ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீர்த்தி சுரேஷ்

 ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீர்த்தி சுரேஷ்

happy-birthday-keerthi-suresh-1

happy-birthday-keerthi-suresh
happy-birthday-keerthi-suresh-1

Happy Birthday Keerthi Suresh

தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னி கீர்த்தி சுரேஷ். மிக வேகமாக வளர்ந்து வந்த கீர்த்தி சுரேஷின் வெற்றிப்பயணம், வீறுநடை போட்டு, மென்மேலும் வெற்றி படங்களை தந்து கொண்டிருக்கிறார். முன்னாள் நடிகை மேனகா அவர்களின் மகள் என்பது அவருக்கு எளிதில் வாய்ப்பு வந்தாலும் அதை தக்க வைக்க திறமை வேண்டும். நாம் பார்த்த பல வாரிசு நடிகர்கள் இன்று காணாமல் போனதை பார்க்கலாம். ஆனால் கீர்த்தி திறமை உள்ளவர்.

2000 ஆண்டு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கீதாஞ்சலி படத்தின் மூலம் கதாநாயகியாக தனது பயணத்தை வெற்றிகரமாக துவக்கினார். தென்னிந்திய ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் கீர்த்தி தனது நேர்த்தியான நடிப்பாலும், துள்ளல் நடனதாலும், பொங்கி வழியும் புன்னகையாலும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறார்.

தமிழில் கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் திரைப்படமும், தனுஷ் ஜோடியாக நடித்த தொடரி திரைப்படமும் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று, கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் ரேட்டை உயர்த்தின. தொடரி திரைப்படத்தில் சாதாரண வேலைக்காரப் பெண்ணாக தோன்றி அவரது அப்பட்டமான, குழந்தைத்தனமான நடிப்பை பார்த்த ரசிகர்கள், நிச்சயம் இவர் முன்னணி கதாநாயகியாக வருவார் என்று எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பை மெய்ப்பிக்கும் வகையில், தொடர்ச்சியாக வெற்றி நடை போட்டு வரும் கீர்த்தி சுரேஷின் அடுத்த படம், இளைய தளபதி விஜய் அவர்கள் உடன் நடித்த பைரவா திரைப்படம். அதன்பிறகு தமிழகத்தின் முன்னணி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜயின் நடிப்பில் சர்க்கார் திரைப்படத்தில் நடித்ததன் மூலம், நம்பர்-1 இடத்திற்கு போட்டியாக கருதப்பட்டார். தற்போது முன்னணி கதாநாயகர்கள், போட்டி போட்டு ஜோடி போட நினைக்கும் அளவிற்கு, தனது திறனை வளர்த்துக்கொண்டார். சண்டக்கோழி-2 படத்தில் விஷாலுக்கு ஜோடியாகவும் தானாசேர்ந்தகூட்டம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததை நாம் இன்றும் மறக்க முடியாது.

பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மங்கையர்திலகம் திரைப்படத்தில், நடித்ததற்காக தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது. இப்படி ஒரு புகழ்பெற்ற நடிகையின் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்று யாரும் எளிதில் எதிர்பார்க்க முடியாது என்றாலும், சாவித்திரி நடிகையர் திலகமாக கருதப்பட்டார். அவரது நடிப்பு தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள நிலையில், அவரை போலவே ஒத்திசைந்து, அவரது நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வகையில் அந்தப் புகழ்பெற்ற நடிகையின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து, படமாக எடுக்கும்போது அப்பேர்பட்ட திறனை வெளிப்படுத்தும் திறமை உள்ள ஒரு நடிகையை, நடிக்க வைக்க வேண்டுமே என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். அந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி, அனைவரும் பாராட்டும் படியாக நடித்து முடித்து விட்டார். அந்த நடிப்புக்கு பெருமை சேர்க்கும் வகையில், தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது. இதுவே அவரது நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நாம் சொல்லலாம்

தொடர்ந்து பல முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷின் வெற்றிப்பயணம் தொடர ஹிட்ஸ் சினிமாஸ் மனதார வாழ்த்துகிறது மேலும் கீர்த்தி சுரேஷின் இந்த பிறந்த நாளில் மேலும் பல வெற்றிப்படங்களில் நடித்து உலக புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறது.

Today News