கொரோனா வைரஸ் – அரசுகளே! அரசியல்வாதிகளே! பதில் சொல்லுங்கள்???

 கொரோனா வைரஸ் – அரசுகளே! அரசியல்வாதிகளே! பதில் சொல்லுங்கள்???

Covid-19 Corona Virus government and politicians are only responsible

 Covid-19 Corona Virus government and politicians are only responsible
Covid-19 Corona Virus government and politicians are only responsible

கரோனா வைரஸ் உலகை புரட்டிப் போட்ட ஒற்றை செல் உயிரி, உலகில் பல்வேறு சமயங்களில், பல்வேறு வகையான வைரஸ் கிருமிகள் பரவி, பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. பல நூற்றாண்டுகளாக அடையாளம் காண முடியாத கிருமிகளின் அட்டூழியங்கள், கொஞ்ச நஞ்சமல்ல. வரலாறு முழுக்க, இது போன்ற பெரும் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பல நாடுகளில் மட்டும், இது போன்ற வைரஸ்கள் பரவி, மக்களை கொன்று குவித்ததை நாம் பார்க்கமுடியும். எலிக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், எபோலா காய்ச்சல், இன்னும் எண்ணற்ற நோய்கள்.

பல நூற்றாண்டுகளாக தடுக்க முடியாமல் மனிதகுலத்தை ஆட்டிப்படைக்க நினைத்தன. அவற்றையெல்லாம் தாண்டி, மனித இனம் வெற்றிகரமாக வாழ்ந்து வருகிறது. என்றால், மனிதகுலத்தின் கூட்டணி தத்துவம், அதன் செயல் ஊக்கமும், ஆக்கமும், உழைப்பும்தான். இதைத்தவிர, மனித குலத்தை வாழவைத்தது ஒன்றும் அல்ல. பல ஆயிரக்கணக்கான அறிவியல் அறிஞர்களின் கடின உழைப்பால், அப்பாவி மக்களின் கடின உழைப்பால் மட்டுமே, இந்த உலகம் இன்றைக்கு, இந்த நவீன யுகத்திற்கு நகர்ந்து வந்திருக்கிறது. ஆனாலும் இயற்கை நம்மை தண்டிப்பதை விட்டுவிடவில்லை.

இன்றைக்கு கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி, ஐரோப்பிய நாடுகளையும், அரபு நாடுகளையும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆசியா என்று அத்தனை நாடுகளையும், கவ்வி பிடித்துள்ளது. கண் சிமிட்ட கூடிய நேரத்தில், கணக்கில்லா உயிர்களை பலி வாங்கி செல்கிறது. பல ஆயிரக்கணக்கான உயிர்கள்இதுவரை, இந்த வைரசுக்கு இன்னும் எத்தனை லட்சக்கணக்கான உயிர் விட போகிறார்கள்? என்ற கேள்வி நம் இதயத்தை நொறுக்குகிறது. ஆனாலும், மனிதகுலம் போராடிக் கொண்டுதான் இருக்கிறது.

தடுப்பு மருந்துகளும், பரிசோதனைக்கும் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாளும் தேவை அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதுபோன்ற போராட்டங்களை, அரசுகள் தன்னலமின்றி சுயநலமின்றி, மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு, அவர்கள் வாழ்வை மீட்டெடுக்க, அவர்களுடன் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க, செய்துவரும் முயற்சிகள் சில நாட்களில் தெரிந்துவிடும்.

ஆம், அரசு மக்களுக்கானதா? அல்லது அது மக்களையே மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறதா? என்பதை கண்டுபிடிக்க, பெரிய அறிவாளியாக இருக்க வேண்டியதில்லை. பாமர மக்கள் கூட அரசுகளின் செயல்பாடுகளை, அக்குவேறு, ஆணிவேராக பிரித்து பார்த்துவிடுவார்கள். அந்த அடிப்படையில், இந்திய அரசு, இதுவரை, சாமானிய மக்களுக்கும், தினம் தினம் அல்லல்படும் ஏழை பாழை மக்களுக்கும், எதுவும் செய்யவில்லை. என்று பார்க்கும் போதே பற்றி எரிகிறது இற்றுப்போன வயிறுகள்.

ஏழைகளை, அங்கும் இங்கும் எங்கும், நடமாட விடியாமல், ஒட்டுமொத்த இந்திய துணைக் கண்டத்தையும், மூளையில் உட்கார வைத்த விட்ட பிறகு, அவர்களின் ஒருவேளை சோற்றுக்கும், எந்த ஏற்பாடும் செய்யாமல், ரேஷன் கடைகளில் இலவச அரிசியும், அவர்கள் கைகளில் ஆயிரம் ரூபாய் திணித்தால், உட்கார்ந்து விடுவார்களா? 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு, இவர்கள் கொடுக்கும் 15 கிலோ அரிசியும், ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணையும் வைத்துக்கொண்டு, ஒரு வாரம் சாப்பிட முடியுமா? இதை கூட புரிந்து கொள்ளாத இந்த அரசு மக்களுக்கான அரசா? என்கிற கேள்வியுடன், தடுக்க முடியாத கோபம் கொப்பளித்து, கிளம்புகிறது. தத்தளித்து இருக்கிறவங்களுக்கு, சற்று ஓய்வு அளித்து ஆறுதலுக்காக, அன்னாடம் காட்சிகளை, கதற விடாமல் காப்பாற்றி இருக்கலாம். இந்த கேடுகெட்ட அரசு. ஆனால், கேடி பையல், திருட்டுப்பயல் என்று, நாடு முழுக்க பெயரெடுத்த கிரிமினல்களை, கை ஆட்டி, பிளைட் ஏற்றி விடும் இந்த அரசுகளுக்கு, நாளை பட்டினியால் சாகப்போகும், மக்களைப் பற்றி, எள்ளளவும் கவலை இல்லை. அவர்கள் மீது என்றைக்குமே கருணை இல்லை.

இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு வாழக்கூடிய சுமார் 40 கோட மக்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து இருந்தால், ஒரு மாதத்திற்கு எப்படியோ காலம் தள்ளி இருப்பார்கள். முதலில் ஊரடங்கு உத்தரவு போட்டுவிட்டு, அதை நீட்டிக்கும் பொழுதாவது, பரிசீலித்து இருக்கலாம். பவ்யமாக ஆடிக்கொண்டிருக்கும் பிரதமரின் பேச்செல்லாம் அல்லாடிக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றியோ, மக்களின் வாழ்க்கையைப் பற்றியோ, எள்ளளவும் எண்ணம் இல்லை. இதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டார் அவர் அவர் பேச்சில்.

விவசாயிகள் பணிகள் தொடங்கலாம், அவர்களை முடக்கக் கூடாது என்று உத்தரவிட்டு கிராமத்து வாசலில் போலீசை உட்கார வைத்துவிட்டு, ஒருவரும் வெளியே வரக்கூடாது என்று தடியடி நடத்திய இந்த அரசுக்கு தெரியுமா? விவசாயிகளின் வேதனை. பயிர் நட்டு, நீரூற்றி, பாடுபட்டு பயிராக்கி, பருவம் வந்ததும், அதை காசாக்கிட எண்ணி இருக்கும், இந்த அப்பாவி விவசாயிகளின் சோகம், உங்கள் காதுகளுக்கு, கண்களுக்கு எப்போதும் புலப்படாது. கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆவது, உங்கள் காதுகளை கொடுத்து கேளுங்கள். விவசாயிக் கூலி தொழிலாளிகள் கிடைக்காமல், லட்சக்கணக்கான விவசாயிகள், இந்தியாவின் முதுகெலும்பை தாங்கிக் கொண்டிருக்கும் அந்த தூண்கள் தவிக்கின்ற தவிப்பை, துடிக்கிற துடிப்பை, உங்களால் உணரமுடியும். கொஞ்சமேனும் அக்கறையோடு, கீழே இறங்கி வாருங்கள், அவர்களின் கண்ணீர், கரைபுரண்டு ஓடும் உங்கள் கால் அல்ல, கழுத்துவரை இருக்கும். அந்தக் கண்ணீரில் நீங்கள் நீந்த வேண்டியிருக்கும். காரிலேயே பறக்கும் உங்களுக்கு, கரைவேட்டியை காப்பாற்றிக் கொள்ளவே நேரமிருக்கவில்லை. கதறிக் கொண்டு இருக்கும் விவசாயிகளின்,
கதறல் எங்கே கேட்க போகிறது?.

 Covid-19 Corona Virus government and politicians are only responsible
Covid-19 Corona Virus government and politicians are only responsible

உங்கள் உத்தரவின் பிளம்பர் வேலைக்கு போகலாம் என்று அறிவித்தீர்கள். ஹார்டுவேர் கடைகள் அடைக்கப் பட்ட பிறகு, அவர்கள் வேலைக்குப் போய் என்ன பயன்?, பிளைவுட் கிடைக்காத நேரத்தில், தச்சர்கள் வேலைக்கு போய் என்ன பயன்? கிராமபுறங்களில் கொத்தனார்கள் வேலைக்குப் போகலாம் என்றீர்கள், இதை விட கேடு கெட்ட உத்தரவை ஒருநாளும் இந்திய துணைக்கண்டம் பார்த்திராதது. ஒரு கடையும் திறக்கவில்லை, ஒரு பொருளும் கிடைக்கவில்லை. ஒருவரும் வேலைக்கு வரவும் தயாராக இல்லை என்கிற பொழுது, வேலைக்கு செல்லுங்கள் என்று சொன்னால், சிரிக்காமல் என்ன சொல்ல? சிறு குறு தொழில்கள் நடத்தலாம் என்ற உத்தரவை எள்ளி நகையாடுவதா? கில்லி விளையாடுவதா?

ஒரு நோய்க்கு தீர்வு என்று, அந்த நோய் பின்னால் ஓடுவதை, முட்டாள்தனம் என்று சொல்வதைத் தவிர, வேறு எதுவும் சொல்வது.வள்ளுவர் வாக்கினில் வைரவரிகள் 2

நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்

என்று என்றோ சொன்னார். காதுகள் தான் செவிடாகி போய்விட்டதே, கருத்துக்கள் தான் குருடாகிப் போய்விட்டதே உங்களக்கு. நோய், அதன் தன்மை, அது தொடங்கிய இடம், என்று தெள்ளத்தெளிவாக திட்டமிட்டிருந்தால், 2000 பேரை பிடித்து சிறையில் போட்டு, மருத்துவ சிறையில் வைத்து, அவர்களுக்கு வைத்தியம் பார்த்து இருந்தால், 140 கோடி மக்களுக்கும் இன்று இம் மாபெரும் வேதனை வந்திருக்காதே. அல்லும், பகலும் ஒருவேளை சோற்றுக்கும் அலையும் இந்த மக்களுக்கு, இந்த மாபெரும் இன்னலும் தீங்கும் ஏற்பட்டிருக்காது. உங்கள் அறிவின் வெளிப்பாடு தான் இது என்று சொல்ல வேண்டியதில்லை உங்களுக்கு.

சீனாவில் தொடங்கி, உலகம் முழுக்க பரவிக் கொண்டிருக்கும் பொழுது, உலக சுகாதார மையம் கதறிக் கொண்டிருந்த நேரத்தில், அந்நிய அதிபரின் கால்களுக்கு, பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தேன். விளையாட்டு மைதானம் யார் கேட்டது? இவையெல்லாம், சோற்றுக்கு வழி இல்லாத போது, இந்த மக்கள் சோம்பிக் கிடக்காமல், சோர்வடையாமல், எறும்பு போல திரும்பி வந்தனர். நீங்கள் சுவர் எழுப்பி அவர்களை வருந்த வைத்தீர்கள். நாட்டில் ஏழ்மை இல்லை என்று சொல்லுவது, எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம் என்று அத்தனை நாடுகளும் அறிந்திருக்கின்றனர். ஏழ்மை மறைப்பதை விடுத்து, அதை ஒழிப்பதை கையில் எடுத்தால், துடிப்பான இளைஞர்களை, எடுப்பாக கையாண்டால், ஏழ்மை விடுப்பாக சென்றுவிடும். அப்படி ஏழ்மையை ஒழிப்பதில் பற்றி, எந்த விவாதங்களும் நாட்டில் நடைபெறுவதாக நமக்குத் தோன்றவில்லை.

இப்படி உயிர்க்கொல்லி நோய்கள், படம் எடுத்து வரும் வேளையில் ஆவது, மக்களைக் காப்பாற்ற, நாம் ஏழை நாடுகள் என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்காமல், இந்த மக்களின் வாழ்வு மேம்பட, இது போன்ற பெரும் துயரில், அவர்களை தள்ளி விடாமல் பார்த்துக் கொண்டாலே போதும், நீங்கள் இந்த மக்களுக்கு எதுவும் செய்யத் தேவையில்லை. அதை மக்களும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், நீங்கள் கொள்ளை அடிப்பதை, அவர்கள் ஒரு நானும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. அதற்காக ஆயுதங்கள் ஏந்தி போராடுவார்கள் என்று, நானும் ஆருடம் சொல்லவில்லை.

இந்த மக்களின் வாழ்வை வளம் பெறச் செய்ய, நீங்கள் செய்ததெல்லாம் என்ன? என்று கணக்கிட்டு பார்த்தோமானால், மருத்துவம் படிப்படியாக தனியாருக்கு விட்டுக் கொண்டு வருகிறீர்கள். கல்வியை ஏற்கனவே தனியார்மயம் ஆகி விட்டீர்கள். இந்தியாவின் அத்தனை அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும், அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படித்தவர்கள் மட்டுமே. தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் என்றென்றும் இருந்ததில்லை.

ஆனால் இன்றைக்கு தனியார் பள்ளிகளில், கல்லூரிகளில் படித்தால் மட்டுமே, கௌரவம் என்ற ஒரு போலி மோகத்தை, மக்கள் மனதில் விதைத்து விட்டீர்கள். தனியார் மருத்துவமனைகள் தரமாக இருக்கின்றன என்கிற ஒரு போதையை ஏற்றி விட்டீர்கள். அதைத் தவிர மக்களுக்கு வேறு என்ன நீங்கள் செய்திருக்க முடியும்? தொலைத்தொடர்பு சாதனங்களை தனியாருக்கு தாரை வார்த்து விட்டீர்கள். இன்சூரன்ஸ் துறையில் ஒட்டுமொத்தமாக ஒழித்து கட்ட முடிவு எடுத்தீர்கள். போக்குவரத்து துறையில் வானூர்தியை ஒட்டுமொத்தமாக விலைக்கு கொடுத்து விட்டீர்கள். தொடர் வண்டி நிறுவனங்களை, இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் தனியார் கைவைக்க அதை விட்டுவிட முடிவு செய்தீர்கள். 100 வழித்தடங்களை பராமரிக்க தேர்ந்தெடுத்தீர்கள், மாநிலங்களும் பயன்படுத்துகிற பேருந்து வசதிகளை என்ன செய்யப் போகிறீர்களோ புரியவில்லை? ஏற்கனவே மினிபஸ் என்ற தேவை இல்லாத ஒன்றைக் கொண்டு வந்து, இந்த மக்களுக்கு நல்லது செய்வதாக சொல்லிக்கொண்டே, தனியாருக்கு தாரை வார்த்து விட்டீர்கள். மின் உற்பத்தியில் கொடிகட்டிப் பறந்த, இந்தியாவை பிச்சை எடுக்க வைத்தீர்கள். தனியார் இதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசினால் செய்ய முடியாத அத்தனை வேலைகளையும், மன்னிக்கவேண்டும் அரசினால் செய்ய கூடிய அத்தனை வேலைகளையும், தனியாருக்கு கொடுத்து, லாபம் பார்ப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட இந்த தனியார் முதலாளிகளை, வளர்த்து வளர்த்து வயிறு வீங்க வைத்தீர்கள். இன்னும் என்னென்ன துறைகள் இருக்கிறதோ? அரசிடம், அதை எல்லாத்தையும் விற்று விட்டு, பாராளுமன்றம், நீதித்துறை, காவல்துறை, ராணுவம், என்று நான்கு துறைகளை மட்டும் கைக்குள் வைத்துக் கொண்டு, நாட்டை, இந்த பொன்னான வளம் கொழிக்கும் அற்புதமான நாட்டை, சுடுகாடாக மாற்றிக் கொண்டு வருகிறீர்கள். உங்களுடைய மூடத்தனம், அயல்நாட்டு வணிகர்களிடம், நாட்டை அடகுவைக்க மட்டுமே பயன்படுகிறது.

அந்த மூடத்தனத்தை முறியடிக்க, நீங்கள் பெருந்துயரை கொண்டு வந்து, எங்களை முழுக அடிக்கிறீர்கள். அது போலத்தான் இன்று கொரோனா வைரஸ் என்று இல்லாத ஒன்றை உருவாக்கி, வெளிநாட்டுப் பயணம் செய்தவர்களால் மட்டுமே, இது போன்ற உயிர்க்கொல்லி நோய் பரவும், என்ற நிலையில், வெளிநாட்டு பயணம் செய்த ஆயிரம் 10 ஆயிரம் நபர்களை, நாட்டிற்குள் அனுமதிக்கும் பொழுதே, பரிசோதனை செய்திருந்தால், இன்று 140 கோடி மக்களும் இப்படி ஓடி ஒளிந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. ஒரு வேலை சோற்றுக்கு, கையேந்தி பிழைக்க வேண்டிய தில்லை. உங்களுடைய முட்டாள்தனம், அடி முட்டாள்தனம், கேடு கெட்ட முட்டாள் தனம், அயோக்கியத்தனம் என்றுதான் இதையெல்லாம் சொல்ல வேண்டும். இதைத்தவிர வேறு வார்த்தைகள் இல்லை.

கொள்ளையடிப்பதற்கு என்றே ஒரு கொள்ளை நோயைக் கொண்டு வந்து, எங்கள் மேல் ஏவி, உள்ளீர்கள். மாநில அரசுகள் கொள்முதல் செய்வதினால், கொள்ளையில் பங்கு குறைந்து விடும் என்று, மத்தியில் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னீர்களே. அப்போதே புரிந்தது, நீங்கள் எப்பேர்பட்ட கொள்ளைக்கார கூட்டம் என்று. மருந்துகளும், மாத்திரைகளும் கண்டுபிடிக்காத நிலையில், மருத்துவ உபகரணங்கள் வாங்க போகிறோம் என்று, பெரும் தொகையை ஒதுக்கி, ஒன்றுக்கும் உதவாத வெறும் குப்பைகளைக் கொண்டு வந்து, குவிக்கப் போகிறார்கள் என்று நமக்குப் புலப்படுகிறது.

மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள, எதையாவது செய்தாக வேண்டுமே என்று, உதறி கொண்டிருக்கும் இந்த உதவாத கூட்டம் ,மருந்துகளும், மாத்திரைகளும் நாம் ஏன் கண்டுபிடிக்கக் கூடாது? என்கிற ஒரு கேள்வியும் எழவில்லை இங்கே. ஒரு அறிவுபூர்வமான விஞ்ஞானி கூட இந்த நாட்டில் இல்லையா? சரி உங்களுக்குத்தான் அறிவில்லை என்று அரசையும், அரசியல்வாதிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அறிவில் சிறந்த நம் சான்றோர் பெருமக்கள் உருவாக்கிய, சித்த வைத்திய முறைகளை ஏன் பயன்படுத்தக் கூடாது.

ஏன்? முயற்சி செய்து பார்க்க கூடாது. பல மருத்துவர்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பெரும் கூச்சல் போட்டுக்கொண்டு இருக்கும் வேளையில், ஏன்? அதை முயற்சி செய்யவில்லை. டெங்கு காய்ச்சல் என்று ஒரு நோய் வந்து, பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போது, அவற்றிற்கெல்லாம், தமிழக அரசு மனமுவந்து, நிலவேம்பு கசாயம் கொடுத்ததே! ஏன் அதை தொடர்ச்சியாக செய்யவில்லை? இந்த விஷ காய்ச்சலுக்கு, கொரோனா வைரஸ் என்ற விஷ காய்ச்சலுக்கு, கபசுர நீர் கொடுத்தால் சரியாகும் என்று பலபேர் சொல்கிறார்களே, சித்த வைத்தியத்தில், இதைப்பற்றி தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறதே, ஏன் முயற்சி செய்யவில்லை? அவ்வளவு மாறி விட்டீர்களா? ஒரு முறை சித்த வைத்தியத்தை முயற்சி செய்து, அது மாபெரும் வெற்றியடைந்த பிறகு, அதே முறையை ஏன் நீங்கள் மறுபடியும் முயற்சி செய்யவில்லை? அப்படி ஒரு மருந்து இருப்பதாக, நிவாரணம் அளிப்பதாக சொல்லப் படும் பொழுது, ஏன் முயற்சி செய்ய மறுக்கிறீர்கள்? அரசுகளே அரசியல்வாதிகளே பதில் சொல்லுங்கள்!!!

Today News