ஹிட் சினிமாஸ் இன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி விஜய்

 ஹிட் சினிமாஸ் இன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி விஜய்

HAPPY BIRTHDAY THALAPATHY VIJAY

HAPPY BIRTHDAY THALAPATHY VIJAY
HAPPY BIRTHDAY THALAPATHY VIJAY

தமிழ் சினிமாவின் தளபதி விஜய் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

நான் எதிர்பார்க்கும் தளபதி
இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் சில ஹீரோக்கள் தேவைப்படுகிறார்கள்.

இந்தியர்களின் சீரழிவை தடுத்து நிறுத்தவும் இன்றைய இளைஞர்கள் ரவுடிகளாக வராமல் தடுக்கவும், காதல் என்ற பெயரில் தங்களது வாழ்க்கையை வீணாகக் கெடுத்துக்கொள்ளாமல் பொறுப்புடன் தனக்கும், தனது குடும்பங்களுக்கும், இந்த சமூகத்திற்கு பயனுள்ள வகையில் மாறவேண்டும் என்றால்? அதற்கு பல ஹீரோக்கள் சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் இந்த இளைஞர்களுக்காக ஹீரோக்களாக வாழ வேண்டியிருக்கிறது, மாற வேண்டியிருக்கிறது. அவர்களை பார்த்துதான் இந்த சமூகம், இன்றைய இளைஞர் நாளைக்கு பயனுள்ளதாக தங்களை மாற்றிக் கொள்ளும்.

ஆனால் இன்றைய நிலைமை என்ன?
காதல் என்ற பெயரில் ஊரை சுற்றிக்கொண்டு திரியும் ஒரு இளைஞர்கள் ஒரு பக்கம், போதை அது தான் வாழ்க்கை என்று தெரியும் இளைஞர்கள் இன்னொரு பக்கம், சினிமா சிற்றின்பம் என்று இன்னொரு பக்கம், சாதி மதவெறி அரசியல் என்று இன்னொரு பக்கம் என்று ஒட்டுமொத்தமாக இன்றைய இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள்.

இவர்கள் செல்லும் வழி சரியானதாக இருக்கிறது என்றோ இந்த சமூகத்திற்கு பயன்படும் என்றோ அவர்களை ஒழுங்கு படுத்திக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்மால் சொல்ல முடியவில்லை ஏனென்றால் ஒவ்வொரு விஷயமும் விஷமாக இவர்கள் மனதில் விதைக்கப்படுகிறது.

இப்படி வீணாகிப் போகிற இளைஞர்களுக்கு என்று அவர்களின் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளவும் நேர்மையாக வாழவும் சரிபார்த்துக் கொள்ளவும் செம்மையாக்கி கொள்ளவும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தங்களை திறமையானவர்களாக மாற்றிக்கொள்ள அவர்களுக்குத் தேவைப்படும் உந்துதலும் உதவிகளும் இன்றைக்கு எங்கும் கிடைக்கவில்லை பக்கம் திரும்பினாலும் அவர்களை இளைஞர்களை நாட்டின் இரும்புத்தூண் களை பயன்படுத்திக் கொள்ளவே ஒவ்வொருவரும் முயற்சிக்கின்றனர் அதில் பெருவெற்றி திட்டியுள்ளனர் இளைஞர்களை சீரழிவு பாதைக்கு எடுத்துச் செல்வதன் மூலம் இந்த நாட்டின் ஒட்டுமொத்த வளங்களையும் சூறையாட முடியும். இந்த உலகத்தில் விலை மதிக்க முடியாத செல்வம் என்று சொன்னால் அது மனித வளமே இணையாக உலகில் எதுவும் இல்லை ஆக இன்றைய இளமையான இந்தியாவின் இளைஞர்களை மடைமாற்றி சீர் அழிப்பதன் மூலம் நாட்டு பகாசுர நிறுவனங்கள் பெரும் கொள்ளை அடிப்பது சாத்தியமாகி விட்டது சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் பகல் கொள்ளை அடிப்பது இன்றைய அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி விட்டது சீரழிவு கலாச்சாரங்களை உருவாக்குவதற்கு சினிமாக்காரர்களுக்கு இல்லாமல் போய்விட்டது தட்டிக்கேட்கும் இளைஞர்கள் வெட்டிக்கொண்டு சாகிறார்கள் என்றால் பிச்சைக் காசு விட்டு அறிய அரசியல்வாதிகளும் தயாராகத்தான் இருக்கிறார்கள் இப்படி இவர்களை தட்டு கெட்டு தெரியும் இளைஞர்களை தட்டிக்கொடுத்து முட்டுக் கொடுக்க ஒருவருமில்லை ஒரு அரசியல்வாதியும் கை காட்ட முடியவில்லை ஒரு சினிமா ஹீரோவையும் எதிர்பார்க்க முடியவில்லை மொத்தமாக இந்திய இளைஞர்கள் சீரழிவு பாதையில் செம்மையாக நடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இதற்கெல்லாம் ஒரு இளைஞன் ஒரு ஹீரோ ஒரு தலைவன் வரவேண்டும் என்பது எனது அவா இவை அத்தனையும் செய்யத் தேவையில்லை இது இத்தனை தேவை இளைஞர்களுக்கு இருக்கிறது அதில் ஒரு சதவீதம் ஏனோ என்னால் தரமுடியும் என்று நம்புகிற ஒரு மனிதன் அவன் தான் நமக்கு வேண்டும் அப்படி வருகிறவன் மனிதன் அல்ல மாமனிதன் நான் தனி ஒருவன் அல்ல எங்கள் என் தலைவன் இளையதளபதி விஜய் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

Today News