ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்பா

 ஹிட் சினிமாஸ் ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  ரம்பா

happy birthday rambha

happy birthday rambha
happy birthday rambha

HBDRambha happy birthday Rambha

தமிழ்சினிமாவில் அதிரடியாக வலம் வந்த, நடிக்கத் தெரிந்த கவர்ச்சி நடிகைகள் சில பேர்தான். அதில் முக்கியமானவர் நடிகை ரம்பா. ஆடை அவிழ்ப்பு கலாச்சாரத்தில் வெற்றி பெற நினைக்கும் இளம் கதாநாயகிகளுக்கு ரம்பா ஒரு உதாரணம்.

நவரச நாயகன் கார்த்திக் உடன் ஜோடியாக உள்ளத்தை அள்ளித்தா திரைப் படத்தில் அறிமுகமானபோது தனது கட்டழகை காட்டி கவர்ச்சியில் கலக்கி, கட்டிளம் காளைகளை கட்டிப்போட்ட காந்தக் கண்ணழகி.

அறிமுகமான முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வெள்ளி விழா கொண்டாட, நம்பிக்கையான, ராசியான நாயகி என்று பெயரை சொந்தமாக்கிக் கொண்டார். அடுத்தடுத்து அஜித், விஜய், என்று இளம் நாயகர்களுடன் ஜோடிபோட்டு வலம் வந்து கொண்டிருக்க, தனக்கு நடிக்கவும் தெரியும் என்று, இடைஇடையே படங்களில் முத்திரை பதிக்கவும் தவறவில்லை. நடிகர் லிவிங்ஸ்டன் உடன் சுந்தர புருஷன் திரைப்படம் சத்தம் இல்லாமல் வெளிவந்து வெற்றிகரமாக வெள்ளிவிழாக் கண்டது. பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்ப, தனக்கு நடிக்கவும் தெரியும் என்று சொல்லாமல் சொல்லி அடித்தார் ரம்பா. அதன்பிறகு தொட்டதெல்லாம் பொன்னாகும் என்கிற கணக்குக்கு பிள்ளையார் சுழி போட, வெற்றிகரமாக 10 ஆண்டுகளை கடந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சத்யராஜ், முரளி, பிரபுதேவா, என்று அத்தனை கதாநாயகர்களுடனும் ஜோடியாக ஆட்டம் போட்டு சத்தமில்லாமல் தொழிலதிபரை மணந்து கொண்டு செட்டிலாகி விட்டார் இந்தக் கண்ணழகி. என்றாலும் தமிழ் சினிமா உள்ளளவும், ரம்பாவின் பெயர் நிலைத்து நிற்கும். இன்று பிறந்தநாள் காணும் நடிகை ரம்பா விற்கு ஹிட்ஸ் சினிமாஸ் இணையதளம் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Today News