அக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம் ராகவா லாரன்ஸ் புதிய சாதனை

 அக்ஷய் குமார் மிரட்டும் லட்சுமி பாம் ராகவா லாரன்ஸ் புதிய சாதனை

Laxmmi-Bomb-Official-Trailer–Akshay-Kumar

Laxmmi-Bomb-Official-Trailer--Akshay-Kumar
Laxmmi-Bomb-Official-Trailer-Akshay-Kumar

Laxmmi Bomb Official Trailer

தற்போது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் கீரா அத்வானி கதாநாயகியாக நடிக்க ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் படம் லக்ஷ்மி பாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. சுமார் ஒரு கோடியே 30 லட்சம் பேர் வரை பார்த்து உள்ள இந்த படம், தமிழில் வெளிவந்த காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக்.

வழக்கமாக பாலிவுட் திரைப்படங்களைத் தான் மற்ற மொழிகளில் ரீமேக் செய்வார்கள். இப்போது தமிழில் வெளியாகி வெற்றி நடை போட்ட காஞ்சனா திரைப்படத்தை ரீமேக் செய்ய முன்னணி நட்சத்திரம் அக்ஷய்குமார் களமிறங்கியது, ஒரு பெரும் பரபரப்பையும், மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் இந்தியா முழுவதும் உருவாக்கியது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில், லட்சுமி ராய் நாயகியாக நடிக்க, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி என பலர் நடித்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் காஞ்சனா. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் திருநங்கையாக நடிக்க அந்தப் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் எல்லா பக்கத்திலிருந்தும் பாராட்டும், பெரும் புகழையும் லாரன்ஸ் பெற்றார். இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தது மட்டுமல்ல இந்த படத்தை இயக்கியதும் அவரே.

ஏற்கனவே வெளிவந்த முனி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நேரத்தில், காஞ்சனா திரைப்படம் அதைவிட பிரமாண்டமாக ஒரு வெற்றியைப் பெற்றது. ராகவா லாரன்ஸுக்கு பாலிவுட்டில் வந்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வாரா? என்று டிரைலர் வெளிவரும்போது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. காஞ்சனா திரைப்படம் தமிழில் இருந்தது போல, ஒரு பிரம்மாண்டமும் இருக்க வேண்டும் என்று தமிழக ரசிகர் மட்டுமல்ல, இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், லக்ஷ்மி பாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இப்படி ஒரு பிரம்மாண்டத்தை ஏற்படுத்தி இருப்பதும், இதுவரை 13 கோடிபேர் இந்த ட்ரைலர் பார்த்து உள்ளனர், இது இந்திய அளவில் புதிய சாதனையாகும். தமிழ் ரசிகர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி உருவாக்கியுள்ளது. ராகவா லாரன்ஸ் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்து இருக்கிறார். இயக்கத்திலும் அவர் ஒரு மைல் கல்லை எட்டி விட்டார் என்றே சொல்ல வேண்டும் என்ற அளவிற்கு, டிரைலரும் மிரட்டலாக வெளிவந்திருக்கிறது. இதிலிருந்து இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எந்த அய்யமும் இல்லை வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ்!

Today News