தமிழக அரசு அறிவிக்கும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்

 தமிழக அரசு அறிவிக்கும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்

covid-19-corona-virus-lock-down-chennai-police-attack

covid-19-corona-virus-lock-down-chennai-police-attack
covid-19-corona-virus-lock-down-chennai-police-attack

தமிழக அரசு அறிவிக்கும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தொடங்க விதைகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், மற்றும் இதர சேவைகள், திறக்க வேண்டும் என்பது குறித்து, மருத்துவ குழுவின் ஆலோசனைகள் முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட உள்ளதாகவும், அதன் அடிப்படையில், அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு ஆணை கட்டுப்பாடுகள் தொடங்க நினைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை தொழிற்சாலைகள், மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்படுவது, கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும் உறுதி செய்யப்பட்டதையடுத்து, காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சென்னை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர், ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, நிலையத்தில் பணிபுரியும் 30 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. இதில் உதவி ஆய்வாளர் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உதவி ஆய்வாளர் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல் நிலையம் மூடப்பட்டு இருப்பதோடு, உதவி ஆய்வாளர் குடும்பத்துடன் வசித்து வந்த, பரங்கிமலை காவலர் குடியிருப்பில் தனிமைப்படுத்த சுகாதாரத் துறையினர் முடிவு செய்திருக்கிறார்கள். மேலும் அவருடன் தொடர்பில் உள்ளவர்களையும், தனிமைப்படுத்த கூடிய பணியும் நடைபெற்று வருகிறது.

இதேபோல் திருவல்லிக்கேணி காவல் எல்லைக்குட்பட்ட, பெரிய தெருவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த, தமிழ் நாளிதழின் செய்தியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவம் குறித்த செய்திகளை வெளியிடும், பத்திரிக்கையில் பணிபுரியும் இவர், கொரோனா வைரஸ் தொடர்பான களநிலவரங்களை சேகரித்து வந்தார். கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட, செய்தியாளர் தங்கியிருந்த விடுதி அமைந்துள்ள பெரிய தெரு, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தனியார் தொலைக்காட்சிகள் பணிபுரியும் உதவி ஆசிரியர் ஒருவருக்கும்,கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானல் அருகே யூடியூப் சேனலை பார்த்து கள்ள சாராயம் தயாரித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பழனி சேர்ந்த 5 பேர், காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது தனி சாமி ஆகிவிடுவர் சாராயம் தயாரித்து ஊரணி வைத்திருந்தது தெரிய வந்ததைத் தொடர்ந்து கள்ளச்சாராயத்தை காவல்துறையினர் கைப்பற்றி அழித்தனர். இவர்கள் யூடியூப் சேனல் மூலம் கள்ளச்சாராயம் காய்ச்சுவது எப்படி என்பதை அறிந்து கொண்டு அதனை தயாரித்து தெரிவித்துள்ளனர்.

Today News