கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்வு சூப்பர் ஆப்பு???

 கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்வு சூப்பர் ஆப்பு???

covid-19 corona virus – modi with eps

covid-19 corona virus - modi with eps
covid-19 corona virus – modi with eps

மற்ற நாடுகளைவிட கொரோனா வைரஸ் அளவை கட்டுப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக திரு மோடி பாராட்டுத் தெரிவித்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆசைப் படுவது இயற்கை என்று கூறியவர். அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல பகுதிகளில் மேலும் பல பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிப்பது, கிராமங்களுக்கு பரவாமல் தடுப்பது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், அதிக கவனம் செலுத்துவது உள்ளிட்டவை குறித்து, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினார். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கு நீடிப்புக்கு ஆதரவளித்துள்ளனர்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி ஆகிய மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது தமிழக அரசு சார்பில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக திரு பழனிச்சாமி தெரிவித்தார். 1959 பெயர் குணமடைந்து உள்ளதாக தெரிவித்த அவர், சென்னை பாதிப்பு அதிகமாக உள்ளதால், வரும் 31ம் தேதி வரை, ரயில் மற்றும் விமான சேவையை தொடங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மருத்துவ உபகரணங்கள் வாங்க, 2000 கோடி ரூபாய் நிதியை, உடனடியாக தமிழகத்திற்கு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி, தொகையை வழங்க வேண்டும் என்றும், திரு பழனிச்சாமி கோரிக்கை விடுத்ததாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள இயக்கப்படும் சிறப்பு ரயில்களை பயணிப்பதற்கான விதிமுறைகளை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து சென்னை பெங்களூர் திருவனந்தபுரம் மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு நாளை முதல் இரு வழித்தடங்களில் இயக்கப்படும் 30 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஆன்லைனில் தற்போது தொடங்கியுள்ளது ப்ரீமியம் தட்கல் காத்திருப்பு பட்டியல் ஆகிய அம்சங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயில்களில் பயணம் செய்ய இவர்களுக்கு இணையாக கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி உள்ள போதும் காற்றோட்ட வசதியுடன் ரயில் இயக்கப்படும் என்றும் போர்வை படுக்கை விரிப்பு உணவு ஆகியவை வழங்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணச்சீட்டுகளை ஏழு நாட்களுக்கு முன்பிருந்து மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்றும், பயணத்திற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, பயணிகள் ரயில் நிலையம் வந்து அடைய வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பயணிகளுக்கு குறித்து பரிசோதனை செய்யப்பட்டு, காய்ச்சல் நோய்க்கு அறிகுறி இல்லை என்றால் மட்டுமே, பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளுக்கும், ரயில் நிலையம் ரயில் மற்றும் இறங்கும்போது கிருமிநாசினி உபயோகிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பயணிகளை அழைத்துச் செல்லவும் கூடுதலாக மூன்று நிறுத்தங்களில் நின்று செல்லும் ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு மாத காலத்திற்குள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் உணவு விடுதிகள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்கள் நேற்று முன்தினம் அணுமின் நிலைய வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட 2 போலீசார் தாக்கியதில் பரபரப்பை ஏற்படுத்தியது என்று மீண்டும் சொந்த ஊர்களுக்கு செல்வதாகக் இரண்டு வந்தவர்களை போலீசார் சமாதானம் செய்து திருப்பி அனுப்பினர்.

இதற்கிடையே முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களின் ஊர்களுக்குப் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதுவரை 9 ஆயிரம் பேர் 8 ரயில்களில் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறி உள்ளார். தொழிலாளர்கள் ஒரு வார காலத்திற்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், அதுவரை அவர்கள் முகாம்களில் தங்கி இருக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

செங்கல் சூளையில் வேலை செய்துவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 75 க்கு மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். வழிமறித்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி திருப்பி அனுப்பினர். கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 34 வகையான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தேநீர் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தாலும், பார்சல் மட்டுமே வழங்க வேண்டும். 5 பேருக்கு மேல் கூட கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் பெரும்பாலான தேனீர் கடைகள் திறக்கப்படவில்லை திறக்கப்பட்ட கடைகளிலும் பொதுமக்கள் தேனீர் வாங்க ஆர்வம் காட்டவில்லை என கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர் பார்சல் பாத்திரத்தில் தேனீர் பருக வாடிக்கையாளர்கள் அனுமதிக்க ப்பட்டனர் சிறிய ஜவுளி கடைகளில் கிடைக்கலாம் என அரசு அறிவித்துள்ள போதிலும் சேலம் மாநகரில் கடைகளை திறக்க வந்த ஜவுளி கடை உரிமையாளர்களை மாநகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் குழப்பம் நிலவியது கண்டி மாவட்டம் அரக்கோணத்தில் போலீசார் கடைகளைத் திறக்க அனுமதிக்காததால் குழப்பம் ஏற்பட்டது. எப்ப தெரியல ஏசி வசதி இல்லாத கடைகளைத் திறக்கலாம் என அரசு அறிவித்துள்ள நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் உரிய உத்தரவு பிறப்பிக்க கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது திருச்சி மதுரை நெல்லை கரைகள் திறந்திருந்தாலும் பொதுப் போக்குவரத்து இல்லாததால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

பருவமழை 16ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அந்தமான் கடல் பகுதியில் நாளை மறுதினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கழிவுகள் தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கும் கரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது 45 நாட்கள் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட போதும் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர் எனினும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது தூத்துக்குடியில் அரை மணி நேரம் பெய்த மழையால் ஆறுகளில் தண்ணீர் தேங்கியது மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் ராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் வண்டிக்காரர் ஊராட்சி அலுவலகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் இரண்டு மணி நேரம் மழை கொட்டுகிறது இதனிடையே வரும் 16ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப் பெற வாய்ப்பு உள்ளது அதனை தொடர்ந்து அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளில் வரும் 14ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியகூறுகள் உள்ளன மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் தஞ்சை திருவாரூர் நாகை புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை நெல்லை தென்காசி ஆகிய மாவட்டங்களில் பரவலாக இடி மின்னலுடன் மழை வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார் மதுரை திருச்சி ஈரோடு கரூர் சேலம் வேலூர் மாவட்டங்களில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று கூறியவர் மக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

Today News