ஹிட்ஸ் சினிமாஸ் ன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் ஆண்டனி

 ஹிட்ஸ் சினிமாஸ் ன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் ஆண்டனி

Happy Birthday Vijay Antony HBDVijay Antony

Happy Birthday Vijay Antony HBDVijay Antony
Happy Birthday Vijay Antony HBDVijay Antony

Happy Birthday Vijay Antony

2005 ஆம் ஆண்டில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் தளபதி விஜயின் சிறப்பு தோற்றத்தில் ரவிகிருஷ்ணா நடித்து வெளியான சுக்கிரன் திரைப்படத்தில் இசை அமைத்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் விஜய் ஆண்டனி.

அன்றிலிருந்து இன்றுவரை இசை அமைப்பிற்கு சிறப்பு கவனம் செலுத்தி வந்த விஜய் ஆண்டனி திரையில் தனது முகத்தை காண்பித்து அதன் மூலம் நடிகராகவும் ஜொலிக்கும் தொடங்கிவிட்டார். சலீம் எமன், பிச்சைக்காரன், சைத்தான் அண்ணாதுரை என்று பல்வேறு வரிசையாக படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன

ஒரு இசையமைப்பாளராக விஜய் ஆண்டனியின் இசை அவரை முன்னணிக்கு கொண்டு வந்தது. துள்ளல் இசை தான் விஜய் ஆண்டனியின் அடையாளம். டிஷ்யூம், சுக்கிரன், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், உத்தமபுத்திரன், அங்காடித் தெரு, பிச்சைக்காரன் ஆகிய படங்களில் அவர் இசை அமைத்ததை எடுத்துக்காட்டாக சொல்லலாம். ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு கோணத்தில் கதையை சொல்லும் பாணிக்கு, அந்தக் கதைக்கு வலு சேர்க்கும் விதமாக அவரது பின்னணி இசையும், பாடல்களும் தெறிக்க விடுகின்றன என்பதில் மாற்றுக்கருத்து கொள்வதில்லை. புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் தமிழ்த் திரையுலகின் நம்பிக்கையான ஒரு இசையமைப்பாளர் என்றால் அது விஜய் ஆண்டனி தான். இசைஞானி இளையராஜாவுக்கு பிறகு அதிக பாடகர்களை அறிமுகப்படுத்தியதும் விஜய் ஆண்டனி தான்

இளம்வயதிலேயே தந்தையை இழந்த விஜய் ஆண்டனி தனது தாயாரின் பராமரிப்பில் பள்ளிப்படிப்பை முடித்து, சென்னை இலயோலா கல்லூரியில் சவுண்ட் என்ஜினியராக பட்டம் பெற்று தமிழ்த்திரை உலகில் அடியெடுத்து வைத்தார்.

இவரது கொள்ளுத்தாத்தா தமிழ் இலக்கிய உலகில் புகழ்பெற்றவர். முதன் முதலில் தமிழ் மொழியில் வெளியான பிரதாப முதலியார் சரித்திரம் எனும் நாவலை எழுதிய மாயவரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் கொள்ளுப் பேரன் விஜய் ஆண்டனி. என்னதான் தாத்தா உலகப்புகழ் பெற்ற மனிதர் என்றாலும், அந்த அடையாளத்தை அவர் வெளிப்படுத்தியதாக இதுவரை தெரியவில்லை ஆனால் அப்படியும் அவரது பெயர் வெளிவராமல் இருக்க முடியாதல்லவா?

தமிழ்த்திரை உலகில் திறமையும், அதை வெளிப்படுத்தும் தனித்துவமான பாங்கும், பெற்ற வெற்றியும், அதை தக்க வைத்துக் கொள்ளும் திறமையும், அதற்குரிய தகுதிகளை வளர்த்துக் கொள்ளும் மனப்பக்குவமும் இருந்தால் மட்டுமே, தொடர்ச்சியாக பயணிக்க முடியும் என்பது தமிழ்த்திரை உலகில் வெற்றி பெற்றவர்களின் வரலாறு. அந்தவகையில் தமிழ்த் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட விஜய் ஆண்டனி, சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர் என்பதில் சந்தேகமில்லை. அவர் மென்மேலும் வளர ஹிட்ஸ் சினிமாஸ் வாழ்த்துகிறது. மேலும் இந்த இனிய நாளில் அவருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

Today News