கொரோனா வைரஸ் இன்றைய உயிரிழப்புகள்

 கொரோனா வைரஸ் இன்றைய உயிரிழப்புகள்

Covid-19 Corona Virus latest updated death and affected people in India and state wise

Covid-19 Corona Virus latest updated death and affected people in India and state wise
Covid-19 Corona Virus latest updated death and affected people in India and state wise

கொரோனா வைரஸின் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதற்கான தடுப்பு வைத்தியம் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை, சீனா ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்தியதன் விளைவே இன்று, சீனாவின் கொரோனா வைரஸின் பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கிறது. ஊரடங்கு உத்தரவை சற்றும் மதிக்காமல் நடந்து கொண்டதன் விளைவு, அதன் விலையை அமெரிக்க மக்களும் ஐரோப்பிய மக்களும் இன்று கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய உயிரிழப்புகள் நமக்கெல்லாம் படமாகவும்,கண்களில் ரத்தம் வர வைக்கும் அளவிற்கு மிகப்பெரிய எண்ணிக்கையை தொட்டுவிட்டது.

இன்றைய உயிரிழப்புகள் பாதிக்கப்பட்டவர்களின் தமிழகத்தைப் பொறுத்தவரை சமூக விலகல் மிகக்கடுமையாக பின்பற்றப்படுகிறது. ஒருசில இடங்களில் மார்க்கெட்டுகளில் தவிர, வங்கி ஏடிஎம்களில் சில நிகழ்வுகள் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே சமூக விலகல் ஊரடங்கு உத்தரவுகள் மீறப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த தமிழகத்திலும் கவனிக்கும்போது மிகக் கடுமையாக தீவிரமாக பின்பற்றப்படுகிறது. இதுவரை 1267 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இன்று புதியதாக 25 பேர் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 180 பேர் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து குணம் ஆகி உள்ளனர். இன்று மட்டும் சுமார் 62 பேர் மருத்துவமனைகளில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர். என்று கொரோனா வைரஸ் நோய் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் சமூக விலகல் கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், வடக்கு மாநிலங்களில், அதன் வீரியம் இன்னும் உணரப்படவில்லை. அந்த வகையில் பீகார், குஜராத், ஆகிய மாநிலங்களில் இன்னும் பரவலாக மக்கள் சுற்றித்திரிந்த வண்ணம் உள்ளனர் என்று மிகக் கடுமையான விமர்சனம் நாடு முழுக்க எழுந்துள்ள சூழ்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று மட்டும் சுமார் ஆயிரத்து 76 பேர் தாக்கி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நாடு முழுக்க சேர்த்து 13 ஆயிரத்து 835 பேர் உயர்ந்து உள்ளது. இதுவரை இன்று 252 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக 452 பேர் உயிரிழந்து உள்ளனர். அதில் இன்று மட்டும் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற மாநில வாரியாக கொரோனா வைரஸ் நிலவரம்
இன்றுவரை மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3205 ஆக உள்ளது இன்று மட்டும் 286 பேர் புதியதாக மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டுள்ளனர் சுமார் 300 பேர் வரை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் இதுவரை இன்று ஐந்து பேர் வீடு திரும்பியுள்ளனர் இதுவரை உயிரிழந்துள்ள மகாராஷ்டிராவில் இன்று மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேசிய தலைநகர் டெல்லியில் கடுமையாக இருந்தபோதும் இன்று 62 பேர் பாதிப்புக்குள்ளாகி ஆயிரத்து 640 பேர் மொத்தமாக மருத்துவமனையில் கண்காணிக்கப்படுகின்றன இதுவரை 57 பேர் குணம் ஆகியுள்ளனர் 38 பேர் உயிரிழந்து உள்ளனர் இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் 1308 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று 188 பேரும் 57 உயிர் இழப்புகளில் இன்று நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் நான்காவது இடத்திலும் 1131 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் பேர் இன்று மட்டும் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தாக்கி அனுமதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியிலிருந்து கால்நடையாக பல லட்சக்கணக்கான பேர் வடகிழக்கு மாநிலங்களில் புறப்பட்ட போது அவர்களின் ஊடாக கொரோனா வைரஸ் தோற்று மிகப்பெரிய அளவில் பரவி உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்று மட்டும் சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது.

குஜராத்தில் ஆயிரத்து 21 பேரும் இன்று மட்டும் 150 பேரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 38 பர இதுவரை உயிரிழந்துள்ளனர் உள்ள நிலையில் இன்று மட்டும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பார்க்கிறபோது மிகக் கடுமையாக உயர்ந்து வந்துள்ளது இதுவரை குறைந்து வருவதாக காண்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மட்டும் 73 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

தெலுங்கானாவில் 743 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று அங்கு எந்த உயிரிழப்பும் ஏற்படாத நிலையில் சிறிது ஆறுதல் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் 572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 38 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றும் அங்கு எந்த உயிரிழப்பும் என்பது ஆந்திர மாநிலத்தின் கட்டுக்கோப்பான அரசாட்சியை அது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு நிலைமை கட்டுக்கடங்காமல் போன போது, மத்திய அரசு நாடு முழுக்க, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த போது, மருத்துவமனைகளின் படுக்கைகள் மிக கடுமையாக பாதிக்கப் படக்கூடும் என்று, கவலை கொண்டிருந்த நேரத்தில், தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, அத்தனை தனியார் மருத்துவமனைகளையும், அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த, தைரியமான முடிவை எடுத்த, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில், கொரோனா வைரஸ் ஊரடங்கு கட்டுப்பாடுடன் முறையாக கடைபிடிக்கப்பட்டு, உயிரிழப்பு எண்ணிக்கையை மிக கட்டுக்கோப்பாக வைத்திருப்பது வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.

கேரளாவில் இதுவரை 395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெறும் 7 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மூன்று பேர் மட்டுமே உயிரிழந்துள்ள நிலையில் கேரளாவில் துவங்கிய இந்திய கொரோனா வைரஸ் சின் வேலை மற்ற மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்தாலும், கேரளாவில் முழுமையாகக் கட்டுப்பட்டு விட்டதாகவே தோன்றியது.

கர்நாடகாவில் 353 பேரும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் 314 பேரும், மேற்கு வங்காளத்தில் 255 பேரும், அரியானாவில் 205 பேரும், பஞ்சாபில் 186 பேரும், பீகாரில் 83 பேரும், ஒடிசாவில் 60 பேரும், உத்திரகாண்ட் மாநிலத்தில் 37 பேரும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 36 பேரும், இமாச்சல் பிரதேசத்தில் 35 பேரும், அசாம் மாநிலத்தில் 35 பேரும், ஜார்கண்ட் மாநிலத்தில் 29 பேரும், சண்டிகர், 21 பேரும், லடாக் பகுதியில் 18 பேரும், அந்தமான் நிக்கோபார் பகுதியில் 11 பேரும், மேகாலயா மாநிலத்தில் 9 பேரும், கோவா மாநிலத்தில் 7 பேரும், புதுச்சேரியில் 7 பேரும், திரிபுரா, மணிப்பூர் மாநிலங்களில் தலா இரண்டு பேரும், மிசோரம் மாநிலத்தில் ஒருவரும், அருணாச்சல பிரதேசத்தில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தாதர் நகர், ஹவேலி, நாகாலாந்து, லட்ச தீவுகள், தாமன் ஆகிய இதுவரை ஒருவரும் பாதிக்காத பகுதிகளாக இருந்து வருகிறது.

Today News