ஹிட் சினிமாஸ் இன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா

 ஹிட் சினிமாஸ் இன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா

Happy-birthday-Surya HBDsurya

Happy-birthday-Surya HBDsurya
Happy-birthday-Surya HBDsurya

Happy Birthday Surya HBDsurya

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் சூர்யா!

1997 ஆம் ஆண்டு நேரு திரைப்படத்தில் அறிமுகமான சூர்யாதான் இன்று இல்லை. இப்பொழுது நாம் பார்க்கும் இந்த துடிதுடிப்பான ஆக்ரோஷமான சாக்லேட் நாயகன் அவர் இல்லை.

ஆக்க்ஷன் படங்களுக்கு ஒத்துவராத முகத்தோற்றம் என்று ஒதுக்கப்பட்ட சூர்யா எப்படி தன்னை மாற்றிக் கொண்டார்? கதாபாத்திரங்களுக்கும் ஒன்றிப் போவது எப்படி? என்பதை விரைவில் உணர்ந்து கொண்டார். நேருக்கு நேர் திரைப்படத்திற்கு பிறகு நான்காண்டுகள் பயிற்சிப் பட்டறையாக பயன்படுத்திக்கொண்டார். நந்தா திரைப் படம் வெளிவரும்வரை சூர்யா என்கிற நடிகர் ஏதோ ஒரு மூலையில் முக்காடிட்டு விளையாடிக்கொண்டிருந்த சின்னப் பையன் தான்.

ஆனால் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த நந்தா திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் சூர்யா பக்கம் பார்க்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு ஒரு நேர்த்தியான புதுமையான நடிப்பை வெளிப்படுத்தினார். பாலாவின் தயாரிப்பு என்றாலும், இயக்குனர் பாலாவிடம் வேலை செய்து விட்டால், உலகில் எந்த இயக்குனரிடமும் வேலை செய்து விடலாம். பாலாவிடம் வேலை செய்யவில்லை என்றால்? அதோ கதிதான். அப்படி இயக்குனர் பாலாவின் மிகச்சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாக இன்றும் சூர்யா இருந்து வருகிறார்.

அதன் பிறகு 2003 ஆம் ஆண்டு வெளிவந்த காக்க காக்க சூர்யாவின் அடுத்த பரிமாணத்தை இந்த உலகுக்கு வெளிக்காட்டியது. காவல் துறை நேர்மையான அதிகாரி, கண்ணுக்குள் இருக்கும் காதல், நண்பர்களை காப்பாற்ற துடிக்கும் துடிப்பு என்று அதிரடியாக கலக்கினார். அதே ஆண்டு வெளிவந்த இயக்குனர் பாலாவின் அடுத்த திரைப்படம் பிதாமகன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்து இருந்தாலும் விக்ரமின் கதாபாத்திரம் மையப் பாத்திரம் என்றாலும் இதிலும் சூர்யாவின் வேறு ஒரு புதிய வழிமுறை வெளிப்பட நகைச்சுவையை இப்படியும் செய்ய முடியும் என்று புதிய கோணத்தில் தனது நடிப்பை மெருகேற்றிக் கொண்டார் அதன் பிறகு இந்திய தலை நிமிர்ந்து பார்க்கும் வகையில் பேரழகன் என்று ஒரு கை தேர்ந்த நடிகராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் ஆயுத எழுத்து அதன் பிறகு கஜினி அதன் பிறகு வாரணம் ஆயிரம் ஆயிரம் அயன் சிங்கம் ஏழாம் அறிவு சிங்கம் 2 சிங்கம் 3 என்று பிரமாண்டமான வெற்றி படங்களை கொடுத்த சூர்யாவின் மார்க்கெட் தாறுமாறாக எகிறியது.

அதே நேரத்தில் தனது நடிப்பை தனது துள்ளலான நடனத்தை ஆக்சன் காட்சிகளை ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வித விதமாக மாற்றி கொடுத்து தனது ரசிகர்களை பெரும் அச்சத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தமிழ்நாட்டின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் அஜித் விஜய் என்று இரு ஜாம்பவான்கள் இடையே எந்த போட்டியும் இல்லாமல் எந்த சமரசமும் இல்லாமல் யாருக்கும் சலித்து போகாமல் நம்பர் 1 நாற்காலிக்கு போட்டியில் இருக்கிறார் என்றால் அது நிச்சயம் சூர்யாதான் தொடர்ச்சியான வெற்றிப்படங்கள் என்று விஜய்க்கும் அஜித்துக்கும் போட்டி போட்டுக்கொண்டு பட்ஜெட்டை கண்ணை மூடிக்கொண்டு வாரி இறைக்கும் தயாரிப்பாளர்களுக்கு சூர்யாவும் என்றும் சளைத்தவரல்ல சூர்யாவின் திரைப்படங்கள் விஜய்க்கு இணையாக வியாபாரம் செய்யப்பட்ட போதிலும் நம்பர்-1 நாற்காலிக்கு அவரது பெயரும் அடிபடுவதை யாராலும் தடுக்க முடியவில்லை.

தமிழ் திரை உலகில் ஜாம்பவானாக விளங்கி சிவக்குமாரின் மகன் சரவணன் என்று மாறி சூர்யாவின் தந்தை சிவக்குமார் என்று பேசும் அளவிற்கு இந்தியாவெங்கும் தனது நடிப்பாலும் தனது நடவடிக்கைகளாலும் பொதுவெளியில் தைரியமாக இயங்கும், கருத்தாழமிக்க நேர்கொண்ட பார்வையும் சமூக வெளியிடும் சினிமா துறையிலும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியாவின் எதிர்காலம் ஆக இருக்கிறார் சூர்யா அரசியலுக்கு வருவேன் நான் வருவேன் நாளை மறுநாள் வருவேன் அடுத்த ஆண்டு வருவேன் என்று ஆருடம் பார்த்துக்கொண்டு தமிழ் திரையுலக நடிகர்களுக்கு மத்தியில் தன்னுடைய அரசியலை நேர்மையாகவும் தைரியமாகவும் பொதுவெளியில் வைக்கத் தெரிந்த உண்மையான ஆண்மகன் சூர்யா யாருக்கும் கொஞ்சமும் பயம் இன்றி கல்விக்கான தனது தேடலை இளைஞர்களின் தடைகளை மாணவர்களின் பிரச்சனைகளை பொதுவெளியில் பேசி புதிய பாதையை உருவாக்க நினைக்கும் நடிகர் சூர்யா அவர்களுக்கு சினிமாஸ் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Today News