ஹிட்ஸ் சினிமாஸ் ன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயக்குனர் பாரதிராஜா

 ஹிட்ஸ் சினிமாஸ் ன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயக்குனர் பாரதிராஜா

Happy-Birthday-Iyakkunar-Imayam-Bharathiraja

Happy-Birthday-Iyakkunar-Imayam-Bharathiraja
Happy-Birthday-Iyakkunar-Imayam-Bharathiraja

Hit Cinemas Wishes you a Happy Birthday Iyakkunar Imayam Bharathiraja

16 வயதினிலே திரைப்படத்தில் துவங்கி இந்த ஆண்டு வெளிவந்த மீண்டும் ஒரு மரியாதை திரைப்படம் வரை சுமார் 59 படங்களை இயக்கியவர் இவர் இயக்கிய இயக்கிய படங்களை வரிசைப்படுத்தி அதற்கு முன்பு இவர் பெற்ற விருதுகள் வரிசைப் படுத்தினால் அது தான் சரியாக இருக்கும் ஆறு தேசிய விருதுகளையும் 4 பிலிம்பேர் விருதுகளையும் 2 தமிழ்நாடு அரசு விருதுகளையும் ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்று தமிழ் தெலுங்கு இந்தி என்று மூன்று இதனிலும் மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்த புதிய தமிழன்.

பணம் சம்பாதிக்க படம் எடுக்காமல் பெருமை பீற்றிக் கொள்ள வசனம் எழுதாமல், விருதுகளுக்கு என்று விழுந்தடித்து ஓடாமல் வெள்ளை மனம் படைத்த எளிய மக்களின் வாழ்க்கையை வெள்ளித் திரையில் காட்டி கண்ணீரை வரவழைத்த காவியத் தலைவன்.

காதலை கற்பனையாக காவியமாக கண் படாமல், கதைகளாக கருதி வந்த காலத்திலேயே காதலை மென்மையாக தத்ரூபமாக தத்தித் தவழ்ந்து வரும் தமிழ் மொழியாக கொஞ்சும் தென்றலைப் போன்று கண்களைக் கவரும் காதல் அலையாக கவிதை மொழியாக சாதி தடைகளை சுருக்கிடும் கயிறாக தரையினில் முளைக்கும் பயிராக மாற்றிக் காட்டிய கலைமகளின் களஞ்சியம்.

இயக்குனர் இமயம் என்ற பட்டத்தை சாதாரணமாக பெற்றுவிட முடியுமா? 16 வயதினிலே ரயில் ரோஜாக்கள் புதியவார்ப்புகள் பூக்கள் கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை tik.tik.tik காதல் ஓவியம் வாலிபமே வா வா மண் வாசனை தாவணிக் கனவுகள் புதுமைப்பெண் ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை கடலோர கவிதைகள், வேதம் புதிது கொடிபறக்குது புது நெல்லு புது நாத்து கிழக்குச் சீமையிலே கருத்தம்மா பசும்பொன் தமிழ்ச்செல்வன் அந்திமந்தாரை தாஜ்மஹால், கடல் பூக்கள், ஈரநிலம், பொம்மலாட்டம் அன்னக்கொடி கண்களால் கைது செய் மீண்டும் ஒரு மரியாதை என்று தெலுங்கு இந்தி ஆகிய மொழி களையும் உள்ளடக்கி 59 படங்களை இயக்கிய இந்த மாபெரும் மனிதரை என்னவென்று சொல்வது.

ராதிகா ராதா ரேவதி ரேகா ரஞ்சிதா இன்று தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகள் பலரை அறிமுகம் செய்த பெருமையும் இயக்குனர் இமயத்திற்கு உண்டு, பாக்கியராஜ் மணிவண்ணன் மனோபாலா சித்ரா லட்சுமணன் மனோஜ்குமார் பொன்வண்ணன் சீமான் லீனா மணிமேகலை என்று தமிழ்த் திரை உலகை கட்டி ஆண்ட அத்தனை இயக்குனர்களும் இயக்குனர் இமயத்தின் பட்டறையில் புடம்போட்ட பசும்பொன் சுத்த தங்கங்கள் இவர்களைப் பற்றி சொல்ல இன்னும் ஒரு நாள் வேண்டும் இவருடன் இணைந்த இணையங்களை பட்டியலிட அதற்கும் ஒரு நாள் வேண்டும் என்றாலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை இயக்கிய முதல் மரியாதை திரைப்படம் தேசிய விருது பெற்றுக் கொடுத்தது நடிகை ரேவதி நடித்த புதுமைப்பெண் திரைப்படம் இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான ஒரு பொற்காலத்தை கொண்டது. சத்தியராஜ் என்ற ஒரு நடிகனை கடலோர கவிதைகள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகிற்கு அடையாளம் காட்டியது என்று இயக்குனர் இமயத்தின் பெருமையை பேசிக்கொண்டே போகலாம்.

ஒவ்வொரு இயக்குனர் இமயம் இயக்கிய ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு சகாப்தம் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு புதிய மொழி பேசும் புதிய வழியை சொல்லும் கருத்தை கண்ணோட்டத்தை முன்வைக்கும் எதையும் எளிமையாக கையாண்டு விட முடியாது எதையும் லேசாக விட்டுச் செல்லமுடியாது எந்த ஒரு திரைப்படமும் அதன் பாணியில் அதன் வழியில் அதன் மொழியில் உயிர்ப்புடன் இன்று வரை பயணம் செய்து கொண்டிருக்கிறது ஒவ்வொரு நடிகரும் அந்த கதாப்பாத்திரத்தின் ஊடே வழிவழியாக மொழி வழியாக வாழ வேண்டிய கட்டாயத்திற்கு இயக்குனர் இமயம் வழி செய்து விடுவார் அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் இன்றுவரை மக்களிடையே பேச்சு மொழியிலும் மூச்சு வழியிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் அதை உருவாக்கிய வரும் கலை உலக பிரம்மா என்றாலும் அது குறைவுபடாது 16 வயதினிலே படத்தில் உலகநாயகன் கலைஞானி கமலஹாசன் சப்பாணியாக வாழ்ந்ததும் அதே திரைப்படத்தில் வில்லனாக தோன்றிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பறக்கட்டும் இன்றுவரை அந்த கதாபாத்திரங்கள் யாரும் மறந்து விட முடியாது அதன் பிறகு அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் அதை அப்படியே இன்று வரை ரசித்து களித்து மகிழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் திரையுலகை என்னவென்று சொல்வது அந்த ஒரு காவியத்தை படைத்த இயக்குனர் இமயத்தை என்னவென்று பாராட்டுவது இப்படி ஒவ்வொரு திரைப்படமும் அவரது எழுத்தையும் அதன் கணத்தையும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அவரது சிறப்பையும் வெளிக் காட்ட தவறவில்லை

சாதித் தடைகளை உடைக்க முதல் மரியாதை கொடுத்தார் என்றால், பெண்கள் விடுதலைக்கு புதுமைப் பெண்ணை உருவாக்கினார். காதலுக்கு என்று எண்ணற்ற காவியங்களை உருவாக்கினார். எப்பொழுதும் சலிக்காத மீண்டும் மீண்டும் காதலிக்கத் நம் எண்ணங்களைத் தூண்டும் அலைகள் ஓய்வதில்லை, கிழக்கே போகும் ரயிலும் வரப் போவதில்லை, உன்னைப்போல் ஒருவன் மீண்டும் பிறக்கப் போவதுமில்லை. ஹிட் சினிமாஸ் இணைய தளத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு.

Today News