எம்எஸ் தோனியின் நாயகன் தற்கொலை

 எம்எஸ் தோனியின் நாயகன் தற்கொலை

BREAKING NEWS: Sushant Singh Rajput commits suicide in Bandra

BREAKING NEWS: Sushant Singh Rajput commits suicide in Bandra
BREAKING NEWS: Sushant Singh Rajput commits suicide in Bandra

BREAKING NEWS: Sushant Singh Rajput commits suicide in Bandra

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்எஸ் தோனி டி அண் டோல்டு ஸ்டோரி என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் சுஷாந்த் சிங் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுஷாந்த் சிங் ன் தற்கொலை செய்தி, திரைப்பட ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு விருதுகளைப் பெற்று, இளம் நாயகனாக, சாக்லேட் பாயாக வலம் வந்த சுஷாந்த், தனது நேர்த்தியான நடிப்பாலும், கவர்ந்திழுக்கும் கட்டுமஸ்தான உடலமைப்பு, துள்ளி விளையாடும் நடனத்தாளும், மிகப் பிரபலமாக அறியப்பட்ட நடிகர்.

சின்னத்திரையில் நாடகங்கள் மூலமாக 2008 ம் ஆண்டு அறிமுகமானாலும், 2013 ஆம் ஆண்டு கை போச்சே என்ற திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் பிரபலமாக அறியப்பட்டார்.

கடினமான பல போராட்டங்களை சந்தித்து, பல வெற்றிப்படங்களை கொடுத்த சுஷாந்த், அவரது திரை பின்னணி இல்லாத சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், இந்திய சினிமாவில் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சினைகளையும் எதிர்கொண்டு, வெற்றி வாகை சூடினார் என்பது மறுக்க முடியாத உண்மை.

சுஷாந்த் நடித்த அத்தனை படங்களும் மறக்காமல், மறுக்கமுடியாமல் விருது விழாவுக்கு படையெடுத்துச் செல்லும். வெற்றியோ, தோல்வியோ, திரைப்பட விருது விழா என்றால்? அங்கே சுஷாந்த்தின் திரைப்படம் திரையிடப்படும். அந்தவகையில் அவர் நடித்த படங்களும், அத்தனை பாலிவுட் திருவிழாக்களிலும், போட்டியிட்டு உள்ளது விருதும் கிடைத்துள்ளது. என்றால், சுஷாந்த்ன் நடிப்புக்கும்,அவரது திறமைக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே இதை பார்க்க வேண்டும்.

இரண்டு மாதங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலகம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் தொடங்கி, சின்ன சின்ன பெட்டி கடை வரை அனைவரும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில், திரையரங்கங்கள் மூடப்பட்டு, முற்றிலுமாக முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் பல்வேறு திரை பிரபலங்களும், என்ன செய்வது என்று தெரியாமல், விழி பிதுங்கி இருக்கும் இந்த நிலையில், திரை பிரபலங்களும் மாபெரும் நெருக்கடிக்கு உள்ளானார்கள் என்பதை மறுக்க முடியாது.

கொரோனா வைரஸின் தாக்குதல் காரணமாக திரைப்பட தொழிலாளர்களும் மிகப்பெரிய நெருக்கடிக்குள்ளான போது, திரைநட்சத்திரங்கள் அவர்களுக்கு உதவி செய்ததை நாம் நினைவில் கொள்ளலாம். இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு இடையே, மிகப் பிரபலமான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார் எனும் செய்தி, இந்தியா முழுவதும் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்க்கனவே சுஷாந்த் மன உளைச்சலில் இருந்தார் என்பதும், அதற்கான மருந்துகள் எடுத்துக் கொண்டார்என்று செய்திகள் வெளியாகி வண்ணம் உள்ளது. எப்படி இருந்தாலும்? சுஷாந்த் இன் மரணம் திரை பிரபலங்களின் மத்தியில் பெரிய அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

Today News