சென்னைக்கு தடை கொரோனா வுக்கு இதுதான் விடை???

 சென்னைக்கு தடை கொரோனா வுக்கு இதுதான் விடை???

BREAKING NEWS – covid-19 corona virus lackdown

BREAKING NEWS - covid-19 corona virus lackdown
BREAKING NEWS – covid-19 corona virus lackdown

BREAKING NEWS – covid-19 corona virus lackdown

பெருகிவரும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் மிகப் பெரிய அளவில் தொடர்ந்து வரும் நிலையில் வேகமாக முன்னேறி வரும் இந்தியா தற்சமயம் நான்காவது இடத்தில் உள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த மாதத்திற்குள் முதலிடத்தில் வந்துவிடும். அமெரிக்காவைத் தாண்டி, ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியும் பெரிய பாதிப்பை சந்தித்தன ரஷ்யாவும் இங்கிலாந்தும் கூட இதிலிருந்து தப்பவில்லை ஆனால் அவர்களெல்லாம் முறையாக கடைபிடித்து புறநா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொண்டனர் ஆனால் இந்தியாவில் விளக்கேற்றுவதும் போதுமென்று முட்டாள்தனமான விஷயங்களில் பல மடங்கு அதிகமாகி, அரசு கரோனா வைரஸ் உடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்கிற ஒரு கொடூரமான நிலைக்கு மக்களை தள்ளி இருக்கிறது.

இதுவரை எந்தவிதமான நிவாரணங்களையும் தராத இந்திய அரசு, தனியார் மருத்துவமனைகளை திறந்துவிட்டு, ஏகபோக பகல் கொள்ளைக்கு வழி வகுத்திருக்கிறது. கொரோனா வைரஸ் அறிகுறி இருந்து, ஒருவர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றால், ஒரு நாளைக்கு, சுமார் 23 ஆயிரம் ரூபாய் வரை கல்லா கட்டிவிட முடியும் இதில் மருந்து மாத்திரைகளும் ஊசியும் பரிசோதனைகளும் அடங்காது. ஆக மொத்தத்தில் கொரோனா வைரஸ் என்று ஒருவர் மருத்துவமனைக்கு சென்றால் அவரிடம் 50 ஆயிரம் ரூபாய் இல்லாமல் ஒரு நாளைக்கு தாக்கு பிடிக்க முடியாது. என்றால் மருந்து மாத்திரைகள் இல்லாத ஒரு நோய்க்கு, வைத்தியம் பார்ப்பதாக சொல்லி, அதற்கு கட்டணம் நிர்ணயம் செய்திருப்பது கொடுமையிலும் கொடுமை. உலகில் வேறு எங்கும் நடக்காத கொடுமை.

பக்கத்து மாநிலமான தெலுங்கானாவை எடுத்துக்கொள்வோம். ஆந்திராவை எடுத்துக் கொள்வோம். கொரோனா அறிகுறி தென்பட்ட நாளில் ஆரம்பித்து, கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வந்த போது ஆந்திர மாநில முதல்வர் உடனடியாக சுதாரித்துக்கொண்டு, மூடப்பட்டிருந்த அத்தனை தனியார் மருத்துவமனைகளையும் திறக்கச் சொல்லி உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி அத்தனை மருத்துவமனைகளையும் அரசு கையகப்படுத்திக் கொண்டு மருத்துவம் பார்க்க களம் இறங்கி விட்டது.

ஆனால் இங்கு தமிழ்நாட்டில் இது எல்லாம் செய்யத் தேவையில்லை. நடுத்தர குடும்பத்து மக்கள் பயன்பெறும் வகையில் கட்டணங்களை நிர்ணயம் செய்யாமல், இப்படி ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கும் அளவிற்கு, கட்டணம் நிர்ணயம் செய்திருப்பது ஏன் என்றுதான் கேட்க வேண்டி இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக கொரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனைகள் தமிழகத்தில் நான் நடந்து வருகிறது. அதிகபட்ச அரசு மருத்துவமனைகள் தமிழகத்தில் இருக்கிறது. தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் இருக்கிறார்கள். மருத்துவ உபகரணங்களில் பயன்பாட்டிலும், தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அப்படி இருக்கும்போது, இப்படி உயிர்க்கொல்லி நோயின் கோரத்தாண்டவத்தை தடுத்து நிறுத்தும் ஆற்றல், தமிழக அரசுக்கு தானே இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்திருக்கும் தனியார் மருத்துவர்கள், மருத்துவமனைகள், வைத்தியம் பார்க்க களம் இறங்கி விட்டால், சாதாரண சாமானிய மக்களுக்கு ஒரு நல்ல மருத்துவம் கிடைத்து விட முடியுமா? அரசு மருத்துவமனைகள், மருத்துவர்கள் உயிரை பணையம் வைத்து மருத்துவ சேவையை செய்து வருவது போல, தனியார் மருத்துவர்கள் செய்வார்களா? சாதாரண அறிகுறிகளுக்கு ஒரு கட்டணம், கடுமையான சுரத்திற்கு ஒரு கட்டணம், அவசர ஆபத்து நிலைகளுக்கு ஒரு கட்டணம், என்று சொல்லி அநியாய பகல் கொள்ளைக்கு அனுமதிப்பதை எந்த வகையில் பொறுத்துக்கொள்ள முடியும்.

இதுவரை மக்களுக்கு என்று எதையும் செய்யவில்லை என்று கேட்டால், கையில் பணமில்லை. டாஸ்மார்க் ஐ நம்பித்தான் ஒட்டுமொத்த அரசும் இயங்கும் என்று பட்டவர்த்தனமாக சொல்லுவது, பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? அரசின் கையில் இருக்கும் அத்தனை நிதிகளையும் திரட்டி, இருக்கும் அவசர நிலையை சரிசெய்ய வேண்டிய இருக்கும்போது, உபகரணங்களை வாங்கி குவிக்கும் அரசு, மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவும் அதற்கு ஆவன செய்யவும் களமிறங்கி இருக்க வேண்டியது அவசியம். ஆனால், அதையெல்லாம் விடுத்து, அவசர அவசரமாக, தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணத்தை நிர்ணயிப்பது, தனியார் மருத்துவ மனைகளின் எதேச்சதிகாரம் வழிவகுக்கும் தவிர, மக்களுக்கு அது நல்லது அல்ல.

இன்று மீண்டும் ஊரடங்கு உத்தரவு, சென்னை அதன் சுற்றுப்புற மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை முடக்குவது பற்றிய அறிவிப்பு செய்த போதே, இதுவரை இல்லாத அளவிற்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு ஊரடங்கை அறிவித்து, மீண்டும் ஒரு நெருக்கடி நிலையை உணராதவாறு செய்தது பாராட்டுக்குரியது. ஆனாலும், தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களான இந்த மைய மாவட்ட மக்களின், வாழ்வாதாரங்களை மீட்பதற்கு, தேவையான திட்டங்களை தீட்டுவதற்கு உங்களுக்கு கால அவகாசம் கிடைத்திருக்கிறது இதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Today News