கொரோனா வைரஸ் நிதி தளபதி காட்டிய தாராளம்

 கொரோனா வைரஸ் நிதி தளபதி காட்டிய தாராளம்

covid-19 corona virus donation frm vijay

covid-19 corona virus donation frm vijay
covid-19 corona virus donation frm vijay

உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ்க்கு இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒட்டு மொத்தமாக 20 லட்சத்திற்கும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் நோயின் தாக்குதல் குறைவாக தென்பட்டாலும், நாடு முழுவதும் பரவி விட்ட நிலையில், பாதிப்பு என்னவோ மிகக் கொடூரமாக இருக்கப்போகிறது.

கொரோனா வைரஸ் நிவாரணப் பணிகளுக்கு தேவைப்படும் நிதியை, தொழில் அதிபர்கள், பிரபலங்கள் கொடுத்தால் ஒழிய, அரசினால் மட்டும் சரி செய்து விட முடியாது. இந்திய அரசு ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வெளிநாடுகளுக்கும், உலக வங்கிக்கும் கடன் பட்டுள்ளது. கடந்த காலங்களில், வட்டியை கட்டவே முடியாமல் திக்கித் திணறி வரும் இந்திய அரசிற்கு, இதுபோன்ற இமாலய சோதனைகள் ஏற்படுத்தும், இக்கட்டான சமயங்களில், தொழிலதிபர்களும், திரைப்பட நட்சத்திரங்களும், தங்களால் இயன்ற உதவியை, செய்யும் பொழுது, சிறிதளவேனும் ஒரு ஆசுவாசத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், ஒரு மாதமாக, ஊரடங்கு உத்தரவினால் அடைபட்டுக் கிடக்கும், அத்தனை தொழிலாளர்களுக்கும், விடிவு காலத்தை ஏற்படுத்த வேண்டுமானால், அந்தந்தத் துறைசார்ந்த நிபுணர்கள், தொழிலதிபர்கள் ,பிரபலங்கள் முன்னணிக்கு வந்து, பங்களிக்க வேண்டும் என்று, பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரமிது. அப்படி திரைப்படத் தொழிலாளர்களுக்கும் இது சோதனை காலம் தான்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர், திரு ஆர் கே செல்வமணி அவர்கள், கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவை சமாளிக்க முடியாமல், அல்லல்படும் சினிமா தொழிலாளர்களுக்கு, சக நடிகர்கள் தாராளமாக நிதி தந்து, உதவி அவர்கள் வாழ்வில் உதவி செய்ய வேண்டும் என்று, வேண்டுகோள் விடுத்தா.ர் அதன் பிரகாரம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ், தல அஜித், ஐஸ்வர்யா ராஜேஷ், தனுஷ், சூர்யா, விஜய் சேதுபதி, சூரி, யோகிபாபு, பார்த்திபன், பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள், தங்கள் பங்குக்கு, நிதி உதவி மற்றும் அரிசி மூட்டைகளை வழங்கி உள்ளனர்.

அந்த வகையில் தளபதி விஜய் அவர்களும் நிதி உதவி செய்வார் என்று, எதிர்பார்த்து இருந்த நேரத்தில், தளபதியிடம் இருந்து எந்த அறிவிப்பும் வராததால் அவர்மீது பல்வேறு தரப்பினரும், பல்வேறு வகையில், விமர்சனங்களை வைத்துக் கொண்டே இருந்தனர். வழக்கம் போல எந்த விமர்சனத்திற்கும், பதில் தராத தளபதி, அமைதியாகவே இருந்தார்.

இந்நிலையில் அவர் நிதி அளிக்காததற்கு முக்கியமான காரணமாக சமீபத்தில் அவர் மீது நடத்தப்பட்ட, வருமான வரி சோதனையாக கருதப்பட்டது. அந்த சோதனையின் போது, தளபதி விஜயின் வீடுகளிலும், அலுவலகங்களிலும், அவரது தயாரிப்பாளர்களின் வீடுகளிலும், தயாரிப்பாளர்களின் நண்பரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும், சோதனை கடுமையாக நடத்தப்பட்டது. இப்படி மும்முனைத் தாக்குதலை எதிர்கொண்ட, தளபதியின் வீட்டில் இருந்து, ஒரு சின்ன ஆணியை எடுக்க முடியவில்லை. முறைப்படி சரியாக, கணக்கு காட்டி வரும் தளபதி, விஜயின் மீது, அவரது நற்பெயருக்கும், களங்கம் விளைவிக்கும் வகையில், நடத்தப் தாக்குதலை பற்றி வாய் திறக்கவில்லை. இதுவும் கடந்து போகும் என்று, தனது பாணியில் தன்னை எதிர்ப்பவர்களை, அணைவருக்கும் குட்டு வைத்தார்.

இதனால் செம கடுப்பில் இருந்த தளபதி, தமிழக அரசுக்கோ, அல்லது தொழிலாளர் நிதிக்கும், எதுவும் தர மாட்டார், என்று ஒரு தரப்பு சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், தனது பங்காக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை கொரோனா வைரஸ் நிதிக்காக, பல்வேறு தரப்புக்கள் அளித்துள்ளார். அதாவது தமிழக முதல்வரின் கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், பாரத பிரதமரின் கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாயும், திரைப்படத் தொழிலாளர் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாயும், கேரள முதல்வரின் கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாயும், ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநில முதல்வர்களின், கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு தலா 5 லட்ச ரூபாயும் அறிவித்து உள்ளார்
தளபதி.

கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு ஏற்கனவே அஜித் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயை, கொடுத்து இருப்பது நாமறிந்ததே அதைவிட அதிகம் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் என்பதெல்லாம் இல்லை. ஆனால் எந்த நிவாரண உதவியும், தளபதி செய்வதாக இருந்தால், அதை நேரடியாக, மக்களுக்கு செய்வார் என்று அனைவருக்கும் தெரியும். அந்த வகையில், இது எல்லாம் புறம் பேசுபவர்கள் வாயை அடைப்பதற்கு தான் என்பது, அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. அந்த வகையில் தளபதி செய்யக்கூடிய உதவி, தமிழ்நாட்டில் மக்களுக்கு நேரிடையாக சென்று சேரும் என்பது, தளபதியின் தம்பிகள் சொல்லிக்கொள்ளும் தாரக மந்திரம்.

Today News