்து, சில லட்சங்கள் வரை குட்டிகளை பெரும், உயிரினங்கள், ஏன்? வலிமை பெறவில்லை என்ற கேள்வி இங்கே எழுகிறது. தன் வாழ்நாளில் பத்திலிருந்து இருபது குழந்தைகளை மட்டுமே பெறக்கூடிய ஒரு மனித இனம், எப்படி? தனது ஆரம்ப காலங்களில், தங்களை விட வலிமையான, உயிரினங்களை எதிர்த்து வாழ முடிந்தது, என்று கேள்வி, இன்றைய நிலைக்கு சரியான கேள்வியாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் உணவு தேவையை எதிர்கொண்ட மனித இனத்தின் புத்திசாலித்தனம் தான்.

உயிரினங்கள் தோன்றிய காலங்களில் இருந்தே, உணவுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இயற்கையாய் பெற்றுக் கொண்டது போக, செயற்கையாய் உணவை உற்பத்தி செய்ய தொடங்கியதிலிருந்தே, மனிதன் வலிமையான ஒரு உயிரினமாக மாறத் தொடங்கினான். அல்லது இயற்கை என்ன கொடுத்ததோ? அதை தாண்டி, தனது அறிவைப் பயன்படுத்தி, உணவை அபகரிக்க, அல்லது கைப்பற்ற ஆரம்பித்ததிலிருந்து மனிதன் வலிமையானவன் ஆக மாறினான், என்றே கருத வேண்டியிருக்கிறது.

ஒரு காட்டில் வாழும் சிங்கம் மிக வலிமையானது. கூட்டமாக சென்று வேட்டையாட கூடியது. ஒரு சமயத்தில், ஐந்திலிருந்து பத்து குட்டிகளை இடும். சிங்கம் பல கிலோமீட்டர்கள் வரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். வேட்டைக்கு வந்து விட்டால், தப்பி விடுவது அவ்வளவு எளிதல்ல. எந்த உயிரினங்களையும், சர்வசாதாரணமாக சாய்த்து விடும். அந்த மிருகத்திற்கு இணையாக மனித இனம் வாழ்ந்து இருக்க முடியுமா? என்கிற கேள்வி நமக்கு எழுகிறது. சிங்கத்தைப் போலவே மாமிச பட்சிணிகள் ஆயிரக்கணக்கான ஜீவராசிகள், வாழ்ந்து வந்த போது, மனித இனம் வெற்றி கொண்டு, இன்றுவரை வாழ்ந்து வருவதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

எப்படி எடுத்துக் கொள்வது? என்று இந்தக் கேள்வி இன்றைக்கு கேட்கப்படுகிறது. உணவுக்கான தேடல், ஒவ்வொரு உயிரினத்திற்கும் வேறுபடுகிறது. அந்தத் தேடல்தான், இன்றைக்கு மனித இனத்தின் இந்த வெற்றிக்கும், வலிமைக்கும் காரணம் என்று தான் சொல்ல வேண்டும். இனப்பெருக்கம் செய்து விட்டாலும் கூட, உணவு இல்லை என்றால், இறந்து போக வேண்டியதுதான். இதை மனித இனம் தோன்றிய நாளில் இருந்தே, சரியாக புரிந்து கொண்டது. ஏன் எல்லா உயிரினங்களும் புரிந்து கொண்டுள்ளன. விலங்குகளுடன், விலங்குகளாக வாழ்ந்து, அப்படியே இறந்து போய் போயிருந்தால் இன்றைய உலகம் தோன்றியிருக்காது என்பதுதான் எம்முடைய கருத்து.

அப்படி மிருகங்களுக்கும் தனக்கும் உள்ள வேறுபாட்டை, மனிதன் எப்படி முதலில் அறிந்து கொண்டான். மிருகங்கள் தனக்கான தேவையிலிருந்து உணவை, வேட்டையாடி உண்கின்றன. அல்லது இயற்கை தரும் உணவை பெற்றுக் கொள்கின்றன. சில நேரம் உயிரினங்கள் பகிர்ந்து வாழ்கின்றன. அல்லது தனித்தனியே கூட வாழ்கின்றன. கூட்டமாக வாழும் சில உயிரினங்களும், நரிகள், ஓநாய்கள், காட்டு நாய்கள், சிங்கங்கள் என்று பல உயிரினங்கள் கூட்டமாக சென்று வேட்டையாடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றன. அப்படி உணவுத் தேவையை அவை எப்படி பகிர்ந்து கொண்டன?

மனிதன் எப்படி அதை எடுத்துக் கொண்டான்? மிகச் சிக்கலான ஒரு பதிலை நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் மிக சுலபமான ஒரு வழியும் இருக்கிறது. இனப்பெருக்கம் செய்வது வலிமையைக் கொடுக்கிறது என்றால், அந்த இனப்பெருக்கத்திற்கான மூல ஆதாரமான உணவை, சரிசமமாக பகிர்ந்து கொள்வதன் மூலம், இந்த இனப்பெருக்கம் பூர்த்தியடைந்தது. உணவு பங்கீடு மட்டுமே இந்த மனித இனம் வலிமையடையும் என்பதை, மிருகமாக இருந்த மனிதன் உணர்ந்து கொண்டதன் விளைவுதான், மனித இனத்தின் வலிமையான ஒரு அமைப்பு, தோன்றி வளர்ந்து வந்திருக்கிறது. அப்படி இந்த உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்வதில், மனிதன் காட்டிய அக்கறைதான், மனித குலத்தின் மொழிகள், நாகரிகம், அதன் வளர்ச்சி, இன்று காணும் மற்ற அனைத்து விஷயங்களும்,.

அப்படி மனிதகுலம் அத்தனை ஆண்டு காலம் செய்து வந்த, ஒரு விஷயம், தேவை, வழிமுறைகள், சமுதாய வளர்ச்சி பெற்று, மனிதர்களுக்கும் நாகரிகம் தோன்றி, வலிமையாக இருந்த நேரங்களில் உருவான அரசுகள், பெருங்குடிகள், சிக்கலை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்கள், போராட்டங்கள், புதுமைகள் என்று கூடவே தோன்றவும் செய்தன. அவ்வப்போது ஏற்படும் உணவு பற்றாக்குறையை, கவனிக்கத் தவறிய பெருங்குடிகளும், ஒன்றிய அரசுகளும், ஆகாயத்தில் தூக்கி எறியப்பட்டன. இப்படி பல்லாயிரம் ஆண்டுகளாக, மக்களின் அடிப்படைத் தேவையான உணவை, உணவுத் தேவையை, கவனிக்காத அரசுகள், மண்ணைக் கவ்வியது.

என்னதான் எங்களுக்கு பட்டு குஞ்சம் கட்டினாலும், பட்டினி சாவுகளுக்கு வெவ்வேறு காரணங்களை சொல்லிக்கொண்டாலும், பல்லாயிரம் ஆண்டுகளாக, இன்றுவரை, அரசு கவிழும் நிலை வந்தால், அதற்கு மூல காரணம் பட்டினி என்கிற ஒற்றைச் சொல்தான்.

அதைத்தான் உலகம் இன்று பார்த்துக்கொண்டிருக்கிறது. முப்பது நாட்களாக, ஊரடங்கு உத்தரவை போட்டுவிட்டு, ஏசி அறையில் அரசுகள் அமர்ந்துகொண்டு, வேடிக்கை பார்க்குமானால், காலம் காலமாக, மனித நாகரிகம் செய்துவந்த, செய்ய வேண்டிய கடமை, இந்த அரசுகளை தூக்கி எறிந்து, மக்களை கவனிக்கக் கூடிய, மக்களின் பசியை ஆற்றக்கூடிய, பட்டினிச் சாவுகளை தடுக்கக்கூடிய, திறன் படைத்தவர்களை, ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவார்கள். இதுதான் உயிரினம் தோன்றியதிலிருந்து நாம் பார்த்து வரும் விஷயம்.

அரசுகள், அப்படி அக்கறை இல்லாமல், அலட்சியமாக, ஆற அமர, அமர்ந்து, அரசாட்சி செய்ய நினைத்தால், மக்கள் அசுர பலத்துடன், அரசை, அக்கு வேறாக, ஆணி வேறாக அடித்து, ஓரங்கட்டப்படும் என்பதை, இன்றைய அரசுகள், அவ்வப்போது, அடிமனதில் நிலைநிறுத்த வேண்டும் என்பது, உழைக்கும் மக்களின் கட்டளை.

Today News

1 Comment

  • ,இன்னும் எலிய முறையில்

Comments are closed.