ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷங்கர்

 ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷங்கர்

happy-birthday-director-shankar hbdshankar

ஒரு பொறியியல் பட்டதாரி இயக்குனராக மாறிய அதிசய நிகழ்வு தான் ஷங்கரின் சினிமா பிரவேசம்

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களிடம் உதவி இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையை துவங்கிய ஷங்கர் 1993 ம் ஆண்டு இயக்கிய ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை துவக்கினார். அந்தப் படம் ஏ ஆர் ரகுமான் இசை, ஆக்சன் கிங் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் என்று மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கி, பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது.

சுமார் 30 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில், இந்திய சினிமாவின் உச்சத்திற்கு உயர்ந்திருக்கும் ஷங்கர் இயக்கிய படங்கள் மொத்தம் 13 தான். ஒருவர் சினிமாவில் வெற்றி பெற்று மிகப் பெரிய மனிதராக பதிமூன்று படங்கள் அல்ல ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, தனது கோபத்தை, கட்டமைத்து, சீர்தூக்கிப் பார்த்து, செதுக்கி, தனது சிந்தனையை முதல் படத்திலேயே முத்திரை பதித்த இந்த மாபெரும் கலைஞனுக்கு இந்த இடம் போதாது தான்.

உலக சினிமாவுக்கு போட்டி போடும் அளவிற்கு இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்திய தன்னிகரில்லா இயக்குனர். இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களான கலைஞானி கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய ஜாம்பவான்களை இயக்கிய பெருமையும் கொண்டவர். விருதுகள் பல வாங்கி குவித்தாலும் இறுமாப்பு இல்லாத எளிய மனிதர். இரண்டு ஆண்டுகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படத்தை எடுத்தாலும், இந்த மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு படமே போதுமான பேசுபொருளாக இருக்கும்.

ஜென்டில்மேன் தொடங்கி, காதலன், இந்தியன், நாயக், ஜீன்ஸ், பாய்ஸ், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0 என்று 25ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்திரையில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கொடி கட்டி பறந்து வரும் ஷங்கர், தற்போது இமாலய செலவில் உருவாகி வரும், கலைஞானி கமல்ஹாசனின், ஏற்கனவே வெற்றி பெற்ற திரைப்படமான இந்தியன் திரைப்படத்தின், இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படமும், ஏற்கனவே வெளிவந்த படத்தை போலவே, இந்தியா முழுவதும் பேசுபொருளாக மட்டுமல்ல, ஊழலுக்கும், அதிகார துஸ்பிரயோகத்திற்கும், எதிரான களமாடும் வகையில் உருவாக்குவார் என்ற முழு நம்பிக்கையும், சங்கர் மீது உள்ளது. இன்று ஒட்டுமொத்த திரையுலகமும் இந்தியாவின் திரை உலக ஜாம்பவான் இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு மனதார பிறந்தநாள் வாழ்த்துக்களை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறது.

Today News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *