ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன் விஜயகாந்த்

 ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன் விஜயகாந்த்

HBDVijayakanth

HBDVijayakanth

#HBDVijayakanth

கருப்பு எம்ஜிஆர், புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்த் என்று தமிழ் மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சிலர் வாழ்ந்து புகழ் சேர்ப்பார்கள், சிலர் பிறந்ததே புகழை சேர்க்கத்தான் எனும் அளவிற்கு தனது கடின உழைப்பாலும், நேர்மையாக நடைத்தையாலும், சிதறி விடாத சேவையாலும், தமிழகத்தின் ஏழைகளின் நெஞ்சத்தில், சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இது புகழ்மாலை.

நடிகர்களில் பலர், நான் இன்று அரசியலுக்கு வருவேன், நான் நாளைக்கு வருவேன், நீங்கள் அனைவரும் வந்து, இமயமலையை தூக்கி என் தலையில் வைத்தால் தூக்குவேன் என்று வீராப்புடன், பரபரப்பாக பேசி, பாவ்லா காட்டி வரும் இந்நாளில், நான் அரசியலுக்கு வருவேன், உங்களுக்கு சேவை செய்வேன் என்று, மக்களுக்கு முழங்கிய வண்ணமே, அரசியல் கட்சி துவங்கி, அத்தனை அரசியல்வாதிகளையும் ஆட்டம் காண்பித்து, இன்றுவரை தமிழக அரசியலின், சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் கேப்டன் விஜயகாந்த் இல்லாமல், இன்றைக்கு தமிழக அரசியலில் எதையும் முடிவு செய்துவிட முடியாது.

சுமார் 20 லட்சம் பேர் வரை துவக்க விழாவுக்கு வந்து இருந்தார்கள் என்றால் இந்த 50 ஆண்டு காலத்தில் அது கேப்டன் விஜயகாந்த் துவக்கிய தேசிய திராவிட முற்போக்கு கட்சி துவக்க விழா வாகத்தான் இருக்கும், என்று இந்தியா டுடே பத்திரிகை கட்டுரை எழுதும் அளவிற்கு இந்தியா முழுவதும் புகழ் பெற்ற ஒரு மாமனிதர். கட்சி துவங்கியதில் இருந்தே கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொல்லி கம்பீரமாக வலம் வந்தவர் கேப்டன். ஆனாலும் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள் என்று விழுந்தவர்களுக்கு, அபயம் அளிக்க கூட்டணியில் சேர்த்துக் கொண்டார், சேர்ந்து கொண்டார், பயணம் மேற்கொண்டார். இப்படி அரசியலில் கம்பீரமாக வலம் வரும் கேப்டனின் உடல்நலம் நலிவடைந்த போது கொக்கரித்து சிரித்தவர்கள் சிலர் ஆனாலும் எழுந்து வருவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் பலர்.

சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, நாயகனாக 150 படங்களுக்கு மேல், தனது கடின உழைப்பாலும், சிரித்த முகத்தாலும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அன்பாலும், தமிழ் திரை உலகின் பொன்னேட்டில் பெயர் பதிக்க வேண்டிய அளவுக்கு உயர்ந்தவர், தமிழ்த்தாயின் தலைமகன் கேப்டன் விஜயகாந்த். இவர் நடித்த ஆக்ஷன் காட்சிகள் மட்டுமல்ல, சென்டிமெண்ட் காட்சிகள் மட்டுமல்ல, நகைச்சுவையிலும் வெற்றி கொடி நாட்டியவர். கதைக்கு தக்க தன்னை உருமாற்றி, வெகுவாக கவர்ந்து இழுக்கும் வித்தையை கற்றவர்.

நடிப்பு மட்டும் அல்ல நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்ற போது நலிவடைந்து நாசமாய்ப் போய் கிடந்த, நடிகர் சங்கத்தை, தலைமை தாங்கி தன்னிகரற்ற சங்கமாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தரணி எங்கும் புகழ் பரப்ப வைத்த தென்னிந்திய சினிமாவின் மூத்தமகன். கேப்டன் விஜயகாந்த் பற்றி நாளெல்லாம் பேசிக்கொண்டே போகலாம்.

புதிய இயக்குனர்களை வைத்து படம் எடுப்பதற்கு தயங்கிக்கொண்டிருக்கும் இன்று. திரை உலகில் திய இயக்குனர்களை அறிமுகம் செய்துவைக்கும் ஆண்மை மிக்க நடிகன். புதிய இயக்குனர்களை உருவாக்கிய தன்னிகரற்ற தலைவன். இன்னும் என்ன சொன்னாலும் தகும். தங்கத்தை உரசிப் பார்த்தவர்கள் ஒதுங்கிப் போனார்கள். அனைத்து கொண்ட மக்கள் மகிழ்ந்து நின்றார்கள். தமிழ் மக்களின் வாழ்க்கையில் கலந்துவிட்ட இவர் நடிகர் அல்ல, அரசியல்வாதி அல்ல, புன்னகையால் இந்தப் பூவுலகை ஆளும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இந்த மண்ணில் ஒரு மாமனிதர். கேப்டன் பல ஆண்டுகள் நலமுடன் வாழ ஹிட் சினிமாஸ் மனதார தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Today News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *