55 கோடிக்கு விலைபோன தலைவி

 55 கோடிக்கு விலைபோன தலைவி

Kangana Rranaut as Thalaivi

Kangana Rranaut as Thalaivi
55 கோடிக்கு விலைபோன தலைவி

Kangana Rranaut as Thalaivi

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பின் விளைவாக ஏ படம் பட்டு வெளியிட தயாராக இருந்தது.

இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக கொரோனா வைரஸ் தாக்குதல் ஆரம்பமாக, தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டதால், தலைவி திரைப்படம் வெளியிடப் படாமல் நிறுத்தப்பட்டது. பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், வெளியிடப்படாமல் இங்கிருப்பது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை தந்து கொண்டிருந்த போதிலும், படத்தை ஆன்லைன் பிளாட்பார்மில், விற்பதற்கு நிறுவனம் தயாராக இருப்பதாகவே நாம் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அமேசான் மற்றும் நெட்ப்ளிக்ஸ் ஆகிய இணையதள நிறுவனங்களுக்கு, இதன் ஓ டி டி உரிமையை 55 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது இந்த திரைப்பட நிறுவனம்.

ஆனாலும் இந்தப் படம் ஓ டி டி யில் வெளிவரப் போவதில்லை.இதுபற்றி படத்தில் ஜெயலலிதாவாக நடித்துள்ள, கங்கனா ரணவத் திடம் கேட்டபோது, ஓ டி டி பிளாட்பார்மில் இந்த திரைப்படங்கள் வெளி வருவதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பியபோது, சில படங்கள் ஆன்லைன் பிளாட்பார்ம் உக்கு தகுந்தவாறு எடுக்கப்படுகிறது. பொருட்செலவும், மொத்த நாட்களும், கால் சீட்டுகளும் கணக்கிட்டு அதன் வியாபாரம் முடித்துக்கொள்வது எளிமையாகத்தான் இருக்கிறது.

இந்தி மொழியில் வெளியான சில படங்கள் ஓ டி டி பிளாட்பார்மில் வெளிவந்ததை நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனாலும் தலைவி போன்ற பெரிய பட்ஜெட்டில், கோடிக்கணக்கான மக்கள் பார்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில், உருவாக்கப்பட்ட வரலாற்று திரைப்படம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், தனது முத்திரையைப் பதித்த, ஒரு மாபெரும் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை, திரைப்படமாக உருவாக்கும் பொழுது, அது ஆன்லைன் மூலமாக வெளியிடுவது, சரியாக இருக்காது என்பது எனது கருத்து என்று நெத்தியடியாக பேசினார்.

ஆகமொத்தத்தில் தியேட்டர் திறக்கும் வரை தலைவி வெளியாகாது என்று உறுதியாக நம்பலாம் என்றாலும், ஆன்லைன் ண்ணுக்கே 55 கோடி ரூபாய் வியாபாரம் செய்யப்பட்டது என்றால்? தியேட்டர்களுக்கு என்ன விலை போகும்? என்று இப்போதே தயாரிப்பாளர்கள் தலையை பித்து கொள்ள துவங்கி விட்டார்கள்.

Today News