பிறந்தநாள் வாழ்த்துகள் காரல் மார்க்ஸ்

 பிறந்தநாள் வாழ்த்துகள் காரல் மார்க்ஸ்

Happy Birthday Karl Marx

Happy Birthday Karl Marx
Happy Birthday Karl Marx

காலந்தோறும் காரல் மார்க்ஸ்

தான் பிறந்து இரண்டு நூற்றாண்டுகள் கழிந்தும் தன்னை ஆணித்தரமாக, ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு வீட்டிலும், தனது தத்துவத்தை, தனது தேவையை உணர வைத்தவர் காரல் மார்க்ஸ்.

எங்கெல்லாம் தொழிலாளிகள் இருக்கிறார்களோ? எங்கெல்லாம் தொழிலாளிகள் வெகுண்டெழுந்து, போர்க்கொடி தூக்கி, வீதியில் இறங்கி, உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்கிற முழக்கத்தை முன் வைக்கிறார்களோ? அங்கெல்லாம் இன்றும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர் காரல் மார்க்ஸ்.

கம்யூனிச தந்தையின் இருநூற்று இரண்டாவது பிறந்த தினமான இன்று, காரல் மார்க்ஸ் அவர்களை நினைவு கூறுவதன் அவசியம் என்ன? பெரிய பிடிகைகளைப் போட்டு, ஒரு புரட்சியாளர், ஒரு பேரறிஞர், ஒரு உண்மையான உழைக்கும் வர்க்க தலைவனை நினைவுகூர்வது என்றால்? இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, அவர் உதிர்த்த அத்தனை தத்துவங்களும், இன்றும் உண்மையான உயிர்ப்புடன் வலம் வருகிறது என்றுதானே பொருள்.

எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, எங்கோ மறைந்து, இன்று உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும், சிவப்பு சட்டைகளில், தன் சிந்தனைகளை இறக்கிவைத்து, சிதைக்கப்படும் தொழிலாளர் வர்க்கத்தின், சிலுவைகளை உடைத்தெறிந்து, சிறப்பான தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும், ஒரு தலைவர்.

அவர் ஏன் இன்றும் தேவைப்படுகிறார்?
அவர் பெயர் சொல்லாமல் உலகில் ஒரு ஒற்றை ரூபாயும் ரூபாய்க்கும் மதிப்பு இருக்காது. ஒரு தொழிற்சாலையும் ஒருநாளும் இயங்காது ஒரு தொழிலாளியும் உறுதியாக போராட முடியாது.

என்ன செய்தார்? அவர் என்னதான் செய்தார்?
அவர் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை. ஒரு சிறிய நெருப்புப் பொறியை பற்ற வைத்தார். அவ்வளவுதான், உலகம் பற்றி எரிய, அந்த சிறு தீப்பொறி போதும்.

இன்று உலகம் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும், அதற்கான தீர்வுகளையும், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே, பொருளாதாரம் சார்ந்து, எந்த விஷயத்தையும் சிந்திக்க வேண்டும் என்றும். ஏன்? வரலாற்றைக் கூட, பொருளாதாரத்தின் பின்னணியில் இருந்துதான் பார்க்க வேண்டும் என்றும், அதாவது பொருள் உற்பத்தி, அந்தப் பொருளை உற்பத்தி செய்யும் தொழிலாளி, என்று பிரித்து பார்த்து, புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அதனை விவரமாக பகுத்துப் பார்க்க வேண்டும் என்று தெளிவாக சொல்லிக்கொடுத்த பொதுவுடமை தந்தை.

இன்றைய இந்திய பிரச்சினைகளுக்கு காரல் மார்க்ஸின் தீர்வு!
இந்தியாவில் இன்றைக்கு அரசு அறிவித்த, பெட்ரோல், டீசல் விலை உயர்வை எடுத்துக் கொள்ளலாம். சர்வதேச கச்சா எண்ணெய் விலை, 0 டாலருக்கும், குறைவாக சென்று விட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு, 30 அமெரிக்க டாலர்கள் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய், வெறும் 30 அமெரிக்க டாலர்கள் இருந்த நிலையில், அன்றைக்கு இருந்த மத்திய அரசு, சுமார் 40 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்தது. கலால் வரி உட்பட, மாநில வரிகள் உட்பட.

இன்றைக்கு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் பூஜ்யத்தில் விற்கப்படும் போது, எண்ணெய் வள நாடுகள், பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த வேண்டிய அவசியம், என்ன? அதாவது பொருளை உற்பத்தி செய்து, அந்தப் பொருள் சந்தைக்கு வந்து, அனைத்து மக்களின் கைகளிலும் கிடைத்து, அதில் வரும் லாபம், அந்த லாபத்தில் இருந்து கிடைக்கும் வரி அந்தந்த நாட்டு அரசுகளுக்கும், போய்க் கொண்டிருக்கிறது.

வரி வருமானம் மட்டுமே, ஒரு அரசு உயிர் வாழ முடியும் என்று, தவறாக கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய பொருளாதார மேதைகள். அப்படியல்ல, இந்த எண்ணத்தை, பல்வேறு தருணங்களில், பல்வேறு நாடுகள் முறியடித்து இருக்கின்றன. ஒரு அரசு, தன் மக்களிடம் கூடுமானவரை, கூடுமான வகையில், வரிகளை விதித்து, அவர்களை தூக்குக் கயிற்றில் கட்டி இறுக்கினால், வரியை கொடுத்து விடுவார்கள் என்று நினைத்தால், அதுவே அடி முட்டாள்தனம். வருமானம் இல்லை, அரசு கஜானா காலியாக இருக்கிறது. கடனில் மூழ்கி, அரசாங்கம் மட்டுமல்ல, அரசும் சேர்ந்து மூழ்கிவிடும். மக்கள் நடுத்தெருவில் நிற்ப்பார்கள்.

அரசு திவாலாகிவிடும், என்கிற கண்கட்டி வித்தை காட்டிக்கொண்டு, இந்த அரசியல்வாதிகள் செய்யும் அற்பத்தனமான இந்த செயல்பாடுகளை, நாம் கண்டிக்க வேண்டியிருக்கிறது. காரல் மார்க்ஸின் பார்வையில், இதை எடுத்துக் கொள்வோம். மக்களுக்குத் தேவையான அளவு மட்டுமே, உற்பத்தி செய்ய வேண்டும் என்று காரல் மார்க்ஸ் கூறுகிறார். அப்படி தேவையான பொருள்கள், தேவையான அளவு மட்டுமே, உற்பத்தி செய்யப்படும் போது அந்தப்பொருள்கள் மீதமாக இருப்பதில்லை. அதை கூவிக் கூவி விற்க வேண்டிய அவசியம் இல்லை. அது அந்தப் பொருள் எதுவாக இருந்தாலும், வீணாக போவதில்லை. அப்போது அப்படி என்றால்? நஷ்டமும் ஏற்படுவதில்லை.

சரி இன்றைக்கு ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் போன்ற நெருக்கடி கால கட்டங்களில், உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலையில், அரசுக்கு வரக்கூடிய வரியில் வருமானங்கள் இல்லையென்றால், அரசு இந்த நெருக்கடி காலங்களில், எப்படி செலவு செய்யும்? என்கிற கேள்விகள் எல்லாம் வரும் ஆனால்?

இதுபோன்ற நெருக்கடி காலங்களில், செலவு செய்வதற்கு என்று, வங்கிகளில், அதாவது ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன், கூடுதலாக கடன் பெற்று, செலவு செய்ய முடியும். வருமானங்களை வைத்துக்கொண்டுதான் செலவு செய்ய வேண்டும் என்றால்? அரசு எப்போதுமே செயல்பட முடியாது. அரசுக்கு தேவைப்படும் அவசர கால நிதி தேவைகளுக்கு, வங்கிகளிலிருந்து கடன் பெறும் நடைமுறை, காலம் காலமாக இருந்து வருகிறது. வட்டி இல்லாத இந்தக் கடனை அடுத்து வரும் காலங்களில், சரி செய்து கொள்ள வேண்டும் என்று, ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது.

அப்படி நெருக்கடியான காலங்களில் கூட, வரியை உயர்த்தி மக்களிடமிருந்து கொள்ளையடிக்கும் ஒரு போக்கு, (விலை உயர்வை இதை அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது) நெருக்கடி காலங்களில், பொருளாதாரம் முற்றிலுமாக தடைபட்டு, தொழிற்சாலைகள் இயங்க வில்லை. தொழிலாளர்களுக்கு சம்பளம் இல்லை. ஏன்? அரசு ஊழியர்களுக்கு கூட, முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, அன்றாட கூலி தொழிலாளிகளுக்கு, இன்றைக்கு எந்த ஒரு வருமானமும் இன்றி, வீட்டில் முடங்கியுள்ள நிலையில், விலையை உயர்த்துவது எப்படி சரியாக இருக்கும்? அப்படி பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தும்போது, அத்தியாவசியத் தேவைகளுக்காக, இயங்கும் வாகனங்களை இயக்கும் செலவு அதிகரிக்கும். அதன் மூலம், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும். அதன் மூலமாக, சாதாரண, சாமானிய மக்கள் ஏற்கனவே நிற்கதியாக, நடுத்தெருவில் நின்று, பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அவர்கள் மீது வெந்நீரை அல்ல, விஷத்தை கக்கியது போலவே இருக்கிறது.

விலை உயர்வை போன்ற முட்டாள்தனமான முடிவுகளை விடுத்து, கொஞ்சம் மக்கள் பார்வையில், மக்கள் தரப்பிலிருந்து, சிந்திக்க வேண்டும் என்றுதான் காரல் மார்க்ஸ் கூறுகிறார். இங்கே தான் நாம் காரல் மார்க்ஸின் கருத்துகளை சற்று கவனிக்க வேண்டும்.

மக்களின் தேவை என்ன? இன்றைக்கு சுமார் 40 நாட்களுக்கு மேலாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, அவர்களை முடக்கி வைத்த பிறகு, சம்பளமும், கூலிகளும், எதுவும் வழங்கப்படாத நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் பொருட்களை வைத்துக் கொண்டு, எத்தனை நாட்கள் உயிர் வாழ முடியும். அவருடைய குழந்தைகளுக்கு, எப்படி போதுமான உணவை அளிக்க முடியும்? என்று அரசு சிந்தித்து இருந்தால், இந்நேரம் அரசின் செயல்பாடுகள் வேறு விதமாக இருந்திருக்கும்.

அதையும் தாண்டி, செல்போன் கட்டணம், கேபிள் டிவி கட்டணம், கரண்ட் பில், வீட்டு வாடகை, கடன் வாங்கி இருந்தால் அதற்கான வட்டி, அத்தியாவசிய வீட்டுச் செலவுகள், மருந்து மாத்திரை செலவுகள், சில இடங்களில் குடிநீருக்கே பஞ்சம் என்கிற இடங்களில், குடிநீர் வாங்குவதற்கான செலவுகள், அதையும் தாண்டி இன்னும் சொல்லிமாலாது செலவுகள் இருக்கும் நிலையில், சாமானிய மக்களுக்கான வாழ்க்கையை, ஒட்டுமொத்தமாக வழித்து, குப்பைக் கூடையில் வீசி எறிந்துவிட்டு, வேடிக்கை பார்க்கும் அரசுக்கு எப்படி புரியும், இந்த சாமானிய மக்களின் வாழ்க்கையின் வேதனை.

அந்த மாபெரும் மேதையின் வார்த்தையில், ஒரு வார்த்தையை கேட்டாலே போதும், ஏன்? அரசு கடும் நிதி நெருக்கடியில் இருந்தாலும் கூட, இந்த அரசு, இந்த அரசாங்கம், அரசாங்கமாக மக்களால் மதிக்கப்பட வேண்டும் என்று சொன்னால், முதலில் அதற்கு மக்கள், மக்களாக இருக்க வேண்டும். மக்களை போராளிகளாக, அல்லது அதையும் தாண்டி சிந்திக்க வைத்தால், அரசுகள், அரசாங்கங்கள் நிச்சயம் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது இந்த அரசுகள் .

மக்களுக்காக நான், மக்களால் நான் என்று, வாய் நிறைய பொய்களை போட்டு, மென்று குழப்பி, மக்களின் முகத்தில், விழுந்து விடுகின்றன. ஆனால், மக்களுக்காக என்ன செய்தார்கள்? என்று பட்டியலிட்டுப் பார்த்தால், ஆயிரம் ரூபாய் 40 நாட்களுக்கு முன்பாக வீசி எறிந்தார்கள், அதைப் போன்ற ஒரு கொடூரம், எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. தேர்தல் காலங்களில் கூட, ஒரு வாக்காளருக்கு, 2000 முதல் 5 ஆயிரம் வரை, ஏன் சில இடங்களில் 10 ஆயிரம் கூட கொடுத்தார்கள்.

ஆனால் இன்று வாழ்க்கையே இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. யாருக்கு? எப்போது? கொரோனா வைரஸ் தாக்கும் என்று தெரியாத, ஒரு மிகக் கொடூரமான சூழ்நிலையில், நெருக்கடியில் வாழ்ந்து வரும் இன்றைக்கு, ஒரு மாதத்துக்கு குறைந்தபட்ச தேவையான, பத்தாயிரம் ரூபாய் இல்லாமல், வாழ்வது என்பது, மிகக் கடினமான விஷயம். இதை அரசாட்சி செய்பவர்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டுமா? என்ன? அப்படி ஒரு நிலையில், அரசுகள் என்ன செய்ய வேண்டும் சற்றே சிந்தித்தோமானால், காரல் மார்க்ஸ் சொன்ன ஒற்றைச்சொல் மந்திரம் “மக்கள்” “மக்கள் நலன்” அதுவே அரசு உயிர்வாழ, தேவையான உயிர்நாடி, இதை மறந்த அரசுகள், தூக்கி எறியப்படும் என்பதை, அழுத்தம், திருத்தமாக அன்றே சொன்னார் உலகப் பொது உடமை தந்தை காரல் மாக்ஸ்!

Today News