கொரோனா வைரஸ் உலகம் – லேட்டஸ்ட் அப்டேட்

 கொரோனா வைரஸ் உலகம் – லேட்டஸ்ட் அப்டேட்

covid-19-corona-virus-globe-thereat-for-lock-down

covid-19-corona-virus-globe-thereat-for-lock-down
covid-19-corona-virus-globe-thereat-for-lock-down

உலகின் பல நாடுகளையும் தன் காலடியில் போட்டு நசுக்கி கொண்டிருக்கும் கொடுமை, நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. ஆயிரம், பத்தாயிரம் என்று ஒரு நாளைக்கு பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் மூன்றாவது நிலையை எட்டிவிட்டது.

இதன் பிறகுதான் ஆட்டம் சூடு பிடிக்க போகிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அப்படி மருத்துவர்கள் சொல்வது உண்மையானால், இன்னும் 30 நாட்களுக்குள், 3 கோடி பேர் வரை உலகம் முழுவதும் பாதிப்புக்குள்ளாகி அவதியுறுவார்கள். சுமார் 30 லட்சம் பேர் வரை மரணமடையும் வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது. இவை அனைத்தும் யூகமாக தோன்றினாலும், சத்தியமாக வெகுதூரமில்லை. சமூக இடைவெளி இன்னும் சீரியஸாக கருதப்பட வில்லை என்றால், மக்கள் சீரியஸ் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

கொரோனா வைரஸ் இன்று மாலை நிலவரப்படி, உலகிலேயே அதிகமான கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நாடு அமெரிக்க ஐக்கிய நாடுகள்தான். அமெரிக்காவில் மட்டும் 8 லட்சத்து 48 ஆயிரத்து 617 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சுமார் 29 ஆயிரத்து 973 பேர் இந்த செய்தியை நீங்கள் படிக்கும் பொழுது 30 ஆயிரம் பேர் பட்டு விடுவார்கள் அமெரிக்காவில் 47 ஆயிரத்து 659 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நாள் மட்டும் 2341 பேர் கொரோனா வைரசினால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அமெரிக்க மக்களின் கூற்றுப்படி, அமெரிக்க அரசு கொரோனா வைரஸ் இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெகு தாமதமாகத்தான் எடுத்தது. அமெரிக்க அதிபர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த தருணத்தில் சீனா மருத்துவமனை கட்டிக் கொண்டிருந்தது. சீனா அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட்டு இருந்தபோது, டிரம்ப் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறப்போகும் தேர்தலுக்காக, முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். இதன் விளைவாகவே அமெரிக்கா மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியதாகிவிட்டது. அதிலும் இலவச மருத்துவம் இல்லாத நாட்டில், ஏழைகள் மருத்துவமனைக்கு செல்வது என்பது, கொலை கலங்களுக்கு செல்வதாகவே இருக்கும். அதையும் மீறி அமெரிக்கா மருந்துகளை வாங்குவதற்கு பதிலாக, பிணங்களை மூட்டை கட்டும் 2 லட்சம் பைகளை வாங்கியிருக்கிறது என்றால், அவர்களுடைய கொடூர மனப்பான்மையை உணர்ந்துகொள்ளலாம்.

அடுத்ததாக ஸ்பெயின் கொரோனா வைரஸ் 21 ஆயிரத்து 707 பேர் படிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இன்று மட்டும் சுமார் 435 பேர் அகால மரணம் அடைந்தனர். இதுவரை 2 லட்சத்து எட்டாயிரம் 389 பேர் கொரோனா வைரஸ் கொடூர தாக்குதலுக்கு ஆட்பட்டு உள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கை சுமார் நான்கு லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவை மிகத் தாமதமாக அறிவித்ததும், மக்கள் ஊரடங்கு உத்தரவின் வீரியத்தை உணராமல், மிகத் தாமதமாக, சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டதும் தான் அவர்களுடைய இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு அளவு தாறுமாறாக உயர்ந்துள்ளது.

அடுத்ததாக இத்தாலி உலகின் புனித நகரம் என்று அழைக்கப்படும் இத்தாலி. வரலாற்றில் இப்படி ஒரு கொடூர தாக்குதலை இதற்குமுன் எப்போதும் சந்தித்ததில்லை. ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்ததுதான் இதற்கு காரணம்.

கொரோனா வைரஸ் பற்றின தவறான புரிதல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்ததினால் மட்டுமல்ல, உலகில் அதிக பயணிகள் வந்து செல்லும் இடமாக இத்தாலி இருக்கிறது. அப்படி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு தடை விதிக்காமல், கடைசி நேரம் வரை யோசித்துக்கொண்டிருந்த இத்தாலி, இதற்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. ஆம் இதுவரை ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் இன்று மட்டும் சுமார் 3370 பேர் கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, மருத்துவமனைகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். சுமார் 25 ஆயிரத்து 85 பேர் இதுவரை கொரோனா வைரஸ்ஸின் தாக்குதலுக்கு பலியாகி உள்ள நிலையில், இன்று மட்டும் 437 பேர் உயிரிழந்து உள்ளனர். இத்தாலி இன்னும் பல லட்சக்கணக்கான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் சந்திக்கப் போகிறது என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை. ஆனாலும் இத்தாலியின் நிலை மிக மோசமாக உள்ளது. மருத்துவமனைகள் போதிய அளவில் இல்லாததும், மருத்துவர்களை நூற்றுக்கணக்கில் பறிகொடுத்து விட்ட இத்தாலி, மீண்டெழுந்து வருவதும், பழைய வல்லரசு நிலைமையை அடைவதும் இனி கனவுலகில் நான் நடக்கும்.

பிரான்ஸ், இத்தாலியை போலவே, உலகில் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் அழகான நகரம். இன்று அலங்கோலமாகி விட்டது. ஒரு லட்சத்தி 56877 வேர் இதுகொரோனா வைரஸ்ஸின் நோய் தொற்றுக்கு ஆளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 1877 ஒருநாள் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மரணத்திற்கு எங்கும் பஞ்சம் இல்லை. சுமார் 21 ஆயிரத்து 340 பேர் இதுவரை பிரான்ஸ் இழந்துள்ளது. இன்று மட்டும் 540 பேர் சவக்குழிக்கு சென்றுள்ளனர், என்றால், சிட்டி ஆப் லவ் என்று அழைக்கப்படும் காதல் நகரின் வீதிகளில், பிணங்கள் குவிந்து இருக்கின்றன சாரைசாரையாக சவ ஊர்வலங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

சூரியன் மறையாத நாடு என்று பெயர் பெற்ற இங்கிலாந்து, கொரோனா வைரஸ்ஸின் தாக்குதலுக்கு தப்பவில்லை. எதிரிகளின் காலடித்தடம் பதிக்காத இங்கிலாந்து நகரத்தில், உலகின் மிகப்பெரிய ராஜ்யத்தை ஆண்ட, ஆங்கில சாம்ராஜ்யத்தின், அந்திம காலம் இதுதான் போலும். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அடிபணிந்து, அடிமையாகிப் போய் விட்டது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அழிந்து கொண்டிருக்கிறது. சுமார் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 491 பேர் இதுவரை நோய்தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று மட்டும் சுமார் 4450 ஒரு வேர் புதியதாக கொரோனா வைரஸ் நோய்த்தொற்று முடிவு செய்யப்பட்டு, மருத்துவமனைக்கு அடைக்கலம் புகுந்தனர். இதுவரை 18 ஆயிரத்து 100 பேர் இறந்து, மருத்துவர் இல்லாமல் திண்டாடுகிறது இங்கிலாந்து. இன்று மட்டும் 763 பேர் மரணமடைந்த சூழ்நிலையில், இதற்கு பிறகு எழுந்து நிற்கும் இங்கிலாந்து என்பது கனலை நீர்தான்.

இங்கிலாந்து பிரதமர் இன்று அறிவித்த அறிவிப்பின்படி, இந்த ஆண்டு எஞ்சியிருக்கும் எட்டு மாதங்களுக்கும், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தால் ஒழிய, இங்கிலாந்து தலைநிமிர்ந்து நடக்க முடியாது என்று வேதனையுடன்தெரிவித்தார். அந்த அளவிற்கு மிகச் சிறிய நாடான இங்கிலாந்து, மிகப்பெரிய சவாலை எதிர் கொண்டிருக்கிறது. இதுவரை அந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, ஒரு மருந்து கூட கண்டுபிடிக்காத நிலையில், அடிபணிவது தவி,ர அடிமையாவது தவிர, வேறு வழியே இல்லை. சூரியனுக்கும் தலைவணங்காத இங்கிலாந்து, இன்று சொற்ப வைரஸுக்கு அழிந்து கொண்டிருப்பது வேதனையிலும் வேதனை.

அடுத்ததாக துருக்கி பெருமளவு சுற்றுலா பயணிகள் மூலம் வருமானத்தை ஈட்டும் சுற்றுலாத் தலங்களில் மிக முக்கிய சுற்றுலாத் தளமான துருக்கியில் இதுவரை 98 ஆயிரத்து 674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று மட்டும் சுமார் 3 ஆயிரத்து 83 பேர் கொரோனா வைரஸின் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுவரை சுமார் 2376 பேர் உலகில் இன்று மட்டும் சுமார் 117 பேர் மரணமடைந்தனர். கொரோனா வைரஸின் நோய் தொற்று பாதிப்பை மிக சாதாரணமாக எடுத்துக் கொண்ட துருக்கியின் நிலை மிக மோசமாக இருக்கிறது ஏனென்றால் இன்று மட்டும் சுமார் 3 ஆயிரத்து 83 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார் கள் என்றால் வரும் காலங்களில் இது மிக வேகமாக வைரஸின் தாக்குதலை எதிர்பார்க்கலாம் என்றுதான் நம்பப்படுகிறத. துருக்கி பிரான்ஸ் ஜெர்மனி அல்லது இங்கிலாந்தை போல மருத்துவ வசதிகளில் பெயர் போனது அல்ல.
சில முன்னேறிய நகரங்களைக் கொண்ட துருக்கியில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அந்த நாடு தலைகீழாகி விடும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. இந்த தாக்குதலுக்கு தப்பிக்குமா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.

ஜெர்மனி உலகின் வல்லரசு நாடுகளை வம்புக்கு இழுக்கும் கொண்ட நாடு வலிமையான ஆடு மட்டுமல்ல திரும்பிப் பார்க்கும் அத்தனை துறைகளையும் உலக நாடுகளை போட்டியிட்டு முடிகளை எடுக்கும் அளவிற்கு மிகவும் வளமையான நாடு.

உலகப் போர்களில் தோற்று இருக்கலாம். ஆனால், உலக பொருளாதாரத்தில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. வேலை பார்க்கும் ஒரு ஜெர்மனி தொழிலாளியின் சம்பளம் 4 அமெரிக்க தொழிலாளியின் சம்பளத்துக்கு இணையானது. ஒரு ஜெர்மனி தொழிலாளியின் சம்பளத்தைக் கொண்டு 100 இந்திய தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்து விடலாம், என்றால், ஜெர்மனியின் பொருளாதாரத்தை தலையை அண்ணாந்து பார்க்க வேண்டியிருக்கிறது. உலகப் பொருளாதாரத்திற்கு போட்டியிடும் அளவிற்கு வளம் கொழிக்கும் நாட்டில், வரிசை கட்டிக் கொண்டு செல்கிறது கொரோனா வைரஸ்.

இந்த வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 648 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இன்று ஒரு நாள் மட்டும் சுமார் 2 ஆயிரத்து 195 பேர் புதியதாக கொரோனா வைரஸின் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். இதுவரை சுமார் 5 ஆயிரத்து 315 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று மட்டும் 229 பேர் மரணமடைந்துள்ளனர். பலியான பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளில் உயிர்பலி சுமார் 20 ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில், ஜெர்மனியின் மருத்துவ சிறப்பு வாய்ந்தது தான். இதுவரை ஜெர்மனியில் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர் இழப்பு என்னவோ ஐந்தாயிரத்திற்கும் வைத்துக் கொண்டிருப்பது,, ஜெர்மனியின் சர்வ வல்லமையை காட்டுகிறது. ஆனாலும் வைரஸின் தாக்குதலுக்கு பிடிக்காத நிலையில், யார்தான் என்ன செய்யமுடியும். ஜெர்மனியின் உயிர்பலி எட்டிப்பிடிக்க கூடிய அளவில் இருக்கிறது அடுத்த கட்டத்தில் ஜெர்மனி என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்ததாக ஈரான், ஏற்கனவே அமெரிக்கா காலில் சிக்கி நசுங்கி கொண்டு இருக்கும் ஈரான், எண்ணெய் வள நாட்டில் மிக முக்கியமான நாடு. ஏற்கனவே அமெரிக்கா ஒரு முறை படியெடுத்து அங்கிருக்கும் அத்தனை என்னை வயல்களையும், அபகரித்துக் கொண்டு, அப்பட்டமாக கொள்ளையடித்துச் சென்றதை நாம் மறந்துவிட முடியாது.

அப்படி அனாதையாக நிற்கும் ஈரானுக்கு, இது ஒரு சோதனை காலம். இன்று வரை அமெரிக்காவின் அட்டூழியங்கள், ஈரானில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, டிரோன் தாக்குதலில், ஈரானின் ராணுவ தளபதி, தலைநகரில் வைத்தே, கொல்லப்பட்டார். எனும் செய்தியே, அட்டூழியத்திற்கு கட்டியம் கூறுகிறது. நிராதரவாக நிற்கும் ஈரானுக்கு, யாரும் உதவமாட்டார்கள், ஏனென்றால் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் அவ்வாறு இருக்கின்றன. அமெரிக்காவில் ஆதரவில் இருக்கும் அத்தனை நாடுகளும், ஈரானுக்கு எந்தவித உதவியும் செய்ய முடியாது. காலம்காலமாக ஈரானுக்கு நட்பு நாடாக இருந்து வரும் இந்தியா கூட, ஒரு வாரத்திற்கு முன்புதான் மாத்திரைகளை அனுப்ப முடிந்தது.

ஆனாலும் வைரஸின் தாக்குதலுக்கு பலியாகி விடக் கூடிய நிலையில் தான் ஈரான் இருக்கிறது. இதுவரை 85 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் சுமார் ஆயிரத்து 194 மட்டும் கொரோனா வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இதுவரை ஆயிரத்து 397 பேர் பலியாகி உள்ள நிலையில் 94 பேர் பலியாகி உள்ளனர். ஒருபுறம் போர் சூழல், மறுபுறம் போரை விட கொடுமையான வைரஸ் தொற்று என்று எப்படி சமாளிக்கப் போகிறது என்பதுதான் கேள்வி. அமெரிக்கப் போர்க் கப்பல்களை தாக்குவதா? மக்களைத் தாக்கும் வைரஸ் நோய் தாக்குவதா? என்று ஈரான் அதிபர் தான் முடிவு செய்ய வேண்டும்.

அடுத்ததாக முக்கிய கொரோனா வைரஸ் நாடு சீனா. ஆம் சீனா பிறகு அப்படித்தான் எல்லோரும் அழைக்கப் போகிறார்கள். அதைவிட கொரோனா வைரஸ் என்றாலே, சீனா தான் ஞாபகத்துக்கு வரும். அந்த அளவிற்கு உலக மக்கள் அனைவரும் சீனர்களை வெறுப்பாக பார்க்கத் துவங்கிவிட்டனர். சீனர்கள் வேண்டுமென்றே, கொரோனா வைரஸ்ஸை உற்பத்தி செய்து, உலக நாடுகளுக்கு பரப்பி வருகிறார்கள் என்றும், அதை உலக நாடுகள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் சீனா என்னவோ கடந்த ஆண்டு, டிசம்பர் மாதத்தின் இறுதியில், தங்கள் நாட்டில் இப்படி ஒரு வைரஸ் உயிர்க்கொல்லி நோய் பரவி வருவதாகவும், அந்த வைரஸ் உயிர்க்கொல்லி நோய்க்கு, உயிர்பலி ஏற்பட்டு விட்டதாகவும், உலக சுகாதார அமைப்பிற்கு கடிதம் கொடுத்து விட்டது. அப்படி கொடுத்த தகவலின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரோஸ் உலக நாடுகள் அனைவரும் கொரோனா வைரஸ்ஸின் தாக்குதலுக்கு தயாராக இருக்கும்படி, 4 மாதங்களாக, உயிர் போகும் அளவிற்கு கதறிக் கொண்டிருக்க, ஒருவரும் செவி கொடுக்கவில்லை. உயிர் போகும் நிலையில் ஓடிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, அதை அற்பத்தனமாக பார்த்தனர். ஆனாலும், அமைப்பின் தலைவர் ரெட் ரோஸ் மிக நேர்த்தியான மனிதர், சீனாவை யாரும் குறை கூறுவதை அவர் விரும்பவில்லை. ஏனென்றால், சீனா தன் பங்குக்கு செய்ய வேண்டிய அத்தனையும் செய்து விட்டது. உலக நாடுகள் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு இருக்கும்பொழுது, மிக லாவகமாக தங்களுடைய பாதுகாப்பு அம்சங்களையும், மருத்துவமனைகளையும், மிக வீரியமாக எடுத்து, உலகத்தின் பார்வையில் தப்பித்துக் கொண்டது.

ஆனாலும் தார்மீக ரீதியாக பார்க்கும் பொழுது, இன்று அதிக அளவில் மருத்துவ உபகரணங்களை தயாரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்னவோ சீனாதான். எப்படி பார்த்தாலும், சீனாவின் பொருளாதாரம் விழுந்தது விழுந்தது தான். கொரோனா வைரஸ்ருந்து பல நூற்றுக்கணக்கான கம்பெனிகள், இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு தாவிக் கொண்டிருக்க, தக்க நேரத்தில் காலை வாரி விட அமெரிக்காவும், காத்துக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே அமெரிக்க அதிபர், சீனர்களை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், சீனா தான் இந்த வைரசின் பாதிப்புக்கு பொறுப்பேற்க வேண்டும், இதனால் சீனா மீது பொருளாதார தடை விதிப்பதை பற்றியும் யோசித்து வருகின்றன. தடை விதிப்பது இருக்கட்டும், சீனா அமெரிக்கா மீது பொருளாதாரத் தடை விதிக்க கூடாது என்று, இன்னொரு பக்கம் பயம் எழுந்துள்ளது. ஏனென்றால் சீனாவின் பொருளாதாரம் அப்படி ஒரு வலிமையானது. சீனர்கள் கையில், அமெரிக்காவின் பொருளாதார முதுகெலும்பை இருப்பதை, அமெரிக்கா இன்னும் உணரவில்லை. இன்னும் சில மாதங்களில் அமெரிக்க அதிபர் தேர்தலை எதிர்நோக்கியுள்ள ட்ரம்ப், இப்படியெல்லாம் வாய்ச்சவடால் விடுவாரா? அப்படி வாய்ச்சவடால் விடவில்லை என்றால், அமெரிக்க மக்கள் தான் சும்மா இருப்பார்களா? ஆனாலும் ஜி ஜின்பிங், கழுவுற மீனில் நழுவுற மீன், இந்த இக்கட்டான நிலைமையில் கூட, தனது நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து விடக்கூடாது என்பதற்காக, தயங்காமல் சில முடிவுகளை எடுத்து, காப்பாற்றிக் கொண்டார்.

covid-19-corona-virus-globe-thereat-for-lock-down
covid-19-corona-virus-globe-thereat-for-lock-down

சீனாவில் 3 நகரத்தில் மட்டுமே அங்கு ஊரடங்கு உத்தரவு இருக்கிறது. மற்ற நகரங்களில் தளர்த்தப்பட்டு, நடைமுறை வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர் சீனர்கள். ஆனால் உலகமே இப்பொழுதுதான் ஊரடங்கு உத்தரவை, அடன் அவசியத்தை புரிந்து கொண்டு, ஆரம்பித்திருக்கிறார்கள். சீனா அடுத்தமாதம் எழுந்து நின்றுவிடும். உலகம், உலக நாடுகள், வல்லரசு நாடுகள், என்று எவரும் அடுத்த மாதம் வாய் திறக்கவே முடியாது. அடுத்த மாதம்தான் கொரோனா வைரஸ் உண்மையான முகத்தை காட்டப் போகிறது. ஆனால், சீனாவில் அதன் கணக்கு முடிந்து விட்டதாகவே தெரிகிறது. இதுவரை சீனாவில் 82 ஆயிரத்து 788 பேர் கொரோனா வைரஸ் நோய் தொற்று பூர்த்தி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ்ஸின் நோய் தொற்று, 1632 மட்டுமே வெறும் முப்பது பேருக்கு மட்டுமே குரல் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்று யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் அமெரிக்க அதிபரின் கூற்றுப்படி, 10 லட்சம் பேர் வரை பாதிப்பு இருக்கக்கூடும், ஆனால் சீனா அவர்கள் கணக்கு வெளியில் சொல்லவில்லை என்றும், பொய் கணக்கு காட்டுகிறார்கள் என்றும், மிக மோசமாக குற்றம் சாட்டினா.ர் இதற்கெல்லாம் எந்த பதிலும் சொல்லாத சீனா, வாய்மூடி மௌனமாக இருந்து கொண்டு, தனது உள்ளடி வேலைகளை செய்து வருவதாகவே தெரிகிறது.

ரஷ்யா கொரோனா வைரஸ் ன் நோய் தொற்று 57 ஆயிரத்து 999 பேர் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளனர் 5 ஆயிரத்து 236 பேர் குருநாத் வைரஸின் நோய் தொற்று சிகிச்சை பரிசோதனைக்கு பிறகு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வரும் நிலையில் ரஷ்யா உயர்தர மருத்துவ சிகிச்சைகளுக்கு பெயர் போனது மருத்துவமனைகளுக்கு பஞ்சமில்லாத ரஷ்யாவில் எந்த அளவிற்கு தலைவிரித்தாடும் என்பது கேள்விக்குறிதான் ஏனென்றால் இதுவரை 513 பேர் மட்டுமே ரஷ்யாவில் உயிரிழந்து உள்ளனர் ஆனால் இந்த கணக்கு நீடிக்காது இன்று மட்டும் சுமார் 57 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இது மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது ஆனாலும் ரஷ்யாவின் கதை வேறு உலகம் என்ன சொன்னாலும் ரஷ்ய அதிபர் புதினின் கணக்கு ஒரு தனி கணக்குதான் ரஷ்யர்களின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் விமர்சிக்கப்பட்டாலும் அவர்கள் எப்பொழுதும் தனித்துவமிக்க தங்களது மருத்துவ சிகிச்சை முறைகளால் உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறார் உலகில் அதிக மருத்துவமனை கொண்ட நாடாகும் இன்று வரை இருந்து வருகிறது.

பிரேசில் மூன்றாம் உலக நாடுகளில் மிக முக்கிய நாடு பிரேசில் இந்தியாவின் மிக நட்பு நாடாக இருந்து வருகிறது அடிக்கடி ஏற்படும் கலவரங்களுக்கு பெயர்போன பிரேசில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மாபெரும் கலவரத்தினால் பாதாளத்திற்கு சென்ற பொருளாதாரம் இப்பொழுதுதான் அரும்பி முளைவிட ஆரம்பித்திருக்கிறது அதற்குள் அடுத்த தாக்குதல் பிரேசில் மிகப்பெரிய நாடுகளில் ஒரு நாடு பரப்பளவில் பெரியது என்றாலும் மக்கள்தொகையில் சொல்லக்கூடிய அளவிற்கு இல்லை அப்படி மூன்றாம் உலக நாடுகளில் முக்கிய கேந்திரமாக விளங்கும் பிரேசிலின் தொழில்நுட்பம் இன்னமும் சுமார் ரகம் தான் இந்தியாவில் செயல்படும் போன்ற மிகப்பெரும் ஆலைகளை அங்கு இன்னும் கட்டமைக்க வில்லை இப்போதுதான் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன விவசாயமே அவர்களது மிக முக்கிய தொழிலாக இன்று வரை இருந்து வருகிறது இறைச்சி ஏற்றுமதியில் நம்பர் ஒன் நாடான பிரேசிலின் அடிநாதமே என்று ஆடிப்போய் இருக்கிறது ஆம் சுமார் 45 ஆயிரத்து 757 பேர் இதுவரை கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சுமார் 2006 178 பேர் மருத்துவமனைகளில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் உயிரிழப்பு சற்று கூடுதலாகவே காணப்படுகிறது. சுமார் 2 ஆயிரத்து 906 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 165 பேர் மரணம் அடைந்தனர்.

மருத்துவத் துறையில் இன்னும் வளர்ச்சி அடைந்த நாடாக பிரேசிலில் இருந்து வரும் காரணத்தினால் நோய்த்தொற்று நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை ஆனால் கொரோனா வைரஸ் நோய் தொற்று யாருக்காகவும் காத்துக்கொண்டு இருக்க போவதில்லை. பிரேசில் அசுர வேகத்தில் செயல்பட்டால் கூட வரக்கூடிய ஆபத்தை தடுக்க முடியாது.

கனடா உலகத்தின் மிகப்பெரிய நாடு. மனிதர்கள் வாழ தகுந்த சிறந்த நாடுகளில், முதல் பத்து இடங்களுக்குள் வந்துவிடும். அப்படி ஒரு மிகச் சிறந்த நாடு. அமைதியான நாடு. யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காத, கனடா நாட்டின் கட்டுப்பாடுகளும், சட்ட திட்டங்களும், சற்று கடினமானவை தான். ஆனாலும், இந்தியர்களுக்கு மிகவும் ஆதரவாக செயல்படும் கனடாவுக்கு, இப்பேர்பட்ட நிலைமை வந்திருக்கக் கூடாது என்றே தோன்றுகிறது. ஆனாலும் கனடா நாட்டினர் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். என்று இன்றைய உலகம் கருதுகிறது. ஆம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் மட்டுமல்ல, அங்கு அரசு வேலைகள், தனியார் வேலைகள், என்று எவருக்கும் பிரித்துப் பார்க்காமல், அரசு அறிவித்திருக்கும் சலுகைகள் தலைகீழாகத்தான் மாற வேண்டியிருக்கிறது. சுமார் 10 லட்சம் வரை நிவாரணத் தொகையை ஒவ்வொரு குடும்பத்திற்கும் அறிவித்திருக்கிறது அரசு. இப்படி ஒரு அரசு உலகில் இல்லை. நாம் ஐந்துக்கும் பத்துக்கும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இந்தியா எங்கே, 5 லட்சம் 10 லட்சம் என்று மக்களுக்கு வாரி வழங்கும் அரசு எங்கே, கொரோனா வைரஸ் தோற்று சற்று வேகம் எடுக்கத் துவங்கி உள்ள இந்த நேரத்தில், 40 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள் மட்டும் சுமார் ஆயிரத்து 768 பேர் நோய் தோற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் இதுவரை 1974 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 140 பேர் உயிரிழந்து உள்ளனர். என்றாலும், கனடா நாட்டின் தீவிர நடவடிக்கைகள் மிக விரைவில் அவர்கள் மீண்டு எழுந்து விடுவார்கள் என்பதற்கான அறிகுறிகள் தெள்ளத் தெளிவாகத் தென்படுகின்றன.

Today News