ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ்

 ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ்

#HappyBirthdayDhanush-2

#HappyBirthdayDhanush
#HappyBirthdayDhanush-2

#HappyBirthdayDhanush

எலும்பும் தோலுமா, டொக்கு விழுந்த கண்ணத்தில் அந்த கண்கள் மட்டும் எதையோ சொல்லுச்சு. ஆனாலும் நடக்க கூட தெரியல, அப்படின்னு முதல் படத்திலேயே மொத்த திரையுலகமும் உதட்டை பிதுக்க, அதே நேரத்துல காத்து தனுஷ் பக்கம் அடிச்சது.

https://youtu.be/5UmaMK_OfPw

முதல் படமே சூப்பர்ஹிட் “துள்ளுவதோ இளமை” 175 நாள் ஓடுச்சு, அதுக்கு அப்புறம் தான் புரிஞ்சது இவங்களுக்கு, தமிழ்நாட்டு ரசிகர்கள் சரக்கு இருக்கிற படத்தையும், பிட்டு சீன் இருக்குற படத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டாங்கன்னு.

அப்புறம் என்ன? பேய் மழை தான். முதல் படம் அப்பாவுடைய டைரக்ஷன்ல சூப்பர் ஹிட், அடுத்த படம் அண்ணனோட டைரக்சன். முதல் படத்தைவிட பிரம்மாண்டமான வெற்றி. காதல் கொண்டேன் படத்தில் நடித்ததற்காக தனுஷுக்கு கிடைத்த பாராட்டை விட, அந்த படத்தை டைரக்ட் பணத்துக்காக செல்வராகவனுக்கும், மியூசிக் போட்டதற்காக யுவன்சங்கர் ராஜாவுக்கும் புதிய உலகம், புதிய வழித்தடம், புதிய மார்க்கெட் உருவாச்சு. தனுஷும் அந்த வெற்றியை சும்மா விடலை. அத புடிச்சுகிட்டு அடுத்த கடலை தாண்ட தயாரானார். திருடா திருடி நினைத்து பார்க்க முடியாத வெற்றி. மன்மத ராசா மன்மத ராசா பாடல் பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்தது. தனுசோட வாழ்க்கையில் மிக திருப்புமுனையான வருஷம். ஒரு 20 வயசுப் பையனுக்கு தாங்க முடியாத வெற்றியை கொடுத்தா, என்ன மாதிரியான விளைவுகள் உருவாகும் அப்படிங்கிறது தனுஷ் வாழ்க்கை தான் நமக்கு தெள்ளத்தெளிவாக காட்டுச்சு.

அதிர்ஷ்டத்தில் சூப்பர் ஸ்டார் ஆனாரா? இல்ல கடுமையான உழைப்பும், திறமையும் இருந்துச்சா? அப்படிங்கறத எல்லாரும் உத்து கவனிச்சுக்கிட்டு இருக்க நேரத்தில, அடுத்த படம் “புதுக்கோட்டை சரவணன் ” ப்ளாப் ஆகி மொக்க வாங்கியது. தனுஷ் இதுக்கப்புறம் தலையெடுக்க முடியாதுன்னு நினைக்கிறவங்க இதை பார்த்து ரொம்பவே சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா இன்னும் முடியல, இதே வருஷத்துல வெளியான சுள்ளான் திரைப்படமும் மோசமா இருக்க, இதேபோல, தனுஷோட அப்பா கஸ்தூரிராஜா இயக்குனர் டிரீம்ஸ் திரைப்படமும் சொதப்ப, தனுஷை பார்த்து கை கொட்டி சிரித்தது தமிழ் திரையுலகம்.

ஆக, தனுசுக்கு அடிச்சது, அதிர்ஷ்ட காத்து. அதுல எல்லா படமும் ஹிட் ஆயிடுமா? அப்படின்னு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் வம்பு பேசிட்டு இருக்க நேரத்துல, தனுஷுக்கு உண்மையிலேயே நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சா படமா தேவதையை கண்டேன் படம் அமைந்தது. அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை படம் சரியாக போகல. திரும்பவும் ஒரு சறுக்கல். ஆனா அதுக்கப்புறம் பூபதிபாண்டியன் இயக்கத்தில் வந்த “திருவிளையாடல் ஆரம்பம்” திரைப்படம் சும்மா நச்சுனு ஒரு வெற்றியை பதிவு பண்ணுச்சு.

அதுக்கப்புறம்தான் ஆரம்பிச்சது தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி. 2007 பொல்லாதவன் திரைப்படம். கஷ்டப்படுற சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பத்து இளைஞன். அவனை ரவுடிகள் சீண்டினால் என்ன ஆகும்னு சொல்லி ஒரு பிரம்மண்டமான வெற்றி திரைப்படத்தை வெற்றிமாறன் கொடுக்க, அந்த இளைஞன் கதாபாத்திரத்துக்கு பொருத்தமா, ஒரு துளியும் எக்ஸ்ட்ரா நடிக்காமல், தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார் தனுஷ். இந்தப் படம் இமாலய வெற்றி பெற்றது மட்டும் இல்ல. இதுக்கு அப்புறம் தனுஷ் தொட்டதெல்லாம் பொன்னாகும் அப்படிங்கிற ஒரு நம்பிக்கையை உருவாக்கியது.

2008ல் யாரடி நீ மோகினி திரைப்படம் தனுஷ் ஓட இன்னொரு பக்கத்தை காட்டியது. ஊதாரி ஊர் சுற்றும் இளைஞன் காதலுக்காக எப்படி ஒரு புது மனுஷனா மாறுகிறான் என்ற கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், நெனச்சி பார்க்க முடியாத அளவுக்கு, இளைஞர்களுடைய கனவை நனவாக்க இந்த படம், இசை, நடிப்பு, அப்படின்னு சொல்லி ஒட்டுமொத்தமாக பிளாக்பஸ்டர் ஹிட் ஆயிடுச்சு. இதுல வேற நயன்தாரா ஜோடி. தனுஷோட நடிப்பு ஒருபடி மேல போயிடுச்சு. “எனக்கு பசிக்குது, ஏதாவது சாப்பிட இருக்கான்னு” கேட்கிற எடத்துல, யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த காட்சியில் யாரும் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது. நிச்சயமாக அந்தப்படம் தனுஷோட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை தான்.

அப்புறம் வெற்றிமாறன் கூட்டணியில் ஆடுகளம், படிக்காதவன், மாப்பிள்ளை, மயக்கம் என்ன, ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அஞ்சனா, வேல்ராஜ் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி, பொன் பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி, ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கொடி, இதற்கெல்லாம் பிறகு தனுஷ் அவரே இயக்குன பா பாண்டி, ஆகிய படங்கள் தனுஷோட மார்க்கெட்டை முன்னணி நட்சத்திரத்திலிருந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது.

அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு ஹாலிவுட்ல கால்தடம் பதித்த தனுஷ் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி அப் தி பகிர் என்ற திரைப்படத்தின் மூலமா ஹாலிவுட்டிலும் தன்னுடைய முத்திரையை பதித்த தனுஷுக்கு, இன்னொரு சூப்பர் ஹிட் படம் அந்த வருஷத்திலேயே காத்திருந்தது. சென்னை வரலாற்றை மீள் உருவாக்கம் செய்யும் முறையை முயற்சியில் பல வருஷம் பாடுபட்டு வெற்றி மாறன் உருவாக்கின வடச்சென்னை அப்படிங்கிற ஒரு தாதா கான்செப்ட் படத்த கொண்டுவர அந்த படம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது.

அதே 2018 ல மாரி 2 படத்தை பாலாஜி மோகன் தயாரிச்சு வச்சிருந்தாரு. அந்தப் படமும் வெளியாகி தனுஷோட தடத்த மாற்றி அமைத்து ஹிட் அடிச்சுது. இதுக்கு அப்புறம் தனுஷ் எது பண்ணாலும் அது முன்னாடி நடிச்ச படத்தோட வெற்றியை கொஞ்சமும் பாதிக்காத அளவுக்கு நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளிட்ட ஆக ஒரு சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு ரசிகர்கள் அவர பாக்க ஆரம்பிச்சாடாங்க.

ஆனா இதையெல்லாம் தாண்டி வெற்றி மாறன் உடைய அடுத்த படைப்பு 2019-ல் வெளியாகும்போது தான் உண்மையிலேயே தனுஷ் உடைய ஒரு புதிய பரிணாமத்தை எல்லாம் பாக்க முடிஞ்சது. இதுவரைக்கும் வயதான கெட்டப்பில் தனுஷ் செட் ஆவாரா? என்று யோசித்துக்கொண்டு இருக்கிற நேரத்துல “அசுரன்” திரைப்படம் வெளியாகி பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் ஒரு தலித்தாக நடித்திருந்த தனுசுக்கு, முகபாவங்களும் அவர்கள் தோரணையும் இந்திய அளவில் பேசப்பட்டது. இப்படியும் தன்னால் நடிக்க முடியும் என்று தனது நடிப்பு தரத்தை கலைஞானி க்கு இணையாக பேசப்பட வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி வைத்துவிட்டார். ஆம் வேறு யாருக்கு இணையாக பேச முடியும்.

உண்மையில் அசுரன் திரைப்படத்தில் தனுஷ் செலுத்திய கவனமும், கொடுத்த உழைப்பும், தமிழக திரை உலக வரலாற்றில் தனுஷின் பெயர் பொன்னேட்டில் பதியப்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அடுத்த தலைமுறை நடிகர் திலகம் என்று சொன்னால் அது நிச்சயம் தனுஷ் தான். அப்படிப்பட்ட மகத்தான இந்த நடிகனுக்கு, ஹிட் சினிமாஸ் தனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Today News