கொரோனா வைரஸின் தாக்குதலை தவிடுபொடியாக்கிய தமிழகம்

 கொரோனா வைரஸின் தாக்குதலை தவிடுபொடியாக்கிய தமிழகம்

Covid-19 corona virus lock down is worked out for modi with eps 1

Covid-19 corona virus lock down is worked out for modi with eps 1
Covid-19 corona virus lock down is worked out for modi with eps 1

சுமார் 10 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று, இந்தியாவில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தன் கணக்கை துவங்கிய போது, இந்தியா விழித்துக்கொண்டு, புத்திசாலித்தனமான ஒரு முடிவை எடுத்தார்கள். நாடுமுழுவதும் ஆன தேசிய ஊரடங்கு உத்தரவு, எவ்வளவோ கெடுதல்களுக்கு மத்தியில், இதையாவது உருப்படியாக செய்தார்களே என்றுதான் நாம் பாராட்ட வேண்டியிருக்கிறது.

பல கோடிக்கணக்கான ஏழைகளின் வயிற்றில் அடித்தாலும், ஒரு நல்ல விஷயம் நடந்திருக்காது. அமெரிக்காவில் சுமார் 25 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், இத்தாலியில் பத்தாயிரத்திற்கும் மேலே, ஸ்பெயினில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து என்று பல ஐரோப்பிய நாடுகளும் பலி எண்ணிக்கையை மடமடவென்று உயர்த்திக் கொண்டே போகிற போது, இந்தியாவில் 100, 200 என்று தடுத்து, தனது புத்திசாலித்தனத்தை உலகுக்கு பறைசாற்றிக் கொண்டது.

அதே போல தமிழகத்திலும் எடுக்கப்பட்ட முன்மாதிரியான நடவடிக்கைகள், மக்களின் உதிரத்தை, கொதிகலன் போல் கொதிக்க வைத்தாலும், குருடர்கள் கையில் ஆட்சி போல, குருட்டாம்போக்கில் எடுத்த முடிவுகள், சில நேரம் சரியாக அமைந்துவிடும். அதுபோலதான் எந்த முன்னறிவிப்புமின்றி, அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, இன்று ஒரு நன்மையை செய்திருக்கிறது.

இன்று கொரோனா வைரஸின் நோய் தொற்றுக்கு, யாரும் பலியாக வில்லை என்ற செய்தி, நம்மை ஆறுதல் பட வைக்கிறது. நாடு முழுக்க கொத்துக் கொத்தாக மடிந்து போகிற நிலையில், கொரோனா வைரசின் கோரத்தாண்டவம், தமிழகத்தில் அடங்கி உள்ளதாகவே தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, சீனா தனது கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை, மறு மதிப்பீடு செய்து வெளியிட்டது. ஏற்கனவே இறந்து போன ஆயிரத்து 500 பேர் இறப்பை மறைத்து, இப்பொழுது வெளியிட்டுள்ளது கண்டு, உலகநாடுகள் கொதித்து விட்டனர். இவர் இவர்கள் திருட்டுப்பயல்கள், எங்களை விடவும் அதிக இழப்பு ஏற்பட்டிருக்கும், வெளியில் சொல்ல மாட்டார்கள் என்று வெளிப்படையாகவே பொரிந்து தள்ளினார், அமெரிக்க அதிபர் டிரம்ப்.

ஆனாலும் இந்தியாவில், வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அறிவித்தாலும், கொரோனா வைரஸ் நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. ஏழைகளின் ரத்தம், தெருவில் ஆறாக ஓடி வழிந்தாலும், நோய் தொற்று இல்லை, என்ற ஒற்றை நம்பிக்கை, மீண்டும் நாம் துளிர்த்து நம்பிக்கையை நெஞ்சுக்குள் விதைக்கிறது. எது நடந்தாலும் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற மனித குலத்தின் ஒற்றைவரி, இன்றும் என்றும் வெல்லும் சொல்.

Today News