பிறந்தநாள் வாழ்த்துக்கள் மணிவண்ணன்

 பிறந்தநாள் வாழ்த்துக்கள் மணிவண்ணன்

Happy Birthday Manivannan

Happy Birthday Manivannan
Happy Birthday Manivannan

கோவையில் பிறந்து இந்தியாவின் பிரபல இயக்குனராக தென்னிந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகராக பல ஆண்டுகள் வலம் வந்த மணிவண்ணன் அவர்கள் சுமார் 50 திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதில் அமைதிப்படை, நூறாவது நாள், டிக் டிக் டிக் போன்ற திரைப்படங்கள் காலத்தால் அழிக்க முடியாத காவியங்கள். அதைவிடவும் குணச்சித்திர நடிகராகவும் நகைசுவை நடிகராகவும் 400 படங்களுக்கு மேல் நடித்து, தனது நடிப்புத் திறமையை கொண்டு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்த, வெள்ளை மனம் படைத்த சிவப்பு மனிதன்.

அரசியல் பின்னோட்டத்தில் வளர்ந்து, வாழ்ந்து, மறைந்த மணிவண்ணன், நேர்த்தியான அரசியல் பாதையை கொண்டவர். கலைஞரின் மேடைப் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, தீவிரமாக செயல்பட்ட மணிவண்ணனின் செயல்பாடுகள், ஆரம்ப காலகட்டத்தில் தீவிர கம்யூனிஸ்டாக ஆரம்பித்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் வை கோ அவர்கள் துவங்கிய அரசியல் கட்சியில், வைகோவிற்கு ஆதரவாக செயல்பட்டார். அதன்பிறகு சீமான் அவர்கள் தமிழ் ஈழம் ஆதரவு நிலைப்பாடு எடுத்து, போராட்டங்களை வீரியமாக முன்னெடுத்த போது, அவருடன் நாம் தமிழர் கட்சியில் இணைந்து, பலகாலம் செயல்பட்டார்.

தான் இயக்கிய திரைப்படங்களிலும் சரி, தாம் நடித்த படங்களிலும் சரி, தனது அரசியல் நிலைப்பாட்டை நேர்த்தியாகவும், நையாண்டியாகவும் வைக்கத் தெரிந்த சகலகலாவல்லவன். சாதுரிய பேச்சாளர். பெரியாரை விட்டுக்கொடுக்காத கொள்கை பிடிப்பாளர். சாமானிய ரசிகனுக்கும் புரிந்த வகையில், தனது படங்களை இயக்கி, திரைப்படத் துறையில் தனக்கென ஒரு இடத்தை பெற்று என்றும், நம் மனதில் வாழும் இயக்குனர் மணிவண்ணன் அவர்களுக்கும் நடிகர் மணிவண்ணன் அவர்களுக்கும் மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்களை மனதார சொல்லிக்கொள்கிறோம்.

அவர் மறைந்து பல ஆனாலும் திரைப்படங்கள் வழியாகவும் அவர் பேசிய தமிழ் தேசிய அரசியலின் பின் வழியாகவும் காலமாக நம்முடன் வாழ்ந்து வருவார் என்பது மறுப்பதற்கில்லை இன்றைக்கு அரசியலுக்கு வந்துவிட்டேன் வருகிறேன் வந்துவிடுவேன் என்று வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் எந்த மேடையிலும் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் தான் கொண்ட அரசியலை உயர்த்திப் பிடிக்க தவறாத தன்மான தமிழனின் தாக்கம் தமிழகத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

Today News