பிகில் வெறித்தனம் வெளிவந்த தினம்

98 MILLION VIEWS ON YOUTUBE

தளபதி விஜய் நயன்தாரா யோகி பாபு
98 MILLION VIEWS ON YOUTUBE பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த பிகில் திரைப்படத்தின் இசையை, இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அமைத்திருந்தார். இந்தப்படம் எப்போதும்போல தளபதியின் தம்பிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, உலகம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. தமிழ் திரை உலகில், விளையாட்டு போட்டிகளை வைத்து, திரைப்படங்கள் தமிழ்நாட்டில் பெரிய அளவில் வெளிவந்தது இல்லை என்றாலும், அப்படி கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் குறிப்பாக இல்லை என்றாலும், பிகில் அதில் பிரமாண்டம்.

படம் முழுக்க திருப்புமுனைதான். அதில் அப்பா மகன் வேடத்தில் தளபதி இதுவரை நடித்ததில்லை. இதுவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகிய முக்கிய காரணம். இந்தப் படத்தின் பாடல்கள் பெரிய அளவில் சூப்பர் ஹிட்டாகி வெறித்தனமாக ரசிகர்களால் விரும்பப்பட்டு வருகிறது. அதில் தளபதியின் குரலில் வெளிவந்த வெறித்தனம் எனும் பாடல் இன்றுவரை நமது காதுகளில் ரீங்காரம் இட்டுக் கொண்டு இருக்கிறது. பாடலாசிரியர் விவேக் வரிகளில், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில், தளபதி விஜய் அவர்களின் தங்க குரலில், கர்ஜிக்கும், சென்னையில் பிறந்து வளர்ந்து வந்த கதாநாயகனின் கலக்கலான மிரட்டலான வரலாற்றை சொல்லும் பாடலாகவும், சென்னை இளைஞர்களின், வீரத்தை சொல்லும் கம்பீர பாடலாகவும் வெளிவந்து, இந்திய ரசிகர்கள் அனைவரின் மனதையும், கொள்ளை கொண்ட பாடல் இன்று வெளிவந்த தினம்.