கொரோனா வைரஸ் – சிக்கி சின்னாபின்னமான அமெரிக்கா, சந்தி சிரித்த இந்தியா

 கொரோனா வைரஸ் – சிக்கி சின்னாபின்னமான அமெரிக்கா, சந்தி சிரித்த இந்தியா

covid-19 corona virus lock down 3rd extension poor going to suffer

covid-19 corona virus lock down 3rd extension poor going to suffer
covid-19 corona virus lock down 3rd extension poor going to suffer

உலகம் முழுவதும் ஒரு பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறது என்றால்? அது பொருளாதார மந்த நிலை தான். அதன் பிறகு ஒரு பிரச்சனைக்கு, உலகம் முழுவதும் தீர்வைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால்? அது தற்போதைய கொரோனா வைரஸ் நோய் தொடர் தாக்குதல் தான்.

இதுவரை அமெரிக்காவில் மட்டும் 11 லட்சத்து 31 ஆயிரத்து 30 பேர் கொரோனா வைரஸ் நோய் தொற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் இன்று மட்டும் 36 ஆயிரம் பேர் புதியதாக கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அடைக்கப்பட்டனர். இதுவரை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 163 பேர் மருத்துவமனைகளில் இருந்து குணமாகி, வீடு திரும்பியுள்ளனர். சுமார் 65 ஆயிரத்து 753 பேர் அகாலமாக உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா வைரஸ்ஸின் சமூக விலகலை, அமெரிக்கர்கள் சரியாக புரிந்து கொள்ளாமல் போனதுதான், இத்தனை பெரிய பாதிப்புக்கும், உயிரிழப்புக்கு காரணம் என்று, யார்? எத்தனை தூரம் அறிவுரை சொன்னாலும், அவர்கள் காதில் விழவில்லை. ஏனென்றால், உயிர் பயத்தில் ஓடிக்கொண்டிருக்கும் அமெரிக்கர்களுக்கு, தப்பிப் பிழைத்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது.

என்னதான்? ஆயிரத்தெட்டு தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டு இருந்தாலும், உலகின் வல்லரசு நாடு என்று, தொட்டதற்கெல்லாம் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சண்டைக்கு அலைந்தாலும், ஏய்ப்பார் இன்றி, மேய்ப்பார் மின்றி, ஏமாந்த நாடுகளில் படைகளை இறக்கி, கலவரங்களை நடத்தி, கொள்ளையடித்து இருந்தாலும், ஒரு சாதாரண வைரஸுக்கு, பதில் சொல்ல முடியாமல் நான்டு கொண்டு சாகின்றனர் அமெரிக்க மக்கள் .

இதில் பரிதாபத்துக்குரிய விஷயம் என்னவென்றால்? அமெரிக்காவின் அட்டூழியங்களுக்கும், ஆதரவு தராத அப்பாவி அமெரிக்கர்கள்தான், உயிரை விட்டுக் கொண்டிருக்கின்றனர். பணம் படைத்தவர்களும், வசதி படைத்தவர்களும், பாதுகாப்பாக, பத்திரமாக இருந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் அப்பாவி நியூயார்க் வாசிகள் கொரோனா வைரஸ்சிடம் சிக்கி, சின்னாபின்னம் ஆகி விட்டனர். நியூயார்க் நகரம் மீண்டும், சகஜ நிலைக்கு இயல்பாக, திரும்பும் என்பது, சந்தேகம்தான். அரசின் அலட்சியத்தாலும், அதிபரின் அகங்காரத்தால், அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா. ஆயிரம் பட்டாலும், அவமானம் எவ்வளவு ஏற்பட்டாலும், அதை விடாமல் இறுமாப்புடன் இருக்கும் டிரம்புக்கு, இன்னும் பலத்த அடி கொடுத்தாலும், அவர்கள் தான் காரணம் என்று, சீனாவை கைகாட்டிவிட்டு, அடுத்த தேர்தலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இதே நிலைதான் இந்தியாவிலும். இதுவரை கொரோனா வைரஸின் தாக்குதலுக்கு, 37 ஆயிரத்து 776 பேர் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சுமார் 2411 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இதுவரை சுமார் பத்தாயிரம் பேர் குணமடைந்து, வீடு திரும்பி இருந்தாலும், இறந்தவர்களின் எண்ணிக்கை, 1223 எட்டிவிட்டது. உலக அளவில், வைரஸின் நோய் தொற்றுக்கு, பலியானவர்கள் எண்ணிக்கையில் 14, 15 என்று வரிசைப் பட்டியலில், மெதுவாக முன்னேறி வந்தாலும், இந்தியாவுக்கு, இன்னும் கொரோனா வைரஸின் தொற்று, முழுவீச்சில் ஆரம்பிக்கவில்லை. கொரோனா வைரஸ் இப்பொழுதுதான் அதன் வேலையை காட்டத் துவங்கியுள்ளது.

அதற்கு ஆதாரம், மகாராஷ்டிராவில் சுமார் 11 ஆயிரத்து 506 பேர் இதுவரை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாள் மட்டும் சுமார் ஆயிரத்து எட்டு பேர் நோய்த்தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இதுவரை மகாராஷ்டிராவில் 485 பேர் மரணமடைந்துள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் மகாராஷ்டிராவில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஆக சமூக நோயாக கொரோனா வைரஸ் பரவியதன் அடையாளமே, இந்த எண்ணிக்கைகள்.

ஆகமொத்தத்தில், சீனாவை போ, அமெரிக்காவைப் போல, இத்தாலியை போல, ஸ்பெயினை போல கொரோனா வைரஸ் சமூக பரவலாக இன்று இந்தியாவில் பரவ ஆரம்பித்திருக்கிறது. அதன் அடையளாம்தான், மகாராஷ்டிராவின் எண்ணிக்கை, மளமளவென உயர்ந்து வருவது.

கொரோனா வைரஸ் ஐ மத்திய அரசு தொலைநோக்குப் பார்வையுடன் அணுகவில்லை என்று, பல்வேறு தரப்பினரும், குற்றம்சாட்டி வரும் நிலையில், அரசு இப்போது கூட தொலைநோக்கு பார்வையில் செயல்படவில்லை என்று தோன்றுகிறது. ஒரு பக்கம் வைரஸின் நோய் தொற்றுக்கு, ஏழை எளிய, சாமானிய மக்கள் பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் ஊரடங்கு உத்தரவினால், சாமான்ய மக்கள் பட்டினியால் மடியும் நிலை ஏற்பட்டுவிட்டது.

ஏற்கனவே இரண்டு முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் மூன்றாவது முறையாக, இன்று இரவு முதல் நீட்டிக்கப்படுகிறது என்று அரசு அறிவித்துள்ளது. இப்படி நாடு முழுக்க, ஒரு பிரம்மாண்டமான ஊரடங்கு உத்தரவை, அறிவிக்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு சரியான வழிமுறைகளை, அரசு, அலசி ஆராய்ந்து, அறிவிப்பு செய்ய வேண்டும். அப்படி, சாமானிய மக்களின், வாழ்வாதாரத்தை பற்றி, அவர்களின் அன்றாட உணவு தேவைகளையும், அத்தியாவசிய தேவைகளையும் பற்றி, ஒரு வார்த்தை கூட பேசாமல், யோசிக்காமல், அரசு இருக்குமேயானால், இந்த மக்களின் நிலையை என்னவென்று சொல்வது?

இந்தியாவில் தினக் கூலிகளாக இருக்கக்கூடிய 60 கோடி மக்களுக்கும், மத்திய அரசு இப்படி ஒரு பேரிடியை தலையில் இறக்கியுள்ளது, ஆட்டோகாரர்கள், டாக்ஸிகாரர்கள், தச்சர்கள், கார்பெண்டர், எலெக்ட்ரிசியன்கள், கொல்லர்கள், மூட்டை தூக்குவோர், கடைகளில் வேலை பார்ப்போர் என்று கூலி வாங்கும், சாதாரண சாமானிய மக்களின் நிலை, அதோகதியாகி விட்டது. அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய், ஒரு வாரம் கூட வராத நிலை ஏற்பட்டு விட்ட சூழ்நிலையில், இரண்டு மாத கால ஊரடங்கு உத்தரவை, அரசு அறிவித்திருக்கும் நிலையில், எவ்வாறு மக்கள் எடுத்துக் கொள்வார்கள்?

ஒருபுறம் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் இந்த நாளில், சுமார் 68,000 கோடி ரூபாய் அளவிற்கு, பெருமுதலாளிகள் வாங்கிய கடன்களை, வாரா கடனாக அறிவித்து, இந்தக் கடன்களை, ரைட்டா ஆப், வேவர் என்று சில தில்லாலங்கடி வார்த்தைகளில் அறிவித்து, மத்திய அரசு, கண்கட்டி வித்தை காட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் தள்ளுபடி செய்தாலும், அல்லது பொறுமையாக அவர்கள் கழுத்தை பிடித்தாலும், யாரும் அதைப் பற்றி கேள்வி எழுப்பப் போவதில்லை. ஏனென்றால்? இது இந்தியா. இங்கு மத்திய அரசின் செயல்பாடுகள், சர்வாதிகார தனமாகவே தோன்றுகிறது. ஆனாலும், சிறிது நம்பிக்கை தரும் அளவிற்கு, ஓட்டுரிமை வைத்துள்ளதால், நமக்கு ஜனநாயகம் இருப்பதைப் போல தோன்றினாலும், கேட்கப்படும் எந்த ஒரு கேள்விக்கும், சந்தேகத்திற்கும், முறையாக விடை அளிக்க வேண்டிய அவசியம், மத்திய அரசுக்கு இல்லை. இப்படித்தான் இங்கு அரசு அரசாங்கம் செயல்படுகிறது.

இப்படி கடன்களை தள்ளுபடி செய்து கொண்டிருக்கும் ஒரு பக்கத்தில் அதற்கு அடுத்த பசியால் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் மக்கள் இன்னொரு பக்கத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது அரசினால் செயல்பட முடியாத நிலை இருக்கிறது ஆனாலும் இந்த நிலையில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியவில்லை என்றால் இந்த அரசு எதற்கு அப்படி ஒரு அருகதையற்ற அரசை கலைத்துவிட்டு புதியதொரு அரசாங்கத்தை ஏன் தேர்ந்தெடுக்க கூடாது 60 நாட்களுக்கு பிறப்பிக்கும் அரசுகளுக்கு 60 நாட்களுக்கு தேவையான அரசு நம்மை ஆளும் அருகதையை தகுதியை இழந்துவிட்டது அப்படி ஒரு அரசு இனிமேலும் நம்மை ஆள்வது நிலைக்கு விளிம்புநிலை மக்கள் வந்துவிட்டால் அடுத்த நாளே இந்த மக்களின் நியூ புத்த ஆதரவுடன் இந்த அரசை கலைத்து விட வேண்டுமே தவிர இது ஒரு நாளும் ஆட்சி செய்வதற்கு தகுதி ஆனதாக இருக்க முடியாது அரசுக்கு மட்டுமல்ல மாநில அரசுகளுக்கும் பொருந்தும்.

மத்திய அரசுக்கு கூஜா தூக்கி கொண்டு திரியும் தமிழக அரசையும் நாம், இந்த நேரத்தில் நினைத்து வெட்கப் பட வேண்டி இருக்கிறது. மருந்து, மாத்திரைகளுக்கு, அதன் ஆராய்ச்சி செலவுகளுக்கு, நிதி ஒதுக்காத இந்த அரசாங்கம், மருத்துவ உபகரணங்கள் வாங்க, வெளிநாட்டிற்கு, இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களை, செலவு செய்து கொண்டிருக்கிறது. என்றால்? இதை விட கொடுமை, உலகில் வேறொரு விஷயமே கிடையாது, மருத்துவர்களுக்கு கௌரவம் கொடுக்க வேண்டும், அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி, கைகளை தட்டுங்கள் என்கிற கோமாளித் தனத்தை செய்ய வைத்தது இந்த அரசு. அதற்கு ஜால்ரா அடித்து தமிழக அரசு. அதேபோல மருத்துவர்களுக்கும், மற்றுமுண்டான அரசு ஊழியர்களுக்கும், துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் ,மருத்துவப் பணியாளர் களுக்கும் நன்றியை தெரிவிக்கும் விதமாக, 5 நிமிடம் மின்விளக்குகளை அணைத்து, விளக்குகள் ஏற்றி சொல்லி, அடுத்ததாக ஒரு அட்ராசிட்டி செய்தது மத்திய அரசு. அதற்கு விளக்கை தூக்கிக்கொண்டு, மாநில அரசு கிளம்ப, மானத்தை அரங்கேற்றி இருக்கிறது.

ஆம் நாளைக்கு, முப்படைகளும் அணிவகுப்பு நடத்த போகிறதாம். இந்த அறிவுகெட்ட அதிகாரிகளுக்கு, எப்பொழுது தான் புத்தி வருமோ? புத்திசாலித்தனமாக செயல்படுவார்களோ? தெரியவில்லை. ஆம் சமூக பரவல் தடை செய்யப்பட்ட நாட்டில், ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கும், மருத்துவத் துறையினருக்கு, நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில், பாதிப்பு ஏற்பட்டு, நடமாட முடியாத நிலை இருக்க, ராணுவத்தினருக்கும் சிலபேருக்கு, கொரோனா வைரஸ் நோய் தொற்று அறிகுறிகள், தென்பட, கூட்டம் கூட்டமாக ராணுவ அணிவகுப்பு நடத்துவது, எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

உண்மையில் மருத்துவப் பணியாளர்களை, அவர்களின் சேவையை, நீங்கள் மதிப்பதாக, அங்கீகரிப்பதாக சொல்லியிருந்தால், சொல்வதாக இருந்தால், அவர்களுக்கும் மத்திய அரசின் சம்பள விகித படி, சம்பளம் வழங்க வேண்டும் என்று, பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களுக்கு, இந்த நேரத்தில் அந்த சம்பள விகிதத்தை, உயர்த்திக் கொடுப்பதாக இருந்தால், அதுவே நீங்கள், மருத்துவ துறையினருக்கும், மற்றுமுள்ள தூய்மைப் பணியாளர் களுக்கும், செய்யும் நன்றிக் கடனாகும், அங்கீகாரம் ஆகும். அதை விடுத்து, முட்டாள்தனமான முன்யோசனை இன்றி, செயல்படும் இதுபோல கேவல மான விஷயங்களை விடுத்து, அறிவுபூர்வமாக செயல்பட வேண்டும் என்றுதான், மக்கள் விரும்புகிறார்கள். ஒவ்வொரு சாமானிய மனிதனுக்கும் தெரியும், தெரிகிறது, கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அது, உங்களுடைய நயவஞ்சகமும், மோசடிகளும் தான், என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொண்டுதான் செய்கிறார்களோ? இந்த நேரத்தில், என்ன செய்தாலும்? மக்கள் சாலைக்கு வர மாட்டார்கள். அடுத்த 3 ஆண்டுகளில், இதையெல்லாம் மறந்து, நம்முடைய முகத்தை பார்த்து, நமது தேர்தல் நேர வாக்குறுதிகளை பார்த்து, வாக்களித்து விடுவார்கள். ஆட்சி செய்ய ஆரம்பித்துவிடலாம். நமது நண்பர்களான பெருமுதலாளிகளுக்கு, இங்கு இருக்கும் அத்தனை வளங்களையும், கூட்டிக் கொடுத்து விடலாம். எலும்புத் துண்டை எரிந்து விட்டால், கவ்விக்கொண்டு ஓடி விடுவார்கள் என்கிற நம்பிக்கைதான் என்னவோ? மக்கள் தெளிவு பெற்று, இவர்கள், நம்முடைய கஷ்ட காலங்களில், நம்மை கைவிட்டு விட்டு, திருட்டுதனம் செய்யும், தவறுகளுக்கும், திருடர்களுக்கும் காவல் காத்துக் கொண்டிருந்த புரோக்கர் வேலையை செய்தவர்கள், என்பதை புரிந்து கொண்டு, இவர்கள் முகத்தில் காறி உமிழாத வரை, இது போன்ற அரசியல்வாதிகள், அடிமைகள், நாட்டை ஆட்சி செய்யும் நிலைதான் ஏற்படும் அவசரத்திற்கு நம்முடைய உயிரை பலியிடத் தான் வேண்டி வரும்.

Today News