கொரானா- வாழ்வா? சாவா? போராட்டம் மாணவர்களுக்கு!!

 கொரானா- வாழ்வா? சாவா? போராட்டம் மாணவர்களுக்கு!!

students protest against exams

students protest against exams
students protest against exams

இந்தக் கொடிய கொரானா காலத்திலும் கூட மாணவர்கள் வீதிக்கு வந்து போராடித்தான் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட வேண்டி இருக்கிறது!

தென்னிந்திய அரசுகள், கொடிய கொரானா நோய்த்தொற்று காலங்களிலும் சில புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்தார்கள் என்பதில் மறுப்பதற்கில்லை. கல்வியாளர்களின் குரலை சற்றே கவனித்து, பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு பெற்றதாக அறிவித்ததும், காலவிரயம் கருதி, +2 தேர்வு முடிவுகளை வெளியிட்டு, அவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான கால அவகாசத்தை அளித்ததும், கல்லூரி முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களை தேர்வு இன்றி அடுத்த ஆண்டு படிக்க அனுமதித்ததும், தமிழக அரசும் சரி தென்னிந்திய அரசுகளும் சரி உண்மையில் மாணவர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று விட்டன.

என்றலும் மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், பொறியியல் கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவர்கள், மற்றும் கலை அறிவியல் ஆகிய பாடங்களை பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி ,நெருப்பையும் பற்ற வைத்து உள்ளதாகவே தோன்றுகிறது. இதில் மாநில அரசுகள் சொந்த முடிவை எடுக்க முடியும் என்றாலும், மத்திய அரசின் கண்ணசைவிற்குகாக காத்துக் கொண்டிருப்பதை சரி என்று சொல்ல முடியாது.

பள்ளி மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் போடுவது போன்று எளிதன்று. அது கல்லூரி மாணவர்களுக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தும் என்றாலும், கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் தேர்ச்சி பெற்று விட்டதாக சொல்லி, அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவது தான் சரியாக இருக்கும். மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு என்று கல்லூரி மாணவர்களை ஒதுக்குப்வதும், புறம் தள்ளுவதும், மிகப்பெரிய சமூக சீர்கேட்டை உருவாக்கும்.

அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம், பின்தங்கி இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பெரிய தனியார் நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு, அதிக மதிப்பெண்களை போட்டு தேர்வு செய்ய வைப்பது மிக எளிதான செயலே.அதே நேரத்தில் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இத்தகைய தில்லாலங்கடி வேலைகளை செய்ய ஒருவரும் உதவி செய்யப் போவதில்லை. இந்த நேரத்தில் இப்படி ஒரு மாபெரும் சிக்கல் அரசு கல்லூரி மாணவர்களுக்கு உருவாகிவிடும் என்பதை கணக்கில் கொண்டாலும், மாணவர்களின் இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் எதிர்காலம் என்பது மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பது தெரியும். கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற மத்திய அரசும் மாநில அரசுகளும் ஆவண செய்ய வேண்டுமே தவிர, உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்குத் தொடுப்பது இந்த மாணவர்களுக்கு இழைக்கும் அநீதி ஆகும். இதன்மூலம் இந்தக் கொடிய கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் சரி, வீதிக்கு வந்து போராடினால்தான் நீதி கிடைக்கும் என்கிற நிலை மாணவர்களுக்கு வந்தால், பாதிப்பு, வேதனை நிச்சயம் அரசுக்குத்தான்.

Today News