கொரோனா வைரஸ் கேரளாவில் கெடுபிடி

 கொரோனா வைரஸ் கேரளாவில் கெடுபிடி

Covid-19 corona virus social distance abandoned will be punished with 14 quarantine

Covid-19 corona virus social distance abandoned will be punished with 14 quarantine
Covid-19 corona virus social distance abandoned will be punished with 14 quarantine

இந்தியாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக, கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது.

ஆனாலும் மக்கள் காதில், உத்தரவுகள் கேட்டது போல தெரியவில்லை. அத்தியாவசிய பொருட்களுக்கு அரசு தடை விதிக்க வில்லை என்றாலும், மக்களின் அலட்சியப் போக்கும், அராஜகமும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒருவரும் அரசு சொன்ன அறிவுரையை கேட்டு சமூக விலகலை முறையாக கடைப்பிடிப்பதாக நமக்கு தெரியவில்லை. கூட்டம், கூட்டமாக நின்று, கொரோனா வைரஸ் நோயின், தாக்குதலை உணராமல், அலட்சியப்படுத்தி வருகின்றனர். கடைகளில் நான்கைந்து பேர் இருந்தாலும் கூட, ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்துவிட்டால், அதை அறியாமல் அவர் வெளியே சென்று விட்டால், அத்தனைபேருக்கும் தொற்றிக் கொள்ளும் அபாயம் இருக்கும், இருக்கிறது, கொரோனா வைரஸ் பரவும் என்று தெரிந்தும், அதெல்லாம் நமக்கு வந்துவிடாது, நம்ம நல்லாதானே இருக்கும், என்று அலட்சியமாக இருப்பதினால், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் சமூக விலகலை முறையாக கடைப்பிடிக்காத அமெரிக்கா, இன்று படும் இன்னல்களை நாம் பார்த்தோமானால், எவ்வளவு கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்பதை, உணர்த்தும். சுமார் 45 ஆயிரம் பேர் இந்த ஒரு மாதத்தில் மட்டும் உயிரிழந்து இருக்கிறார்கள், என்று பார்த்தால், அமெரிக்காவின் துயரமும், இத்தாலியின் இன்னலும், ஸ்பெயினின் பிதற்றல் உம், நம் கண் முன்னே வந்து போகும்.

இப்படி பல்வேறு துயரங்கள் உலகம் முழுக்க நடந்து கொண்டிருப்பதை, பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் இருக்கும், கேரள மக்களுக்கு, சரியான பாடம் புகட்டி வருகிறார் அந்த மாநில முதல்வர் பினராய் விஜயன் அவர்கள்.

குறிப்பிட்ட நேரத்தை தாண்டி, வெளியே சுற்றும் நபர்களுக்கு, 100, 200 என்று அபராதம் விதித்து அசால்ட்டாக இருந்து கொண்டு வருகிறது இந்திய அரசு. ஆனால், கேரளாவில் ஒரு படி மேலே போய், தேவையில்லாமல் வெளியே சுற்றும் நபர்களை பிடித்து, 14 நாட்கள் மருத்துவமனையில், கண்காணிப்பில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இதற்குமேலும் அனாவசியமாக மக்கள் வெளியே வர மாட்டார்கள் என்பது, கண்கூடாகத் தெரிகிறது. இப்படி அசால்டாக, அமர்க்களம் செய்யும் நபர்களுக்கு, இதைத் தவிர வேறு எதையும் தண்டனையாக கொடுத்துவிட முடியாது. ஏற்கனவே, கேரளாவில் தான், இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தொற்று உருவானதும், ஆனாலும், கேரளாவில் நோய்த்தொற்று, மிகக் கடுமையாக கண்காணிக்கப்பட்டு, இப்போது நேரடி கட்டுப்பாட்டில் வந்து விட்டதாக தெரிகிறது. இப்படி சில கடுமையான உத்தரவுகள், பிறப்பிக்கப்படுவதுகூட, நோயை கட்டுப்படுத்தும் நோக்கில்தான் என்பதை மக்கள் புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள் என்று நம்புவோம்.

Today News